ராமேசுவரம்: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடு களின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 1980-களில் தொடங்கிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். குறிப்பாக 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் இந்திய அரசின் மூலமாக 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் மட்டும் 20 ஆயிரம் இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே…
Author: admin
மூலிகை தேநீர் இயற்கை ஆரோக்கியத்திற்கான பிரபலமான தேர்வாக மாறி வருகிறது, இஞ்சி தேநீர் மற்றும் துளசி தேநீர் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இரண்டுமே பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன, இப்போது நவீன வாழ்க்கை முறைகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இஞ்சி தேநீர் செரிமானத்திற்கு உதவுவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், குமட்டல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கும் பெயர் பெற்றது. துல்சி தேநீர், மறுபுறம், அதன் மன அழுத்தத்தை நிவர்த்தி, நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பண்புகளுக்கு மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுவருகின்றன, இது வெவ்வேறு சுகாதார இலக்குகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இரண்டிற்கும் இடையில் நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு செரிமான ஆதரவு தேவையா அல்லது ஒட்டுமொத்த அமைதியான மற்றும் சமநிலை தேவையா என்பதைப் பொறுத்தது.இஞ்சி தேநீர் மற்றும் துளசி தேநீர்: சுகாதார நன்மைகளை ஒப்பிடுதல்இஞ்சி தேநீர்புதிய இஞ்சி வேர் அல்லது இஞ்சி தூள் துண்டுகளை சூடான நீரில் செலுத்துவதன் மூலம் இஞ்சி…
நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு கலோரிலான மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பின்னர் போட்டியில் இருந்து விலகியவருமான நிக்கி ஹேலி, இது தொடர்பாக நியூஸ் வீக் இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். நிக்கி ஹேலி எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், “சீனாவை முறியடித்து வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்குகள் மிக முக்கியமானவை. அமெரிக்க -…
சென்னை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள சூழலில், திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துவிட்டனர். தவெகவின் 2-வது மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது. மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
மாதத்தின் அந்த நேரம் எப்போதுமே ஒரே மாதிரியான விவாதத்தைத் தூண்டுகிறது: பட்டைகள் அல்லது டம்பான்கள்? சிலர் பேட்களின் வசதியான, வம்பு இல்லாத ஆறுதலால் சத்தியம் செய்கிறார்கள், மற்றவர்கள் சுதந்திர டம்பான்கள் கொண்டு வராமல் வாழ முடியாது, குறிப்பாக ஜிம்மில் தாக்கும்போது அல்லது குளத்தில் டைவிங் செய்யும்போது. ஆனால் இங்கே உண்மையான கேள்வி: பேட்ஸ் வெர்சஸ் டம்பான்ஸ் போரை உண்மையிலேயே வெல்வது எது? ஸ்பாய்லர் எச்சரிக்கை, இது அவ்வளவு எளிதல்ல. சிறந்த தேர்வு உங்கள் தனித்துவமான உடல், ஓட்டம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நீங்கள் அனைவரும் வசதி, அதிகபட்ச பாதுகாப்பு அல்லது கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருப்பதைப் பற்றி இருந்தாலும், உண்மைகளை அறிந்து கொள்வது உங்கள் முடிவை எளிதாக்கும். உங்கள் சரியான போட்டியைக் கண்டுபிடிக்க தயாரா? என்ஐஎச் மற்றும் எக்லினிகல்மெடிசின் ஆய்வுகளின் அடிப்படையில் உங்கள் கால பக்கவாட்டியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.ஒரு திண்டு மற்றும் ஒரு…
புதுடெல்லி: “விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது” என விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி வீரரும், விமானப்படை கேப்டனான ஷுபன்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஜூலை 15-ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்பினார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை 18-ஆம் தேதி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம்-4 திட்டம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஷுபன்ஷு சுக்லா, “இந்த திட்டத்தை சாத்தியமாக்க உதவிய அரசாங்கம், இஸ்ரோ, விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”…
கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கவின் நாயகனாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக சென்னையைச் சுற்றியே நடத்தியுள்ளது படக்குழு. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ’கிஸ்’ படத்தின் ஒளிப்பதிவளராக ஹரீஷ் கண்ணன், இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின், எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தின் பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்ததாக வெற்றிமாறன் தயாரித்துவரும் ‘மாஸ்க்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கவின்.
சென்னை: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை,மக்கள் பிரச்சினையை திசை திருப்ப தாக்கல் செய்துள்ளார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்துள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை வெளியிட்டு ஆற்றிய உரையில் முதல்வர் இவ்வாறாக தெரிவித்தார். முதல்வர் பேசியதாவது: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு…
குடல் புற்றுநோய், அல்லது பெருங்குடல் புற்றுநோய் என்பது ஒரு பெரிய உலகளாவிய சுகாதார அக்கறை, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பெரும்பாலும், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் நுட்பமானவை மற்றும் எளிதில் கவனிக்கப்படவில்லை, இது நோயறிதலை தாமதப்படுத்தும் மற்றும் சிகிச்சையின் செயல்திறனைக் குறைக்கும். நிலை 4 குடல் புற்றுநோயால் கண்டறியப்பட்ட 39 வயதான பிரிட்டிஷ் மனிதனின் பயணத்தை ஆராயுங்கள், ஆரம்பத்தில் அவர் தவறவிட்ட அறிகுறிகள், வயிற்று வலி, குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சோர்வு உள்ளிட்டவை. ஃபைபர் நிறைந்த உணவு, வழக்கமான உடற்பயிற்சி, எடை மேலாண்மை மற்றும் வழக்கமான திரையிடல் போன்ற நடைமுறை தடுப்பு உத்திகளுடன், மரபியல், உணவு, வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் நிலைமைகள் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளையும் இது ஆராய்கிறது. குடல் புற்றுநோய் எந்த வயதிலும் உருவாகலாம், இதில் 30 வயதிற்குட்பட்ட நபர்கள் உட்பட. ஆரம்பகால அறிகுறிகளை அங்கீகரித்தல், ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது மற்றும்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கு முன் பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எனவே, ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன்.…