புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் காரசாரமாக வாதிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். மேலும், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திலும் ஒப்புதல் அளிக்க வேண்டு மென கால நிர்ணயம் செய்தும் உத்தரவிட்டனர். இதையடுத்து, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அரசியலமைப்பு சட்ட ரீதியாக 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பி குடியரசுத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு விடை காணும் வகையில்…
Author: admin
சென்னை: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒடிசா பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முதல் உதவி அளித்து, பிரசவிக்க உதவினார். இதையறிந்த டிஜிபி சங்கர் ஜிவால் சம்பந்தப்பட்ட பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார். திருப்பூர் மாவட்டத்தில், வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸார் அப்பகுதியில் கடந்த 16ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியில் ஆயுதப்படை பெண் காவலர் கோகிலா என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஓன்று வந்தது. அதில், நிறைமாத கர்பிணியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி (25) என்ற பெண் பிரசவத்துக்காக கணவருடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண் கடுமையான பிரசவ வலியில் இருப்பதை கவனித்த பெண் காவலர் கோகிலா, ஒடிசா மாநில பெண்ணுக்கு உதவி செய்ய ஆட்டோவில் ஏறினார். வலி மிகவும் கடுமையானதாக மாறியதால் பெண் காவலர் விரைவில் செயல்பட்டு…
உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா, பலர் உணர்ந்ததை விட மிகவும் பொதுவானது, மேலும் இது பெரும்பாலும் அமைதியாக உருவாகிறது. ஆரம்பகால அறிகுறிகள் தாகம், சோர்வு அல்லது மங்கலான பார்வை போன்ற நுட்பமானதாக இருக்கலாம், மேலும் அன்றாட பிரச்சினைகளாக நிராகரிக்க எளிதானது. இருப்பினும், சிகிச்சையளிக்கப்படாதபோது, தொடர்ந்து உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தும், இது சிறுநீரக நோய், இதய பிரச்சினைகள் மற்றும் பார்வை இழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நீண்டகால சேதத்தைத் தடுப்பதற்கும் சிறந்த வழியாகும். கீழே உள்ளது 11 எச்சரிக்கை சமிக்ஞைகள் உங்கள் உடல் உங்கள் இரத்த சர்க்கரை மிக அதிகமாக இருக்கும் என்று உங்கள் உடல் கொடுக்கலாம்.11 அறிகுறிகள் உங்கள் இரத்த சர்க்கரை மிக அதிகமாக உள்ளது, நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாதுமனநிலை மோசமடைந்ததுஅமெரிக்க நீரிழிவு சங்கம் இரத்த சர்க்கரை அளவிற்கும்…
புதுடெல்லி: “குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாட்டின் அரியலமைப்பின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர். சித்தாந்த ரீதியாக இணையான பார்வையை கொண்டிருப்பவர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நேற்று (ஆக.19) அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் இன்று, அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் அதை பாதுகாப்பவர்களுக்கும் இடையே போர், சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி…
திருநெல்வேலி: தவெக மாநாடு அரசியலில் எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுமுகச்சாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் ஆகியோர் ஒண்டிவீரன் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “இந்திய சுதந்திரத்துக்காக போராடிய ஒண்டிவீரனின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவுகூராமல் இருக்க முடியாது. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பாளையங்கோட்டையில் மணிமண்டபம் கட்டிக் கொடுத்ததுடன், அவர் சார்ந்த சமூக மக்களுக்கு மூன்றரை சதவீத இடஒதுக்கீடு அளித்து பெருமை சேர்த்தார். அவர் வழியில் இன்றைய முதல்வரும்…
புகைப்படம்: evry.day கிளப் / இன்ஸ்டாகிராம் பெரும்பாலான மக்கள் வயதாகும்போது, வாழ்க்கையில் மெதுவாகத் தொடங்குகிறார்கள், அதுதான் சமூகமும் பெரும்பாலும் அவர்களிடம் கூறுகிறது- அவர்களின் உடல்களைச் செய்வதைத் தவிர்ப்பதற்கும், மேலும் ஓய்வெடுப்பதற்கும். உடற்பயிற்சி, குறிப்பாக வலிமை பயிற்சி, வயதான காலத்தில் நல்லதை விட அதிக தீங்கு செய்யக்கூடும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஆராய்ச்சி இதற்கு நேர்மாறாக காட்டுகிறது. இருதய சுகாதார ஆய்வில் இருந்து ‘உடல் செயல்பாடு மற்றும் வயதான பெரியவர்களில் ஆரோக்கியமான வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வில், உடல் செயல்பாடு பல ஆண்டுகால வாழ்க்கை மற்றும் சுய-அறிக்கை ஆரோக்கியமான வாழ்க்கையை கணிசமாக அதிகரிக்கிறது, குறிப்பாக வயதானவர்களிடையே. ரூத் என்ற 100 வயது பெண் இதற்கு ஒரு வாழ்க்கை சான்று!நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? அதிக புரதத்தை சாப்பிடுவது பதில் என்று அறிவியல் கூறுகிறதுஆகஸ்ட் 18 அன்று எவ்ரி.டே கிளப் பகிர்ந்து கொண்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஹோஸ்ட் ரியான் ஜேம்ஸ் 100…
புதுடெல்லி: “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு பலன் இல்லை என்பதை நேரு ஒப்புக் கொண்டார் ” என பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்பதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது. நாட்டை, ஜவஹர்லால் நேரு இரண்டு முறை பிரித்துவிட்டார். இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை வரையறுக்கபட்டபோது ஒரு முறையும், சிந்து நிதி நீர் ஒப்பந்தம் செய்த போது மறு முறையும் இந்த பிரிவினை நடைபெற்றது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் மூலம் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது. பிறகு இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலன் இல்லை என்பதை அவர் தனது…
சென்னை: சென்னை மாநகருக்குள் நுழைய கூடாது என பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி, அவரை ஏன் சென்னைக்குள் நுழைய தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கொளத்தூர் காவல் துணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸுக்கு சூர்யா பதில் அளித்திருந்த நிலையில், அவரை ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழைய கூடாது என காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நெடுங்குன்றம் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறையின் நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தும்…
பணத்திற்கு ஒரு உலகளாவிய மதிப்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அனைத்து நாணயங்களும் ஒரே எடையைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம். அமெரிக்க டாலர், யூரோ மற்றும் பவுண்ட் போன்ற சில நாணயங்கள் வலுவான மதிப்பைக் கொண்டிருக்கும்போது, பல காரணங்களால் மதிப்பை இழந்த மற்றவர்கள் உள்ளனர். இது பொருளாதார எழுச்சி மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக இருக்கலாம். ஆனால் பின்னர் லெபனான் பவுண்ட் மற்றும் ஈரானிய ரியால் (ஐஆர்ஆர்) போன்ற நாணயங்கள் உள்ளனஇது மிகவும் குறைவாக மதிப்பெண்கள் மற்றும் கிட்டத்தட்ட சர்வதேச மதிப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்த நாடுகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு சவால்களைக் கொண்டிருந்தாலும், அடிப்படை காரணங்கள் ஒரே மாதிரியானவை: அதிகப்படியான பணவீக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை, அதிக கடன் அல்லது நாணயங்களை குறைவாக வைத்திருக்க வேண்டுமென்றே கொள்கைகள் இல்லை. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஆறு நாணயங்கள் பலவீனமானவர்களாக இருப்பதற்காக தனித்து நிற்கின்றன (இவை அமெரிக்க டாலருக்கு எதிரான குறைந்த…
ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் முடியவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மூலம் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது மத்திய அரசு. இந்த மசோதாவை மக்களவையில், கடும் அமளி துமளிகளை மீறியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது, அந்த மசோதாவின் நகல்களை கிழித்து அவரது முகம் நோக்கி எறியப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த மசோதாவைப் பற்றியும், அதனை எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு ஆவேசமாக எதிர்க்கின்றன என்பது பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த மசோதாவின்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின் கீழும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு,…