ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய அக்ரூட் பருப்புகள் பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று புகழப்படுகின்றன. அவை இதய ஆரோக்கியம், மூளை செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மேலும் நோய் தடுப்புக்கு கூட உதவக்கூடும். இருப்பினும், அவற்றின் பல நன்மைகள் இருந்தபோதிலும், அக்ரூட் பருப்புகள் அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல. சில சுகாதார நிலைமைகள் அல்லது உணவுத் தேவைகள் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது ஆபத்தானது அல்லது சங்கடமாக இருக்கும்.எச்சரிக்கையின்றி அவற்றை சாப்பிடுவது செரிமான பிரச்சினைகள், அதிகரித்த யூரிக் அமில அளவு அல்லது மருந்துகளின் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் பாதுகாப்பான மற்றும் தகவலறிந்த தேர்வுகளைச் செய்வதற்கு அக்ரூட் பருப்புகளை எப்போது தவிர்க்க வேண்டும் என்பதை அறிவது முக்கியம். இந்த கட்டுரை தேசிய சிறுநீரக அறக்கட்டளை மற்றும் என்ஐஎச் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் ஆதரவுடன், அக்ரூட் பருப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ செய்ய வேண்டிய ஐந்து குழுக்களை கோடிட்டுக்…
Author: admin
புதுடெல்லி: பெரும்பான்மை உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசியல் சாசன அமைப்பு மற்றொரு அரசியல் சாசன அதிகாரம் படைத்த அமைப்புக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் ராமசந்திர ராவ் வழக்கில் ஏற்கெனவே தெளிவுபடு்த்திஉள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றம் காலநிர்ணயம் செய்வதாக இருந்தாலும் அதை உத்தரவாக அல்லாமல் பரிந்துரையாக செய்திருக்க வேண்டும். சட்ட…
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்காக பொறியியல் துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் துணை கலந்தாய்வில் பங்கேற்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான 20,662 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அவர்களுக்கான துணை கலந்தாய்வு இணைய வழியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கல்லூரி விருப்பத்தை தேர்வு செய்தவர்களுக்கு நாளை (ஆக.23) காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை நாளை இரவு 7 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களுக்கு 24-ம் தேதி…
சென்னை: தமிழக அரசின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் தலைவர் எஸ்.மதுரம், பொதுச்செயலாளர் பெ.முனியப்பன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த வேறொரு இடத்தை ஒதுக்குமாறும், அவர்களை கைதுசெய்ய வேண்டாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தூய்மை பணியாளர்களை பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கைது செய்தது கண்டனத்துக்குரியது. தற்போது, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போராடினால் அவர்களை காவல் துறையினர் கைது செய்வதை, போராட்டத்தை ஒடுக்கும் செயலாக கருதுகிறோம். அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் முதல் அடிப்படை பணியாளர்கள் 2.44 லட்சம் பேரும் ஆதரவு தெரிவிக்கிறோம். தேவைப்பட்டால் அவர்களுடன் இணைந்து போராடவும் எங்கள் சங்கமும், இணைப்பு சங்கங்களும் தயாராக…
சர்கோமா என்பது தசைகள், எலும்புகள், நரம்புகள், கொழுப்பு மற்றும் இரத்த நாளங்கள் போன்ற உடலின் இணைப்பு திசுக்களில் உருவாகும் ஒரு அரிய மற்றும் ஆக்கிரமிப்பு புற்றுநோயாகும். அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் 1% க்கும் குறைவாகவே, சர்கோமாக்கள் ஆரம்பத்தில் கண்டறிவது மிகவும் கடினம், குறிப்பாக அவை பெரும்பாலும் வலியற்ற கட்டிகள் அல்லது வீக்கங்களாக இருப்பதால் பலர் நிராகரிக்கின்றன. பி.எம்.சியில் வெளியிடப்பட்ட முறையான மதிப்புரைகள், சர்கோமாவில் கண்டறியும் தாமதங்கள் பெரிய கட்டிகள், அதிகரித்த மெட்டாஸ்டாஸிஸ் மற்றும் மூட்டு-ஸ்பேரிங் அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூட்டு ஊனமுற்றோர் தேவைப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்துகின்றன. 12 வாரங்களுக்கும் குறைவான அறிகுறிகளைக் கொண்ட எவிங்கின் சர்கோமா நோயாளிகள் கணிசமாக சிறந்த உயிர்வாழும் விகிதங்களை அனுபவித்ததாக பி.எம்.சி.யின் ஆராய்ச்சி காட்டுகிறது, இது ஆரம்பகால கண்டறிதலின் முக்கியமான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. காலப்போக்கில், கவனிக்கப்படாத கட்டிகள் வளர்ந்து நரம்புகள் அல்லது உறுப்புகளுக்கு எதிராக அழுத்தத் தொடங்கலாம், இறுதியில் வலி அல்லது…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில்…
சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ,…
கார்டிசோல், பெரும்பாலும் “மன அழுத்த ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது, வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் மன அழுத்தத்திற்கு உடலின் பதில் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறுகிய வெடிப்புகளில் அவசியம் என்றாலும், நீண்டகாலமாக அதிக கார்டிசோல் அளவு எடை அதிகரிப்பு, பதட்டம், மோசமான தூக்கம் மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். இயற்கையான கார்டிசோல் போதைப்பொருள் இந்த விளைவுகளை நிர்வகிக்கவும் உங்கள் உடலில் சமநிலையை மீட்டெடுக்கவும் உதவும்.காபியைக் கட்டுப்படுத்துவது, உங்கள் அன்றாட வழக்கத்தில் சிரிப்பை இணைப்பது, நினைவாற்றலைப் பயிற்சி செய்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் தூக்கப் பழக்கத்தை மேம்படுத்துவது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்கும். இந்த சிறிய மற்றும் நிலையான பழக்கவழக்கங்கள் மனநிலையை மேம்படுத்துகின்றன, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன, உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.விரைவான திருத்தங்களைப் போலன்றி, ஒரு கார்டிசோல் போதைப்பொருள் நீண்டகால நல்வாழ்வை ஆதரிக்கும் நிலையான உத்திகளில் கவனம்…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகளை கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 81-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துக் கொண்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்பி, மாநில துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில், ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய…
கோவை: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரையை இணைத்து தமிழக முதல்வருக்கு கோவையை சேர்ந்த 43 தொழில் நிறுவனங்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளன. மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க தொழில் அமைப்புகள் சார்பில் சிறப்பு கூட்டம் கோவையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடந்தது. கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, டீகா, கிரெடாய், ஆர்டிஎப், ஓஸ்மா, டேப்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில ஜிஎஸ்டி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், 43 தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. மனுவில், சிறிய…