அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இதில் பிரதீப் ரங்கநாதன், “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார். அதன்…
Author: admin
சென்னை:காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதல்வர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வினவியுள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதல்வர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற…
புதுடெல்லி: அரசின் நலத் திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நீண்ட காலத்துக்கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜூலை 3-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்க இருக்கிறது, ஒடிசா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுகிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடு இன்றி லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரைகளில் பங்கேற்கின்றனர். இதன்மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு மேலோங்குகிறது. 2 புதிய சாதனைகள்: நமது நாட்டின் 2 புதிய சாதனைகளை உங்களோடு…
அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார். 2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன். தற்போது அல்போன்ஸ் புத்திரன் கதையில் நிவின் பாலி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது இணையவாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிரேமம்’. முழுக்க காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் தற்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி: புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவிடப்பட்டது. புதுச்சேரி பாஜகவில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமார் பதவியேற்க உள்ளார். இதைபோல ஏற்கெனவே நியமன எம்எல்ஏக்களாக இருந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிய நியமன எம்எல்ஏக்களாக முதலியார்பேட்டை செல்வம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், காரைக்கால் தொழிலதிபர் ராஜசேகர் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து புதிய தலைவரும் தேர்வு செய்யப்படவுள்ளார். கட்சியில் திடீரென்று செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்குவதற்கான கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வ கணபதி தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்எல்ஏகள் ஜான்குமார்,…
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜென் ஸ்டூடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கும் இப்படத்துக்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.நாகார்ஜுன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். 27 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களிலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய இயக்குநர் 6-வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மிஸ் சவுத் இந்தியா அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம்,…
மேலூர்: திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர் என மேலூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டப்பட்டி, சூரப்பட்டி, கருங்காலக்குடி, வஞ்சிப்பட்டி, குன்னங்குடிபட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவியினை அமைச்சர் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில்அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு திட்டம் மூலமும் மக்களுக்கு பயனுள்ள ஆட்சியினை முதல்வர் ஸ்டாலின் செய்துக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக மகளிருக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடனை தள்ளுபடி செய்ததுடன், அவற்றை திருப்பியும்…
‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. முரளி கிஷோர் இயக்கத்தில் அகில் அக்கினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘லெனின்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும், அதிலிருந்து அகில் பிறந்த நாளுக்கு டீஸர் ஒன்றும் வெளியிடப்பட்டது. தற்போது தேதிகள் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஸ்ரீலீலா.ஸ்ரீலீலாவுக்கு பதிலாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஸ்ரீலீலாவை வைத்து 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருப்பதால், பெரிதாக பாதிப்பில்லை என்கிறது படக்குழு. ஸ்ரீலீலா ஏன் இப்படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்பது குறித்து விசாரித்த போது, பவன் கல்யாண் நடித்து வரும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீலீலா தான் நாயகியாக நடித்து வந்தார். ஆனால், பவன் கல்யாண் அரசியலில் மும்முரமானதால் இதன் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதால், ‘லெனின்’ படத்திலிருந்து விலகி ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார்…
மேட்டூர்: மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளவான 120 அடியை எட்டியதையடுத்து, இன்று மாலை 6 மணி முதல் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 32,000 கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகவில் உள்ள அணைகள் நிரம்பியது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரகாலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 12-ம் தேதி அணையின் நீர்மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 6,339 கன அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி 92வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால்…
ஷெஃபாலி ஜரிவாலா மறைவை காட்சிப்படுத்தியது தொடர்பாக பத்திரிகையாளர்களை கடுமையாக சாடியிருக்கிறார் வருண் தவான். ‘பிக் பாஸ் 13’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வருவது, இறுதி சடங்குகள் உள்ளிட்ட அனைத்தையுமே மீடியாவில் காட்சிப்படுத்தினார்கள். இது முன்னணி நடிகர் வருண் தவானை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “மற்றொரு ஆன்மாவின் மரணத்தை முறையற்ற வகையில் மீடியாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒருவரின் துயரத்தை நீங்கள் ஏன் இப்படி காட்ட வேண்டும் என்று புரியவில்லை. அனைவருமே இதைப் பார்த்து மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள். இது யாருக்கு எப்படி பயனளிக்கிறது. மீடியாவில் உள்ள எனது நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஒருவருடைய இறுதிப் பயணத்தை காட்டும் விதம் இதுவல்ல” என்று தெரிவித்துள்ளார் வருண் தவான்.…