மதுரை: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. மாநாடுக்கான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர், ரசிகர்கள் வருகையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்பு மேடையில் இருந்தபடி ‘ரிமோட்’ மூலம் 100 அடி உயரக் கம்பத்தில் கட்சியை கொடியை கட்சியின் தலைவர் விஜய் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,000 கிலோ எடை கொண்ட 100 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் தயாரிக்கப்பட்டது. நேற்று முதலே…
Author: admin
பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த விஷயங்களில் ஃபாஸ்டாக் ஒன்றாகும். இது ஒரு விஷயம், இது டோல் பூத் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பயணிகளுக்கு வாழ்க்கையை எளிதாக்குவது உள்ளிட்ட பல சிக்கல்களைத் தீர்த்தது. நெடுஞ்சாலைகளை மிகவும் மலிவு மற்றும் வசதியானதாக மாற்றிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ஆகஸ்ட் 15, 2025 அன்று வருடாந்திர பாஸை தொடங்கியது.ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் என்பது தனியார் வாகன உரிமையாளர்களை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் 3,000 டாலர் கட்டணத்திற்கு 200 கட்டணமில்லா பயணங்களை எடுக்க அனுமதிக்கும் ஒரு ப்ரீபெய்ட் வசதி ஆகும். பாஸ் ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும், எது முதலில் வந்தாலும்.ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸின் சில பிரதான காரணிகளைப் பார்ப்போம்:தகுதிவருடாந்திர பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனியார், வணிகரீதியான வாகனங்களுக்கு மட்டுமே. டாக்சிகள், பேருந்துகள், லாரிகள் போன்ற வணிக வாகனங்கள் இதைப் பயன்படுத்த முடியாது. பாஸ் நேரடியாக ஃபாஸ்டாக்…
மும்பை: மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதிலும், மழைப்பொழிவு குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கினர். மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், மும்பை, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், மும்பையில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு, தானே மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தானே மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். செவ்வாய்கிழமை காலை முதலான 24 மணி நேரத்தில் மும்பையின் சில பகுதிகளில் 250 மிமீ மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளான விக்ரோலியில் 262 மிமீ மழை பதிவாகி உள்ளது. கங்கன், காட்…
புதுச்சேரி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர். எதிரிகளை முறியடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, ”இந்திய நாட்டை சிறந்த வல்லரசாக ஆக்க வேண்டும் என்று பாடுபட்டவர் ராஜீவ் காந்தி. கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். நம் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள் என்றால் அது ராஜீவ் காந்தியின் சாதனை. இதையெல்லாம் மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இது தேர்தலின் முதல்கட்ட பணி. எந்தொரு கருத்து வேறுபாடும் இல்லாமல்…
தனிப்பட்ட எல்லைகளை அமைக்க வேண்டிய அவசியம்அன்பும் நெருக்கமும் எப்போதுமே எல்லாவற்றிற்கும் ‘ஆம்’ என்று சொல்வது என்று அர்த்தமல்ல. அதற்கு பதிலாக, ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது ஒருவரின் அமைதியைப் பாதுகாக்கவும், உறவுகளை வலுப்படுத்தவும், மரியாதை பெறவும் உதவுகிறது. வாழ்க்கையில் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டிய 10 முக்கியமான எல்லைகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியின் பக்ராபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு மீன் வளர்ப்பால் அதிக பலன் கிடைத்துள்ளது. அயோத்திக்கு அருகிலுள்ள பாராபங்கியின் பக்ராபூர் கிராமத்தை சேர்ந்த மீன் விவசாயி அஸ்லம் கான் (40). ஜாவேத் கான் என்பவரின் மகனான அஸ்லம், ஒரு பட்டதாரி. கடந்த 2014 இல் தனது மூதாதையரின் 8 ஏக்கர் நிலத்தில் வாழைப்பழ விவசாயத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வரை இந்தத் தொழிலில் செய்து வந்துள்ளார். துவக்கத்தில் வாழை பயிர் விளைச்சலால் அஸ்லமிற்கு சம்பாத்தியம் கிடைத்துள்ளது. ஆனால் பின்னர் அவரது வருமானத்தில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த அஸ்லம் கான், இறுதியில் வாழை விளைச்சலை மூடிவிட்டு, வேறு வாய்ப்புகளைத் தேடினார். இந்த தேடலில், அஸ்லமிற்கு, பாராபங்கியில் உள்ள கங்வாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆசீப் சித்திக் என்பவரின் மீன் பண்ணை கண்ணில் பட்டுள்ளது. இதை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றவருக்கு, மீன் வளர்ப்பில் ஆர்வம்…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஆக.21) ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்…
இளைஞர்களிடையே, குறிப்பாக 30 மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே வாய்வழி புற்றுநோய் நிகழ்வுகளில் இந்தியா கவலை அளிக்கிறது-இது ஒரு மக்கள்தொகை வரலாற்று ரீதியாக இந்த நோய்க்கு குறைந்த ஆபத்தில் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, உலகின் வாய்வழி புற்றுநோய் வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதியை இந்தியா கொண்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இப்போது 45 வயதிற்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 20% வழக்குகள் நிகழ்கின்றன, இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 5-10% முதல் கூர்மையான அதிகரிப்பு.ஆரம்பகால நோயறிதல் அரிதாகவே உள்ளது, ஏனெனில் எச்சரிக்கை அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, இதன் விளைவாக தாமதமான நிலை கண்டறிதல் மற்றும் வெற்றிகரமான சிகிச்சையின் குறைந்த வாய்ப்புகள் உள்ளன. இந்த பொது சுகாதார சவாலை எதிர்கொள்வதற்கு காரணங்கள், ஆபத்து காரணிகள் மற்றும் தடுப்பு உத்திகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.வாய்வழி புற்றுநோய்க்கான காரணங்கள் இளம் இந்தியர்களிடையே: புகைபிடிக்காத புகையிலை மற்றும் அரேகா நட்இளம் இந்தியர்களிடையே வாய்வழி புற்றுநோய்…
புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் பிரிவு 54ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடுமையான குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் முதல்வர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜம்மு…
சென்னை: வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும். பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது…