லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சற்று அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். களநடுவர் முதலில் அவுட் கொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்தது. இதில் பந்து ஸ்டெம்புகளை தாக்குவது தெரியவந்ததை தொடர்ந்து ஜெய்ஸ்வால் வெளியேறினார். இதையடுத்து…
Author: admin
ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், நாய்களை கட்டுப்படுத்த நோயுற்ற நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இத்தெரு நாய்கள் சாலையோரங்களில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளைச் சாப்பிட கூட்டம், கூட்டமாகச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அப்போது, நாய்களுக்கு இடையில் ஏற்பட்டும் மோதல் காரணமாக கூட்டம் சாலையில் குறுக்கிடும்போது, இருசக்கர வாகனங்கள் மீது மோதி, வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து அடிபட்டுச் செல்வதும், நாய் கடிக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. மேலும், தெருக்களிலும் சுற்றும் நாய்கள் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களைத் துரத்திக் கடிப்பது அதிகரித்து…
நகர்ப்புற ஸ்குவாலர்வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்குக்கான மையமான லண்டன், மோசமான நெரிசலானது, அழுக்கு மற்றும் சுகாதாரமற்றது. பிளேஜஸ் தவறாமல் அடித்துச் சென்றது, மக்களை வீட்டிற்குள் இருக்கும்படி கட்டாயப்படுத்தியது மற்றும் பல்வேறு வணிகங்களை, குறிப்பாக திரையரங்குகளில் மூடுகிறது. நோய் காரணமாக, ஆயுட்காலம் குறைவாக இருந்தது மற்றும் இத்தகைய கடுமையான நகர்ப்புற நிலைமைகளில் உயிர்வாழ்வது வளம் மற்றும் பின்னடைவைக் கோரியது.
மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்ததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராக வாஞ்சிநாதனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர் இன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலைய அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. இதன் பின், செய்தியாளர்களிடம் வாஞ்சிநாதன் கூறியது: “உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து புகார் மனுவை பதிவு தபால் மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தேன்.…
டாக்டர் ஜூலி ஸ்மித் பொதுவான கவலைக் கோளாறு (GAD) குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், அதை சாதாரண கவலையிலிருந்து வேறுபடுத்துகிறார். காட் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அதிகப்படியான, தொடர்ச்சியான கவலையை உள்ளடக்கியது, குறைந்தது ஆறு மாதங்கள் நீடிக்கும் அமைதியின்மை, சோர்வு மற்றும் தூக்கக் கலக்கம் போன்ற அறிகுறிகள் உள்ளன. சிகிச்சை, ஆன்லைன் ஆதாரங்கள் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றின் மூலம் உதவியை நாடுவது, முறையான நோயறிதலைப் பொருட்படுத்தாமல், பதட்டத்தை நிர்வகிக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் தனிநபர்களை மேம்படுத்துகிறது. நீங்கள் நிறைய கவலைப்படுகிறீர்களா? வேலை, உறவுகள், கூட்டங்கள் மற்றும் உங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத விஷயங்களைப் பற்றி? எதையாவது பற்றி கவலைப்படுவது, நிச்சயமாக, வாழ்க்கையின் இயல்பான பகுதி. ஆனால் நீங்கள் அதிகம் கவலைப்படுவதைக் கண்டால், பெரும்பாலும் ஒரு காரணமின்றி கூட, அது இன்னும் அதிகமாக இருக்கும். மருத்துவ உளவியலாளரும் நியூயார்க் டைம்ஸின் விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் ஜூலி ஸ்மித், பொதுவான கவலைக் கோளாறு (GAD)…
மதுரை: கடலாடி ஓலையிருப்பு கண்மாய் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த பாஸ்கரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சாயல்குடி கிராமத்தில் 17.83 ஹெக்டேர் பரப்பளவில் ஓலையிருப்பு கண்மாய் உள்ளது. கண்மாய் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், பொது மயானம் ஆகியன அமைந்துள்ளன. கண்மாய் அருகே 300 குடும்பங்கள் வசிக்கின்றன. கண்மாய் நிரம்பினால் உபரி வெளியேறி மூக்கையூரில் கடலில் கலக்கும். தற்போது உபரி நீர் வெளியேறும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இதனால் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உபரி நீர் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.…
சில உணவுகளிலும், நமது சொந்த உயிரணுக்களிலும் காணப்படும் இயற்கையாக நிகழும் கலவை ஸ்பெர்மிடின், அதன் பரந்த அளவிலான வயதான எதிர்ப்பு நன்மைகளுக்கான அங்கீகாரத்தை விரைவாகப் பெறுகிறது. மூளை செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் இருந்து தோல், ஹார்மோன் சமநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது வரை, இந்த பாலிமைன் செல்லுலார் புதுப்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உடலின் சுய சுத்தம் செயல்முறையான தன்னியக்கத்தை செயல்படுத்துவதன் மூலம். இயற்கையான அளவுகள் வயதுக்கு ஏற்ப குறைவதால், உணவு அல்லது கூடுதல் மூலம் விந்தணுக்களை இணைப்பது நீண்ட ஆயுளையும் உயிர்ச்சக்தியையும் ஊக்குவிக்க ஒரு சக்திவாய்ந்த வழியை வழங்கக்கூடும். வளர்ந்து வரும் ஆய்வுகளின் ஆதரவுடன், ஸ்பெர்மிடின் இப்போது அழகான வயதான அறிவியலில் ஒரு முக்கிய வீரராகக் காணப்படுகிறது.ஸ்பெர்மிடின் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?செல்லுலார் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறைக்கு அவசியமான ஒரு பாலிமைன் கலவை ஸ்பெர்மிடின் ஆகும். இது…
தூத்துக்குடி: “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை வைக்கிறார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக தேசிய அளவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கவின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. தென்மாவட்டங்களில் நடந்திருக்கிற அத்தனை கொலைகளுக்கு பின்னாலும் கூலிப்படையினரின் கைவரிசை இருந்திருக்கிறது. சுர்ஜித்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை பார்க்கிறபோது, அவர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படத்தை போஸ்ட் செய்திருக்கிறார். நாயை பிடித்துக் கொண்டு விரைவில் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பதை போன்ற சிம்பாலிக் மெசேஜாக வெளிப்படுத்தி…
ஆகஸ்ட் 15 முதல் 17 வரை முசோரியுக்கு நீண்ட வார இறுதி பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில புதிய புதிய விதிகள் உள்ளன. அழகிய “ராணி ஆஃப் தி ஹில்ஸ்” முசோரி, ஆண்டு முழுவதும் பயணிகளை அதன் குளிர் காலநிலை மற்றும் அழகிய அழகைக் கொண்டு தொடர்ந்து ஈர்க்கிறது. எவ்வாறாயினும், சுற்றுலா எண்ணிக்கையின் கூர்மையான உயர்வு நகரத்தின் உள்கட்டமைப்பை மூழ்கடிக்கத் தொடங்கியுள்ளது, இது போக்குவரத்து ஸ்னார்ல்கள், நீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த எழுச்சியை பொறுப்புடன் நிர்வகிக்கும் முயற்சியாக, உத்தரகண்ட் அரசாங்கம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தங்குமிட வழங்குநர்கள் இருவருக்கும் புதிய டிஜிட்டல் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டாய ஆன்லைன் விருந்தினர் பதிவு முதல் முன்மொழியப்பட்ட வருகைக்கு முந்தைய QR குறியீடுகள் வரை, இந்த நடவடிக்கைகள் கூட்டக் கட்டுப்பாட்டை நெறிப்படுத்துவதையும், முசோரியின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு…
ராமநாதபுரம்: “அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ராமநாதபுரத்தில் இன்று பொதுமக்களிடையே பேசியது: “திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் ஆகியும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் அதிகளவு லஞ்சம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பு. டாஸ்மாக் ஊழல், யார் அதற்கு மந்திரியாக இருந்தது என்றால், 10 ரூபாய் பாலாஜி. அவர்தான் புதிய டெக்னிக் கண்டுபிடித்தார். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம் மேலிடத்துக்குப் போகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் கட்சி தேவையா? திமுக ஆட்சியில் எந்த…