சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்தி தேவி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். ராணி மேரி கல்லூரியில் பேராசிரியை பணியில் சேர்ந்த அவர், 1988 முதல் 1990-ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். 1992 முதல் 1998-ம் ஆண்டு வரை இவர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றினார். அதன்பின் 2002 முதல் 2005 ம் ஆண்டு வரை தமிழகத்தின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். குறிப்பாக 1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார். பணி ஒய்வுக்கு பின்னர் கற்றல் நலனுக்கான பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி தொடர்ந்து சேவையாற்றி வந்தார். தமிழக அரசு உருவாக்கி உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிலும் பங்களித்திருக்கிறார். இதுதவிர வசந்தி தேவி…
Author: admin
“தி கேர்ள்” என்று அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கதாபாத்திரம், தனது பெயரில் வாக்களிக்க பொதுமக்களை அழைத்தது: துபாய், மீரா, அல்லது லதிபா/ படம்: x முதல் வகையான முயற்சியில், துபாய் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மெய்நிகர் எமிராட்டி குடும்பத்தை வெளியிட்டுள்ளது, இது நகரத்தின் டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்துவதையும் அதன் ஸ்மார்ட் உருமாற்ற மூலோபாயத்தை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் துபாய் உருவாக்கியது, இந்த திட்டம் எமிராட்டி கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்ட ஊடாடும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது மற்றும் பழக்கமான, மனிதனைப் போன்ற கதைசொல்லல் மூலம் பரந்த பார்வையாளர்களுடன் இணைகிறது. குடும்பத்தின் முதல் உறுப்பினரான “தி கேர்ள்” அறிமுகத்துடன் இந்த வெளியீடு தொடங்கியது, மேலும் நவீன எமிராட்டி வீட்டை டிஜிட்டல் வடிவத்தில் கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் கதாபாத்திரங்களை வெளிப்படுத்த திட்டங்கள் நடந்து வருகின்றன.கருத்து: டிஜிட்டல் தூதர்களாக AI எழுத்துக்கள்டிஜிட்டல் துபாயின் புதிய முயற்சி முதல் AI- உருவாக்கிய “எமிராட்டி குடும்பம்” ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது, இது அரசாங்க…
71-வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘பார்க்கிங்’ படத்துக்கு 3 தேசிய விருதுகளும், ‘வாத்தி’ படத்தின் சிறந்த பாடல்களுக்கான இசைக்காக ஜி.வி.பிரகாஷுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்காக பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.‘வாத்தி’ படத்தில் நாயகனாக நடித்தவர் தனுஷ். மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “71-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘வாத்தி’ படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை வென்றுள்ள எனது சகோதரர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒரு சிறப்புப் பாராட்டு. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், அவரிடமிருந்து இன்னும் சிறந்தவை வரவில்லை என்பது எனக்குத் தெரியும். அவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படங்களுக்காக உற்சாகமாக காத்திருக்கிறேன். ‘பார்க்கிங்’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கு தகுதியான அங்கீகாரம். அவர் ஒரு பெரிய திறமைசாலி. இறுதியில் அவருக்கு உண்மையிலேயே தகுதியான பாராட்டைப் பெற்றதற்கு…
சென்னை: அரசு திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் ‘ஸ்டாலின்’ பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்புக்குரியது. மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் ‘ஸ்டாலின்’ என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குத்தானே தவிர, சுய விளம்பரத்துக்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும். மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று…
எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேசிய விருது வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி, அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலமாக ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.பாஸ்கர், ப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோருடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.…
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. நயினார் நாகேந்திரனை 6 முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த ஜூலை 24-ம் தேதி நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.…
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் நோயாளிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர். விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்எல்ஏக்கள் பொன்முடி, லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே மக்கள் வர தொடங்கினர். 15 வகை மருத்துவ சிகிச்சை என்பதால் ஏராளமானோர் திரண்டனர். புறநோயாளிகள் முன்பதிவுக்கு ஒரு அறை மட்டும் ஒதுக்கப்பட்டது. ஓரே அறையில் மக்கள் குவிந்ததால் காற்றின் சுழற்சி தடைப்பட்டு மூச்சு விடவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும், சுகாதாரத் துறை ஊழியர்களும் அவதிப்பட்டனர். இதனால் முன்பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருந்தனர். இதேபோல் ரத்த அழுத்த பரிசோதனை செய்யும்…
திருச்செந்தூர்: அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தினம் ஒரு பெயரை வைத்து மக்களை ஏமாற்றி மடைமாற்றம் செய்கின்றனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் திருச்செந்தூரில் இன்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியது: “திருச்செந்தூர் ஆன்மிக பூமி. விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், மீனவர்கள் அதிகம் வாழுகின்றனர். அவர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது வாழை விவசாயிகள் காற்றினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும். ஏழை மீனவர்கள், விவசாயிகளுக்கு இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு…
தூத்துக்குடி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் தொழில்முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி அகில இந்திய தொழில் வர்த்தக சங்கம், இந்திய தொழில் வர்த்தக சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், நாட்டுப்படகு மீனவர் சங்கம், சிறு வணிகர் சங்கம், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றம், வழக்கறிஞர்கள் சங்கம், புதியம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஸ்பிக் தொழிலாளர் நலச்சங்கம், வாழை கடலை விவசாயிகள் சங்கம், பேய்குளம் நிலசுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம்,…
நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான 9 ஆயுர்வேத பழக்கம்