அம்லா, அல்லது இந்திய நெல்லிக்காய், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பரவலாக கொண்டாடப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், தோல் மற்றும் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை ஆகியவற்றின் புகழ்பெற்ற நன்மைகளுக்காக இது பொதுவாக பழச்சாறுகள், கூடுதல், ஊறுகாய் மற்றும் பொடிகளில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், அம்லா அனைவருக்கும் பொருந்தாது. சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் ஒரு ஆய்வின்படி, AMLA இன் பயோஆக்டிவ் சேர்மங்களைக் கொண்டுள்ளது, அவை உணர்திறன் வாய்ந்த நபர்களில் ஒவ்வாமைகளாக செயல்படக்கூடும், அரிப்பு, வீக்கம் அல்லது தோல் எரிச்சலைத் தூண்டும். அதன் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நிலைமைகள் அல்லது உணர்திறன் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் AMLA அறிகுறிகளை மோசமாக்கும் அல்லது சிகிச்சையில் தலையிடக்கூடும்.அம்லா சாப்பிடக்கூடாது1. குறைந்த இரத்த சர்க்கரை (இரத்தச் சர்க்கரைக் குறைவு) உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க…
Author: admin
புதுடெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு குறித்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, கொடூரமான மசோதா என்று விமர்சித்துள்ளார். ஆனால் மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் கூறும்போது, ‘‘நீங்கள் 30 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொது அறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறு இருப்பதாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான். குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆகையால், விவாதத்தை நடத்துவோம்’’ என்றார். திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர், அவ்வப்போது காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின்…
புதுடெல்லி: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 29-ம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 31-ம் தேதி ஜப்பானுடனும், செப்டம்பர் 1-ம் தேதி கஜகஸ்தானுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டிராக் பிளிக்கரான ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர்கிறார். நடுவரிசை வீரர் ரஜிந்தர் சிங், முன்கள வீரர்களான ஷில்லானந்த் லக்ரா,…
திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறிய தெரு நாய், காப்பாற்றச் சென்ற பாட்டி யையும் கடித்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்தவர் அபுதாகிர். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுல்தான்பீவி(26). இவர்களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. சுல்தான் பீவி, தனது தாய் மல்லிகா பீவி(44) மற்றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேலகொண்டாழி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுல்தான் பீவி, வீட்டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தார். மல்லிகா பீவி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார். திடீரென வீட்டுக்குள் புகுந்த ஒரு தெரு நாய், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விக்கொண்டு ஓடியது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த மல்லிகா பீவி,…
புதுடெல்லி: இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடி மதிப்பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்படையில் உள்ள பழைய மிக் -21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. விமானப்படையில் ஏற்கெனவே 40 தேஜஸ் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்பின்பு ரூ.48,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் மார்க் 1ஏ ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இந்த விமானங்களுக்கான இன்ஜினை வழங்குவதில், அமெரிக்கா தாமதம் செய்ததால், இதன் விநியோகம் குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. இதுகுறித்து விமானப்படை தளபதி ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். அமெரிக்காவிடம் இருந்து விமான இன்ஜின் வந்ததும் தேஜஸ் போர் விமானங்கள் விநியோகிக்கப்படும் என எச்ஏஎல் நிறுவனம் உறுதியளித்தது. தேஜஸ் போர் விமானங்களின் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலும், ஏச்ஏஎல் நிறுவனத்தின் உள்நாட்டு…
ஆப்பிள் சாறு பெரும்பாலும் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகக் கருதப்படுகிறது, ஆனால் அதிகப்படியான நுகர்வு மறைக்கப்பட்ட சுகாதார அபாயங்களைக் கொண்டிருக்கலாம். இது இயற்கை சர்க்கரைகளையும் நீரேற்றத்தையும் வழங்கும் அதே வேளையில், முழு ஆப்பிள்களுக்கும் பதிலாக அதை நம்பியிருப்பது செரிமானம், சிறுநீரகங்கள், இரத்த சர்க்கரை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். அதிகப்படியான ஆப்பிள் சாறு குடிப்பது இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும், பல் சிதைவை ஊக்குவிக்கும், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும், எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களில் குறையும். இந்த சாத்தியமான பக்க விளைவுகளைப் புரிந்துகொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் போது ஆப்பிள் சாற்றை மிதமாக அனுபவிக்க உதவும்.ஆப்பிள் சாற்றின் 6 பக்க விளைவுகள்இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதுNIH இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆப்பிள் சாறு பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் சிலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, இது வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும்…
புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஏர் இந்தியா, இண்டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்டர்ன் விமானங்கள் இயக்கப்பட்டன. அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாடுகளிடையே சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து கை கலப்பில் ஈடுபட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் சச்சரவு ஏற்பட்டது. இதனால் இந்தியா – சீனா நேரடி விமானப் போக்குவரத்து நடைபெறவில்லை. இந்நிலையில், சீனா, இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகபட்ச வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளன. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நேற்றுமுன்தினம்…
துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பருக்கு பிறகு தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடங்கள் பின்தங்கி முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். டாப் 10-ல் குல்தீப் யாதவை தவிர இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.…
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் தொடர்பான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார். ஆயுதம் தாங்கிய வீராங்கனை போல அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘அவதார்’ போன்ற வேறு ஒரு பிரபஞ்சம் உட்பட இரண்டு தனித்துவமான உலகில் இதன் கதை நடக்கிறது என்கிறார்கள்.
சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1996 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 10-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் ஆன் லைன் விண்ணப்பத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல விண்ணப்பதாரர்கள் தேர்வு மையம் மாற்றம், சான்றிதழ் விவரங்களில்…