திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திருநெல்வேலி மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு வரும் 22-ம் தேதி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கேட்டபோது, பதாகைகளை வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், பதாகைகள் வைக்க போலீஸார் அனுமதி மறுப்பதாகவும், அனுமதி கேட்க சென்ற நிர்வாகிகளை காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்து, மாநகர காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக…
Author: admin
உடற்பயிற்சி பயிற்சியாளர் எரிக் ராபர்ட்ஸ் கடுமையான உணவு முறை இல்லாமல் எடை இழப்புக்கான எளிய உத்திகளை அறிவுறுத்துகிறார். கலோரி எரிக்கவும் செரிமானத்தை அதிகரிக்கவும் உணவுக்குப் பிறகு நடைபயிற்சி, விழித்த இரண்டு மணி நேரத்திற்குள் புரத உட்கொள்ளலுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நீரேற்றமாக இருக்கும்போது திரவ கலோரிகளை வெட்டுவது ஆகியவை இதில் அடங்கும். மனம் நிறைந்த உணவு மூலம் கலோரி பற்றாக்குறையை உருவாக்குவது நிலையான எடை இழப்பை அடைவதற்கு முக்கியமானது. வகை 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார கவலைகளுடன் உடல் பருமன் மற்றும் அதிக எடை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, உலகில் 8 பேரில் 1 பேர் 2022 இல் உடல் பருமனுடன் வாழ்ந்து வந்தனர். உலகளாவிய சுமை துரிதப்படுத்துகிறது. ஆரோக்கியமான எடையை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் பல வாழ்க்கை முறை நோய்களை வளைகுடாவில்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களும் கலந்துகொண்டனர். யார் இந்த சிபிஆர்? – திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது அரசியல்…
பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில் இந்த முறை அறிமுகமாகிவிட்டது.எப்படி இருக்கும்? – மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளில் உண்மை என நம்பும்படி நிர்வாகச் சூழல் உருவாக்கப்பட்டு, அதில் உள்ள சவால்களை தீர்க்கும் திறமையின் அடிப்படையில் நீங்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவீர்கள். உதாரணமாக, விமான ஓட்டிக்கான உரிமம் வழங்கும் தேர்வின்போது பொய் விமானம் உருவாக்கப்பட்டு ‘simulation’ முறையில் தேர்வு நடத்தப்படும். அதன் மற்றொரு மேம்பட்ட வடிவத்தை மெய்நிகர் நேர்முகத் தேர்வு எனலாம். வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான நேர்முகத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு தொடங்கும்போது உங்களுக்கு ஒரு ‘ஹெட்செட்’ அளிக்கப்படும். அதன் வழியே உங்களுக்கான கட்டளைகள் அளிக்கப்படும். அப்போது நீங்கள் ஓர் அலுவலகத்தில் இருப்பது போன்ற சூழலை உணர்வீர்கள். ‘ஹெட்செட்’ என்பது உண்மையில் மெய்நிகர் சாதனம். ‘Oculus’, ‘HTC Vive’ போன்றவை…
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் மகத்தான வெற்றி பெறும் சூழ்நிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி பாஜக மாநாடு உருவாக்கும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள், வீரத்தின் விளைநிலம் திருச்செந்தூர் முருகனின் ஆட்சி ஸ்தலம் திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தேர்தல் பயிற்சி பெற்று ஆன்மிக அரசியல் ஆட்சி நடப்பதற்கு அடித்தளம் அமைக்கின்றனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத தீய சக்தி திமுகவை வீழ்த்தி கொடுங்கோல் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினை…
டினோஸ்போரா கார்டிஃபோலியா என்று விஞ்ஞான ரீதியாக அழைக்கப்படும் கிலோய், ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்ட மூலிகையாகும், இது ஏராளமான சுகாதார நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது. இந்த மூலிகையில் ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. மற்றும் அதன் நச்சுத்தன்மை, அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்தத்தை செலுத்தும் பண்புகளுக்கு எப்போதும் மதிப்பிடப்படுகிறது, இவை அனைத்தும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. கிலோய் ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறார், அதிகப்படியான யூரிக் அமிலம் மற்றும் உப்புகளை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் சிறுநீரக கற்களைத் தடுக்கிறது, கீல்வாதம் தொடர்பான சிக்கல்கள். அதன் ஒவ்வொரு பகுதியும் (தண்டு, இலைகள், வேர்) நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இதை உணவில் இணைப்பதற்கு முன்பு ஒரு தொழில்முறை மருத்துவ சுகாதார நிபுணருடன் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க டாலர் நிதியை தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பள்ளிகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.” என்று டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம்…
நோயாளிகளின் நோய் குறித்த விவரக்குறிப்புகளைப் பராமரிப்பது, பிரசவம் பார்ப்பதில் உதவி, குழந்தைகளை மருத்துவமனையில் இருக்கும்வரை பார்த்துக் கொள்வது என மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவதிலிருந்து அறுவைசிகிச்சை அரங்கில் மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பதுவரை நர்ஸ்கள் என்கிற செவிலியர்களுக்குப் பலதரப்பட்ட பணிகள் உள்ளன. பிஎஸ்சி நர்சிங் படிப்பு: மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காதவர்களுக்கான மற்றொரு வாய்ப்புதான் நர்சிங் என்று கருத வேண்டியது இல்லை. இரண்டு படிப்புகளும் மருத்துவத் துறை சார்ந்தவை என்றாலும்கூட, இரண்டுக்கும் தனித்தனித் திறமைகளும் குணநலன்களும் தேவை. நோயாளிகளுக்கு என்ன நோய் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மருத்துவரின் கடமை என்றால், நோயாளிகளைப் பரிவுடன் கவனித்துக்கொள்ள வேண்டியது செவிலியரின் கடமை. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதைப் போல, பிஎஸ்சி நர்சிங் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இப்படிப்புக்கு தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப் படுகிறார்கள். ஆண் செவிலியர்கள்…
மயிலாடுதுறை: தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவிததுள்ளார். மயிலாடுதுறையில் நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: மயிலாடுதுறை தொகுதி ஏற்கெனவே தேமுதிக கோட்டையாக இருந்தது. வரும் தேர்தலில் மீண்டும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றிபெறும். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் தொகுதியிலேயே கூட பேருந்து வசதிகள் இல்லை. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் திறந்ததைவிட வேறு பெருமை எதுவும் இல்லை. தேமுதிக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் அது நிச்சயம் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கு பெருமை மிகுந்ததாக இருக்கும். அவர் வெற்றி பெற அனைவரும்…
கும்குமாடி டெயிலம் சருமத்தை ஆழமாக வளர்ப்பதன் மூலமும், சுழற்சியை மேம்படுத்துவதன் மூலமும், அதன் இயற்கையான பிரகாசத்தை மேம்படுத்துவதன் மூலமும் செயல்படுகிறது.