குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் விவேக் ராமசுவாமி, ஓஹியோவில் கல்வி மீதான அரசியல் கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளார், ஜனநாயகக் கட்சியின் கவர்னர் வேட்பாளரும் முன்னாள் மாநில சுகாதார இயக்குநருமான டாக்டர் ஏமி ஆக்டன், COVID-19 பூட்டுதலின் போது மாநிலம் தழுவிய பள்ளி மூடல்களை ஆதரிப்பதன் மூலம் சமத்துவமின்மையை மோசமாக்குவதாக குற்றம் சாட்டினார். பரவலாகப் பகிரப்பட்ட ஒரு பிரச்சார வீடியோவில், ஜனநாயகக் கட்சியினரிடம் ‘கல்வியை சரிசெய்வதற்கு தீர்வு இல்லை’ என்று ராமசாமி வாதிட்டார், மேலும் இந்த பணிநிறுத்தம் கற்றல் இழப்புகளை ஏற்படுத்தியது, குழந்தைகள் ‘ஒருபோதும் முழுமையாக மீள மாட்டார்கள்’, குறிப்பாக பின்தங்கிய சமூகங்களில்.ராமசாமி பூட்டுதல் மூடல்களை விரிவுபடுத்தும் சமத்துவமின்மையுடன் இணைக்கிறார்ராமஸ்வாமியின் விமர்சனம், மார்ச் 2020 இல், ஓஹியோ முழுவதும் தனிப்பட்ட முறையில் கற்றலை நிறுத்தி வைப்பதில் கவனம் செலுத்துகிறது, இது தொற்றுநோயின் ஆரம்பகால பரவலின் போது செயல்படுத்தப்பட்ட முடிவு. தொலைதூரப் பள்ளிக் கல்வியின் போது வாசிப்பு மற்றும் கணித செயல்திறன் குறைவதைக் காட்டும் ஆராய்ச்சியை…
Author: admin
கேரளாவில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 ஒன்றிய பஞ்சாாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் என 1,200 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மொத்தம் 23,612 வார்டுகள் உள்ளன.இதை கருத்தில் கொண்டு கேரள மாநில தேர்தல் ஆணையம், டிச.9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 9ம் தேதியும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11ம் தேதியும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.13-ம் தேதியும், தேர்தல் முடியும் கடைசி தேதி டிச.18-ம் தேதி என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், மத்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 659 பேருக்கு முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. தற்போது, யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பயிற்சியாளர் குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனை 9-ம் இடத்தில் ராஜஸ்தான் அணி நிறைவு செய்தது. இதையடுத்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே வசம் டிரேட் செய்தது ராஜஸ்தான் அணி. அதேநேரத்தில் ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணி வாங்கி உள்ளது. வரும் சீசனை முன்னிட்டு அடுத்து மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து, அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அத்தகைய திறன்களைக் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு இங்கு கொண்டு வருவதே அதிபரின் தொலைநோக்குப் பார்வை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு பயிற்சியளித்த பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லலாம். அதன்பிறகு அமெரிக்க தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு பொறுப்பேற்பார்கள்.நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு கப்பல்கள் அல்லது செமி கண்டக்டர்களை உருவாக்கவில்லை. எச்-1பி விசா திட்டத்துக்கான ட்ரம்ப்பின் புதிய அணுகுமுறை, முக்கியமான தொழில்களை அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைப்பதற்குமான முயற்சி. அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக சொல்லியுள்ளார். இது வலுவான வர்த்தகக் கொள்கையின் நன்மைகளை குடும்பங்கள் உணர வைக்கும் செயல்.” என்று அவர் கூறினார்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாகவே அங்கப்பிரதட்சண டோக்கன் தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்படும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் நவம்பர் 17 முதல் 25-ம் தேதி வரை கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதற்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்து கொண்டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
வரும் 21-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22, 23-ல் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 23-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 50 ஆண்டு கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டையின் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ளதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை ஏற்றம் கண்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (பைசாவில்): சென்னை 660, பர்வாலா 621, பெங்களூரு 645, டெல்லி 660, ஹைதராபாத் 605, மும்பை 670, மைசூர் 610, விஜயவாடா 625, ஹொஸ்பேட் 585, கொல்கத்தா 685. இதேபோல,பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.112 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
