புதுடெல்லி: மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தின்போது தெரிவித்தார். குடியரசு தலைவர் மற்றம் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தக்கு 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிப்பது தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடங்கி, இன்றும் நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆளுநர் பதவி என்பது ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கான ஒரு புனித இடம் அல்ல. மாறாக அது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒரு பாலம். அந்த வகையில், ஆளுநர்கள், மத்திய – மாநில அரசுகளுக்கு…
Author: admin
சென்னை: ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016- 21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில், தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு…
கோவை: ஜவுளி தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து வகையான பஞ்சுக்கும் 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பருத்தியை மையமாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்துறை சுமார் 35 மில்லி யன் மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. முக்கிய மூலப்பொருளான பஞ்சு பற்றாக்குறையை சமாளிக்க உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தது. தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31-ம் தேதி வரை சலுகை நீட்டிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி முதல் நீண்ட இழை பருத்திக்கு மட்டும் வரியில்…
ஆரோக்கியமான செரிமானம் மற்றும் சீரான கொழுப்பின் அளவைப் பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம், இருப்பினும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பெரும்பாலும் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் உயர்த்தப்பட்ட கொழுப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் அன்றாட உணவில் தினை சேர்ப்பது இந்த சிக்கல்களைச் சமாளிக்க இயற்கையான, பயனுள்ள வழியாகும். இந்த பண்டைய தானியங்கள் உணவு நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தவை, அவை மென்மையான குடல் அசைவுகளை ஆதரிக்கின்றன, செரிமான அச om கரியத்தை குறைக்கின்றன, மேலும் கொழுப்பை இயற்கையாகவே நிர்வகிக்க உதவுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைப் போலன்றி, தரிசு நிலங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இது இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் போது வயிற்றில் மென்மையாக்குகிறது. ஃபோக்ஸ்டெயில் முதல் விரல் தினை வரை, இந்த ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள் உணவு, கரிஸ்ஜ்கள் மற்றும் சிற்றுண்டிகளில் எளிதாக சேர்க்கப்படலாம். செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான கொழுப்பின் அளவை இயற்கையாகவே பராமரிக்கவும்…
புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 20-ம் நாளான இன்று வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், வழக்கம்போல் பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பின. அவர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகரின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அவையை நண்பகல் 12 மணிக்கு ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இதேபோல், மாநிலங்களவையிலும் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். மாநிலங்களவை மீண்டும் 12 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை…
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திருநெல்வேலி மண்டல அளவிலான பாஜக பூத் கமிட்டி மாநாடு வரும் 22-ம் தேதி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கேட்டபோது, பதாகைகளை வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், பதாகைகள் வைக்க போலீஸார் அனுமதி மறுப்பதாகவும், அனுமதி கேட்க சென்ற நிர்வாகிகளை காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்து, மாநகர காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக…
உடற்பயிற்சி பயிற்சியாளர் எரிக் ராபர்ட்ஸ் கடுமையான உணவு முறை இல்லாமல் எடை இழப்புக்கான எளிய உத்திகளை அறிவுறுத்துகிறார். கலோரி எரிக்கவும் செரிமானத்தை அதிகரிக்கவும் உணவுக்குப் பிறகு நடைபயிற்சி, விழித்த இரண்டு மணி நேரத்திற்குள் புரத உட்கொள்ளலுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நீரேற்றமாக இருக்கும்போது திரவ கலோரிகளை வெட்டுவது ஆகியவை இதில் அடங்கும். மனம் நிறைந்த உணவு மூலம் கலோரி பற்றாக்குறையை உருவாக்குவது நிலையான எடை இழப்பை அடைவதற்கு முக்கியமானது. வகை 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார கவலைகளுடன் உடல் பருமன் மற்றும் அதிக எடை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, உலகில் 8 பேரில் 1 பேர் 2022 இல் உடல் பருமனுடன் வாழ்ந்து வந்தனர். உலகளாவிய சுமை துரிதப்படுத்துகிறது. ஆரோக்கியமான எடையை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் பல வாழ்க்கை முறை நோய்களை வளைகுடாவில்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களும் கலந்துகொண்டனர். யார் இந்த சிபிஆர்? – திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது அரசியல்…
பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில் இந்த முறை அறிமுகமாகிவிட்டது.எப்படி இருக்கும்? – மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளில் உண்மை என நம்பும்படி நிர்வாகச் சூழல் உருவாக்கப்பட்டு, அதில் உள்ள சவால்களை தீர்க்கும் திறமையின் அடிப்படையில் நீங்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவீர்கள். உதாரணமாக, விமான ஓட்டிக்கான உரிமம் வழங்கும் தேர்வின்போது பொய் விமானம் உருவாக்கப்பட்டு ‘simulation’ முறையில் தேர்வு நடத்தப்படும். அதன் மற்றொரு மேம்பட்ட வடிவத்தை மெய்நிகர் நேர்முகத் தேர்வு எனலாம். வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான நேர்முகத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு தொடங்கும்போது உங்களுக்கு ஒரு ‘ஹெட்செட்’ அளிக்கப்படும். அதன் வழியே உங்களுக்கான கட்டளைகள் அளிக்கப்படும். அப்போது நீங்கள் ஓர் அலுவலகத்தில் இருப்பது போன்ற சூழலை உணர்வீர்கள். ‘ஹெட்செட்’ என்பது உண்மையில் மெய்நிகர் சாதனம். ‘Oculus’, ‘HTC Vive’ போன்றவை…
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் மகத்தான வெற்றி பெறும் சூழ்நிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி பாஜக மாநாடு உருவாக்கும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள், வீரத்தின் விளைநிலம் திருச்செந்தூர் முருகனின் ஆட்சி ஸ்தலம் திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தேர்தல் பயிற்சி பெற்று ஆன்மிக அரசியல் ஆட்சி நடப்பதற்கு அடித்தளம் அமைக்கின்றனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத தீய சக்தி திமுகவை வீழ்த்தி கொடுங்கோல் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினை…