ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசி உள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்றும் அவர் கூறி வருகிறார். அவர் இதுவரை எந்த தேர்தலையும் சந்தித்தது இல்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என நினைக்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா என சிந்தித்து பார்க்க வேண்டும். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் பரவுகிறது. அவர் எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும்…
Author: admin
நாம் எழுந்த தருணத்தில் நாம் சாப்பிடுவது அல்லது குடிப்பது என்னவென்றால், நம் செரிமான அமைப்பு நாள் முழுவதும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பாதிக்கும். காலையில் வயிறு மிகவும் உணர்திறன் கொண்டது, ஏனெனில் வயிற்றின் புறணி உடையக்கூடியது மற்றும் வயிற்று அமிலங்கள் ஏற்கனவே இயற்கையாகவே செயல்பாட்டில் உள்ளன. ஒருவர் எழுந்திருக்கும்போது தவறான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் வாழ்நாள் முழுவதும் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சில காலை ஸ்டேபிள்ஸ் சத்தானதாக இருக்கும்போது, வயிறு காலியாக இருக்கும்போது அவை சிறந்த வழி அல்ல. காலையில் தவிர்க்க மூன்று உணவுகளைப் பார்ப்போம், ஏன்.டாக்டர் சுபம் வத்ஸ்யா, சீனியர் ஆலோசகர்-காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட், இந்த முதல் 3 உணவுகளை எடுத்துக்காட்டுகிறார், இது எங்கள் சீர்குலைக்கக்கூடிய குடல் ஆரோக்கியம் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால்.உங்கள் குடல் ஆரோக்கியத்தை நச்சுத்தன்மையாக்க ஐந்து பயனுள்ள வழிகள்சிட்ரஸ் பழங்கள்சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கலாம், இது பல சுகாதார நன்மைகளுக்காக அறியப்படுகிறது, ஆரஞ்சு, திராட்சைப்பழங்கள்…
நடிகர் சாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகாமுடன் இணைந்து நடித்துள்ள மலையாளப் படம் ‘பல்டி’. விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான இதை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரித்துள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் சாந்தனு பேசும்போது, “15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். ‘பல்டி’ 4 இளைஞர்களைக் கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் எனக்கு ரீ என்ட்ரியாக இருக்கும். கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து…
சென்னை: செப்.23-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். கடைசியாக, கடந்த ஜூலை 18-ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்னர் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு இப்போது எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
டிமென்ஷியா என்பது நினைவகம், சிந்தனை மற்றும் தினசரி செயல்பாட்டை பாதிக்கும் ஒரு முற்போக்கான நிலை. தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், வாழ்க்கை முறை தேர்வுகள், குறிப்பாக உணவு, அதன் முன்னேற்றத்தை குறைப்பதிலும், மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும். ஊட்டச்சத்து மூளைக்கு எரிபொருளாகிறது, மேலும் அன்றைய முதல் உணவு நீண்டகால அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கலாம் அல்லது தீங்கு செய்யலாம். துரதிர்ஷ்டவசமாக, சில பொதுவான காலை உணவுப் பழக்கவழக்கங்கள் வீக்கம், மோசமான சுழற்சி மற்றும் காலப்போக்கில் டிமென்ஷியா அபாயத்திற்கு பங்களிக்கும். இந்த பழக்கங்களைப் புரிந்துகொள்வதும் தவிர்ப்பதும் உங்கள் மூளையைப் பாதுகாக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.நினைவகத்தை சேதப்படுத்தும் மற்றும் டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற காலை உணவு பழக்கம்பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்களை சாப்பிடுவதுதொத்திறைச்சிகள், பன்றி இறைச்சி மற்றும் ஹாம் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பல காலை உணவுத் தகடுகளில் பிரபலமான தேர்வாகும். அவை விரைவான மற்றும் திருப்திகரமான விருப்பமாகத் தோன்றினாலும்,…
சென்னை: ஆதார் அட்டையை எளிதாக வாட்ஸ்-அப்பில் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இதற்கு அரசின் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது. நம் நாட்டில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு, பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இருப்பினும் ஆதார் அட்டை தேவைப்படும் இடங்களில் அதை டிஜிட்டல் வடிவிலோ அல்லது கைவசமோ இல்லாமல் இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது அரசின் முன்னெடுப்பு. ஆதார் அட்டை தேவைப்படும் மக்கள், அதனை மிக சுலபமாக மற்றும் துரிதமாக வாட்ஸ்-அப் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட்டில் இருந்து ஆதார் அட்டையை டவுன்லோட் செய்யலாம். இது டிஜிலாக்கர் உடன் லிங்க் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுஐடிஏஐ தளத்தில் லாக்-இன் செய்யாமல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆதார்…
வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். கடந்த மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா – பாகிஸ்தான் போரை இரவு முழுவதும் நீடித்த மத்தியஸ்தத்தின் மூலம் முழுவதுமாக, உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அதே கருத்தை 40 முறை சொல்லிவிட்டார். நேற்றிரவு (சனிக்கிழமை இரவு) நடந்த விருந்து நிகழ்வில் ஒன்றில் பேசிய ட்ரம்ப், “உலக அரங்கில் நாம் செய்துவரும் சில செயல்களால், நாம் இதற்கு முன்னர் இல்லாத அளவிலான மரியாதையை இப்போது பெற்று வருகிறோம். நாம் உலக நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறோம். போர்களை நிறுத்தி வருகிறோம். நாம் இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கம்போடியா…
நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் பேசும் போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து பார்த்திபன் பேசினார். அவர் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் பேச்சு இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஸ்டேஜுக்கு வந்தபின், ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேரின் கவன ஈர்ப்பின் ஸ்டேஜில் இருக்கும் போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளவெடுத்து பேசும் ஸ்டேஜில் இருக்கிறேன். யாரையும் புண்படுத்தாமல் யாவரையும் சந்தோஷப்படுத்த முடிவெடுத்தபடியே படியேறுகிறேன். இருப்பினும் அது ஒரு சார்பு நிலைக்குள் நிலைகுத்தி நிற்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 வருடங்களும் முழுமையாக செயல்பட நாம் ஒத்துழைக்க வேண்டும். அதில் ஏற்படும் விருப்பு வெறுப்பை காட்ட 2026-ன் ஓட்டுப்பெட்டி இருக்கிறது. எனவே நான் ஆளும்கட்சிக்கு எதிரானவன் இல்லை.…
முகம் மற்றும் தலையின் அதிகப்படியான வியர்வை சங்கடமானதாகவும் சமூக ரீதியாக சவாலாகவும் இருக்கும். பொதுவாக, வியர்வை உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது, வெப்பம், உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தின் போது உடலை குளிர்விக்க உதவுகிறது. இருப்பினும், சில நபர்களில், உடல் தேவையானதை விட அதிக வியர்வையை உருவாக்குகிறது, இது ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிக உற்பத்தி தலை மற்றும் முகத்தில் குறிப்பாக நிகழும்போது, இது கிரானியோஃபேசியல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை வெளிப்படையான காரணம் இல்லாமல் அல்லது அடிப்படை மருத்துவ பிரச்சினை அல்லது மருந்தின் விளைவாக ஏற்படலாம். கிரானியோஃபேஷியல் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடலாம், தன்னம்பிக்கையை பாதிக்கலாம், மேலும் ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும்.கிரானியோஃபேசியல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது முகம், உச்சந்தலையில் மற்றும் கழுத்தின் அதிகப்படியான வியர்வையால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை, பெரும்பாலும் வெளிப்படையான தூண்டுதல் இல்லாமல். தோல் மற்றும் ஒவ்வாமை பற்றிய முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட ஒரு…
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபின் கார்க் (வயது 52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், ‘குத்து’ படத்தில் வரும், ‘அசானா அசானா’, ‘உற்சாகம்’ படத்தில், ‘கண்கள் என் கண்களோ’ உள்பட சில பாடல்களை பாடியுள்ளார். இவர், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அப்போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் ஈடுபட்டார். அப்போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஜுபின் கார்க்கின் திடீர் மறைவு அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு அசாம் மாநில அரசு, 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.…