Author: admin

தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் தற்போது குறுவை, சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நடவுபு் பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, சம்பா பருவத்துக்கு 9.70 லட்சம் ஏக்கர் திட்டமிட்டு நாற்றங்கால் தயாரிப்பும், நடவும் ஆங்காங்கே செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெற்பயிருக்கு தேவையான உரங்களை இலைவழியாக வழங்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் தற்போது ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.450 வீதம் வாடகை வசூலிக்கும் தனியார் ட்ரோன் இயக்குபவர்கள், 10 ஏக்கருக்கு மேல் இருந்தால் வயலுக்கு வந்து நேரடியாக பார்வையிட்டு, ட்ரோன் மூலம் மருந்துகளை தெளித்து வருகின்றனர். ட்ரோன் மூலம் தெளிப்பதால் நெற்பயிருக்கு இலைவழியாக மருந்துகள் சீராக கிடைக்கின்றன. இதனால் பயிர்கள் நன்றாக வளரவும், அதே நேரத்தில் குருத்துப் பூச்சிகள், கருப்பு வண்டுகள், ஆணைக் கொம்பன் உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்துக்கு மருந்துகளை வாங்கி, அதை கை…

Read More

சுஹானா கான் தனது சகோதரர் ஆரியின் இயக்குனரின் அறிமுகத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தோற்றத்தை வெளிப்படுத்தினார், இது ஒரு டோல்ஸ் & கபானா குழுமத்தைக் காட்டியது, இது பெண்மை மற்றும் நவீன கவர்ச்சி. கிளாசிக் ஆபரணங்களுடன் ஜோடியாக அவரது மலர் கோர்செட் டாப் மற்றும் சாடின் பாவாடை, சிரமமின்றி பாணியைப் பற்றிய தனது புரிதலை நிரூபித்தன. சுஹானாவின் தோற்றம் தனது சகோதரரின் சாதனையை கொண்டாடியது, அதே நேரத்தில் ஒரு பேஷன் ஐகானாக தனது சொந்த நிலையை உறுதிப்படுத்தியது. உங்கள் சகோதரர் தனது இயக்குனரை அறிமுகப்படுத்தும்போது, ​​கவனத்தை அவர் மீது மட்டும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும், அது முழு குடும்பத்திலும் உள்ளது. புதன்கிழமை பாலிவுட்டின் பா ** டி.எஸ். ஷாருக் கான், க au ரி கான் மற்றும் ஆரிய கான் ஆகியோர் தங்கள் சொந்த வலுவான பாணி அறிக்கைகளை வெளியிட்டாலும், சுஹானாவின் ஆடை தூய டோல்ஸ் வீடா.இந்த சந்தர்ப்பத்திற்காக, சுஹானா ஒரு…

Read More

வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார். இதன் நிமித்தமாக அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது உக்ரைன். மூன்றரை ஆண்டுகளாக போர் நீடிக்கும் நிலையில், இனி உக்ரைனுக்கு வான்வழி பாதுகாப்பில் மட்டுமே உதவி என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். கீவ் (உக்ரைன் தலைநகர்) பாதுகாப்புக்காக இனியும் அமெரிக்கா ‘பிளாங் செக்’ எழுதிக் கொண்டிருக்காது என்று…

Read More

Last Updated : 21 Aug, 2025 01:17 PM Published : 21 Aug 2025 01:17 PM Last Updated : 21 Aug 2025 01:17 PM எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித் சார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில், ”அஜித் சார் பிறந்த நாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றி இரண்டுக்குமான கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. எனக்கு ‘தீனா’ படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வழங்கியவர் அஜித் சார். அதன் மூலமாகவே ஆமிர்கான் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லாம் கிடைத்தது. எனது வேகமான வளர்ச்சி அஜித் சாரால் மட்டுமே நடந்தது” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தினை இயக்கி…

Read More

சென்னை: ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், சராசரியாக ஒரு கி.மீக்கு ரூ.195 கோடி செலவாவதாகவும் தமிழக அரசால் கணக்குக் காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வழக்கமாக இத்தகைய மேம்பாலங்களை அமைப்பதற்கான செலவை விட திட்ட மதிப்பீடு 50% கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை மொத்தம் 3.21 கி.மீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்டச் சாலை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.621 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.…

Read More

மழைக்காலம் மழை மற்றும் பசுமையான பசுமையுடன் தோட்டங்களை புதுப்பிக்கிறது, ஆனால் இது பாம்புகள், பல்லிகள் மற்றும் கெக்கோஸ் போன்ற தேவையற்ற ஊர்வனவற்றையும் ஈர்க்கிறது. இந்த குளிர்ந்த இரத்தம் கொண்ட உயிரினங்கள் பெரும்பாலும் கனமழை போது சூடான, ஈரமான தோட்ட இடைவெளிகளில் தங்குமிடம் தேடுகின்றன, எதிர்பாராத சந்திப்புகளின் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. மழைக்காலத்தில் உங்கள் தோட்டத்தைச் சுற்றி அதிகமான ஊர்வனவற்றை நீங்கள் பார்த்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை. உயரமான புல், நிற்கும் நீர் அல்லது உணவு ஆதாரங்கள் போன்ற ஊர்வனவற்றை எதை ஈர்க்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவற்றை நிர்வகிப்பதற்கான முதல் படியாகும். பாதுகாப்பான, இயற்கை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், செல்லப்பிராணிகள், குழந்தைகளைப் பாதுகாக்கும் போது, ​​சுத்தமான, பாதுகாப்பான வெளிப்புற இடத்தை பராமரிக்கும் போது ஊர்வனவற்றை உங்கள் தோட்டத்திலிருந்து விலக்கி வைக்கலாம்.பருவமழையின் போது தோட்டங்களில் பொதுவான ஊர்வனமழைக்காலத்தில், ஊர்வன பெரும்பாலும் வறண்ட, தங்குமிடம் பகுதிகளை பாதுகாப்பாக இருக்கவும், இரையை வேட்டையாடவும் தேடுகின்றன. நீங்கள் காணக்கூடிய சில…

Read More

புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு இன்று காலை சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் நிலவும் அரசியல் பரபரப்பைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?: இசட் பிரிவு பாதுகாப்பு என்பது மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றாக உள்ளது. அருகில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், இடத்துக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், வாகனம் மற்றும் துணை வாகனங்களை…

Read More

மாஸ்கோ: இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார ஒத்துழைப்புக்கான இந்தியா – ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான ஆணையத்தின் 26-வது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷ்ய முதல் துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் தலைமையிலான குழுவுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்ததை அடுத்து, பிற நாடுகளுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பின்னணியில், மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.…

Read More

இணையத்தில் எழுந்த கிண்டல் தொடர்பாக நாக வம்சி பதிலடிக் கொடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் நாக வம்சி. இவரது அதிரடியான கருத்துகளுக்கு எப்போதுமே இணையத்தில் பெரும் ரசிகர்கள் உண்டு. அதே வேளை அவருடைய கருத்துகளை கிண்டல் செய்பவர்களும் உண்டு. சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளியான ‘கிங்டம்’, விநியோகஸ்தராக வெளியிட்ட ‘வார் 2’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இந்த இரண்டு படங்கள் வெளியீட்டு சமயத்தில் நாக வம்சி பேசிய விஷயங்கள் யாவுமே இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகின. மேலும், நாக வம்சியும் இணையத்தில் இருந்து சில நாட்களுக்கு விலகியே இருந்தார். இதனை வைத்து நாக வம்சி திரையுலகில் இருந்து விலகப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள், கிண்டல்கள் பரவின. இது தொடர்பாக நாக வம்சி, “என்னை மிகவும் மிஸ் பண்ற மாதிரியே தெரிகிறது. வம்சி இது, வம்சி அது கதைகள் ஓடிக் கொண்டே இருக்கிறது. பரவாயில்லை. இணையத்திலும் நல்ல…

Read More

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால…

Read More