Author: admin

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி…

Read More

ஏரோபிக் செயல்பாடு, விறுவிறுப்பான நடைபயிற்சி போல எளிமையானது என்றாலும், மூளை-பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (பி.டி.என்.எஃப்) வெளியீட்டைத் தூண்டுகிறது, இது பெரும்பாலும் “மூளைக்கான உரம்” என்று அழைக்கப்படுகிறது. பி.டி.என்.எஃப் ஹிப்போகாம்பல் வளர்ச்சியை நேரடியாக ஆதரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீவிரத்தை விட நிலைத்தன்மை விஷயங்கள்; 30 நிமிட மிதமான இயக்கம் பெரும்பாலான நாட்களில் ஒரு மாதத்தில் குறிப்பிடத்தக்க அறிவாற்றல் மாற்றங்களைத் தூண்டுகிறது.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மூளை அல்லது மன ஆரோக்கியம் குறித்த எந்தவொரு கவலையும் கொண்ட ஒரு தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் வழிகாட்டுதலை எப்போதும் தேடுங்கள்.​

Read More

ஸ்பேஸ்எக்ஸ் 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய மைல்கல்லைக் குறித்தது, இந்த ஆண்டின் 100 வது பால்கான் 9 மிஷனை அறிமுகப்படுத்தியது, 24 அனுப்பியது ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள்கள் குறைந்த பூமி சுற்றுப்பாதையில். வெளியீடு நடந்தது வாண்டன்பெர்க் விண்வெளி படை அடிப்படை கலிபோர்னியாவில் ஆகஸ்ட் 18 அன்று மதியம் 12:26 மணிக்கு EDT (9:56 PM IST). பால்கான் 9 ராக்கெட், அதன் முதல் கட்ட பூஸ்டர் 1088 ஐ ஒன்பதாவது முறையாகப் பயன்படுத்தி, ஒன்பது நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக பூர்வாங்க சுற்றுப்பாதையை அடைந்தது மற்றும் சுமார் 50 நிமிடங்கள் கழித்து செயற்கைக்கோள்களை நிறுத்தியது. இந்த சேர்த்தல் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் விண்மீன் தொகுப்பை 8,100 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள அலகுகளாக விரிவுபடுத்துகிறது, மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய இணைய பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகிறது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் நடவடிக்கைகளின் நிறுவனத்தின் சாதனை படைத்த வேகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9…

Read More

பெங்களூரு: பட்டியல் சாதியினருக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பட்டியலின வலதுசாரிகள், பட்டியலின இடதுசாரிகள், தீண்டத்தக்க சாதியினர் என 3 உள்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நீதிபதி ஹெச்என் நாகமோகன் தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியலின சமூகத்துக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாகப் பிரித்ததை கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், பட்டியல் சமூகத்துக்கான 17 சதவீத இட ஒதுக்கீட்டில், பட்டியலின வலதுசாரிகளுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு, பட்டியலின இடதுசாரிகளுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் லம்பானி, போவி, கோர்மா, கோர்ச்சா போன்ற தீண்டத்தக்க பட்டியல் சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நாடோடி சமூகங்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் 101 சாதிகள் பலனடைந்து வருகின்றன. நாகமோகன் தாஸ் ஆணையத்தின் 1,766 பக்க அறிக்கை குறித்து…

Read More

காபுல்: ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்று அந்நாட்டின் வடமேற்கில் உள்ள ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 8.30) விபத்துக்குள்ளானது. லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 79 ஆப்கனியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கன் உள்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் மடீன் கானி இதனைத் தெரிவித்துள்ளார். சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லாததாலும், ஓட்டுநர்களின் கவனக்குறைவினாலும் ஆப்கனிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களில் ஈரானில் இருந்து 18 லட்சம் ஆப்கனியர்கள் வலுக்கட்டாயமாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல், கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தானில் இருந்து 1,84,459 பேரும், துருக்கியில் இருந்து 5,000 பேரும் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.…

Read More

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாளை நடைபெறவுள்ள பாஜக மண்டல பூத் கமிட்டி மாநாடு, அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர். அவருடைய தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது. சி .பி.ராதாகிருஷ்ணன் நேர்மையானவர். அவர் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவரை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசியிருக்கிறேன், கடிதமும் எழுதி இருக்கிறேன். தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சாரம், தமிழர் மரபு, தமிழ்,…

Read More

ராஞ்சி: ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூமில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத 50,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் அதிரடியாக நீக்கியுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கிழக்கு சிங்பூமில் மொத்தமுள்ள 1,64,237 செயல்படாத ரேஷன் கார்டுகளில், 50,323 பேரின் பெயர்கள் சரிபார்ப்பு இயக்கத்தின்போது நீக்கப்பட்டுள்ளன. 576 அட்டைதாரர்கள் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டாலும், 1,13,338 பேரின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. துணை ஆணையர் கர்ண் சத்யார்த்தியின் உத்தரவின் பேரில், சரிபார்ப்பைத் தொடர்ந்து பட்டியலில் இருந்து தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து 20,067 பெயர்கள் ஆதார் அட்டை எண்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் நீக்கப்பட்டது. இதுபோன்ற 2,500-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. 18 வயதுக்குட்பட்ட அல்லது 100 வயதுக்கு மேற்பட்ட 2,274 ஒற்றை உறுப்பினர் அட்டைதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் நீக்கியுள்ளதாகவும்,…

Read More

‘திடீரென எங்கிருந்து வந்தார் ஷுப்மன் கில்?’ என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். ஆம்! ஆசியக் கோப்பைக்கான டி20 தொடர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சூசகமாக முடிக்க, கம்பீரும் அகார்கரும் முடிவெடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஏன் சஞ்சு சாம்சன் பலிகடாவாக்கப்பட வேண்டும்? அதுவும் கில் தேர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகள் எழலாம். ஆனால், லாஜிக் அதுதான். நிச்சயம் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை. முதல் தெரிவு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா என்று அகார்க்கர் கூறிவிட்டார். கில், அபிஷேக் சர்மா தொடங்க, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் என்ற வரிசையில் நிச்சயம் சஞ்சுவுக்கு இடமில்லை. இப்படியிருக்க, யாரைத் திருப்தி செய்ய…

Read More

மதுரை: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. மாநாடுக்கான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர், ரசிகர்கள் வருகையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்பு மேடையில் இருந்தபடி ‘ரிமோட்’ மூலம் 100 அடி உயரக் கம்பத்தில் கட்சியை கொடியை கட்சியின் தலைவர் விஜய் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,000 கிலோ எடை கொண்ட 100 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் தயாரிக்கப்பட்டது. நேற்று முதலே…

Read More