Author: admin

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பம்பையில் இன்று காலை தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் சங்கமத்தை தொடங்கிவைத்தார். இதில், தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நாம் சிந்திக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே 2011-12ம் ஆண்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் தொடங்கப்பட்டது. மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.148.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை தடுக்க சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இது துரதிருஷ்டவசமானது. ஐயப்பன் மீதான பக்தியா, வனப் பாதுகாப்பு மீதான அக்கறையா, மத தூய்மையா? ஆனால், இவை எதுவும் இல்லை என்பது…

Read More

‘ஜனநாயகன்’ படமாக எப்படியிருக்கும் என்று ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். ’ஜனநாயகன்’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது. இதுவரை சில போஸ்டர்கள் மற்றும் சிறிய டீஸரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணமுள்ளன. முதன் முறையாக இப்படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத், “’ஜனநாயகன்’ விஜய் சாருடைய பக்கா கடைசிப் படமாக இருக்கும். மாஸ், ஆக்ஷன், கமர்ஷியல் அனைத்தும் கலந்த படமாக இருக்கும். பக்கா ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகமாக்கி இருக்கிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

Read More

சென்னை: அரசு பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், மாவட்ட அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டுப் பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசு பள்ளிகளில் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடியாத மாநில அரசு, அமைச்சர்களின் தற்புகழ்ச்சிக்கு இடம் கொடுப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இந்த விவகாரம் தெரியுமா? அவரின் ஒப்புதலோடு தான் பள்ளி மாணவர்கள் பிறந்த நாள் பாடலை பாடினார்களா? மாவட்ட அமைச்சர்கள் குறுநில…

Read More

ஒரு நீண்ட, அமைதியான தூக்கம் போல் உணர்ந்த பிறகும் ஒரு தலைவலியுடன் எழுந்திருப்பது பொதுவான மற்றும் குழப்பமான அனுபவமாகும். தூக்கம் உடலையும் மனதையும் ரீசார்ஜ் செய்ய வேண்டும், ஆனால் அதிக தூக்கம், பெரும்பாலும் “தூங்குவது” என்று குறிப்பிடப்படுகிறது, சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். புத்துணர்ச்சியுடன் உணருவதற்குப் பதிலாக, நீங்கள் நாள் கனமான, கஷ்டம் அல்லது தலை வலியுடன் தொடங்கலாம். எப்போதாவது நீண்ட காலமாக பொய்யானது பாதிப்பில்லாதது என்றாலும், அடிக்கடி அதிக தூக்கம் வருவது உடலின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து தலைவலிக்கு பங்களிக்கும். இது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அதைத் தடுப்பதற்கான முதல் படியாகும், மேலும் உங்கள் தூக்கத்தை உறுதி செய்வது உங்களை உற்சாகப்படுத்துகிறது, சங்கடமாக இல்லை.அதிக தூக்கம் மற்றும் தலைவலி இடையே மறைக்கப்பட்ட இணைப்பு; 9 மணி நேரத்திற்கு அப்பால் தூங்குவது வலிக்கிறதுபெரும்பாலான பெரியவர்களுக்கு, ஏழு முதல் ஒன்பது மணிநேர தூக்கம் ஆரோக்கியமாக கருதப்படுகிறது. பொதுவாக தூங்குவது என்பது…

Read More

புதுடெல்லி: ​நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் கட்​சிக்கு செல்​வாக்​குள்ள தொகு​தி​களில் பல லட்​சம் வாக்​காளர்​கள் திட்​ட​மிட்டு நீக்​கப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி நேற்று முன்​தினம் குற்​றம் சாட்​டி​னார். “அதி​காலை 4 மணிக்கு 36 வினாடிகளில் 2 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். தேர்​தல் ஆணை​யம் விழித்​திருந்து இதை பார்த்​தா​லும் திருடர்​களை பாது​காக்​கிறது” என்று அவர் குற்​றம் சாட்​டி​னார். இதுதொடர்​பாக மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறிய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு தனது தலைமை தோல்வி அடைந்​ததை ராகுல் ஏற்க வேண்​டி​யிருந்​தது. அவரது தலைமை பல தேர்​தல்​களில் காங்​கிரஸ் கட்​சி​யின் தோல்விக்கு இட்​டுச் சென்​றது. இந்​திய இளைஞர்​கள் பிரதமர் மோடியை ஆதரிக்​கத் தொடங்​கினர். காங்​கிரஸ் கட்​சியை தொடர் தோல்விக்கு இட்​டுச் சென்ற ராகுல் இந்​தி​யா​வின் ஜனநாயக அமைப்பை அவம​திக்​கிறார். அவரை இந்த நாடு நம்​பாது. ஏழைகள், விவ​சா​யிகள் மற்​றும் சாமானியர்​கள் பிரதமர் மோடியை தங்​கள் தலை​வ​ராக கருதுகின்​றனர். தேர்​தல் தோல்வி​களுக்கு பிறகு ராகுல்…

Read More

சென்னை: ப​தவி உயர்​வுக்​கு தகு​தி​யான 26 பேரின் பெயர்​களை பட்​டியலில் சேர்க்​க​வில்லை எனக் கூறி, மின்​வாரிய தலை​மையகத்​தில் உள்ள தலை​மைப் பொறி​யாளர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டு, ஊழியர்​கள் போ​ராட்​டம் நடத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மின்​வாரி​யத்​தில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதற்​காக, அவர்​கள் பணிபுரி​யும் வட்​டத்​தின் தலைமை அலு​வலர், சம்​பந்​தப்​பட்ட ஊழியரின் திறன் மதிப்​பீட்டு அறிக்கை உள்​ளிட்​ட​வற்​றுடன் பட்​டியல் தயாரித்து தலை​மையகத்​துக்கு அனுப்​புவது வழக்​கம். அதனடிப்​படை​யில், தேர்வு செய்​யப்​பட்டு பதவி உயர்வு வழங்​கப்​படும். மின்வாரிய விதி: மேலும், உயர் பதவி​யும், ஏற்​கெனவே பணிபுரி​யும் அலு​வல​கம் அல்​லது அதற்கு அரு​கில் உள்ள அலு​வல​கத்​திலேயே வழங்​கப்பட வேண்​டும் என்​பது வாரிய விதி. ஆனால், இது​போன்ற விதி​களை பின்​பற்​றாமல் பதவி உயர்வு வழங்​கப்​படு​வ​தாக தொடர் குற்​றச்​சாட்டு எழுந்​தது. குறிப்​பாக, அண்​மை​யில் கணக்கு மேற்​பார்​வை​யாளர் பதவி​யில் இருந்து உதவி கணக்கு அலு​வல​ராக 96 பேர் அடங்​கிய பட்​டியல் உரு​வாக்​கப்​பட்​டது. இதில், 93…

Read More

நம்மில் பெரும்பாலோர் குறட்டை ஒரு எரிச்சலூட்டும் பழக்கம் அல்லது சோர்வாக இருப்பதற்கான அறிகுறி என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் கார்ன்வாலைச் சேர்ந்த 51 வயதான கிளாரி பார்பருக்கு, இது மிகவும் தீவிரமான ஒன்றுக்கு சிவப்புக் கொடி. ஒரு இரவு, அவள் மூக்கு தடுக்கப்பட்டதால் அவள் காற்றிற்காக வாயை மூடிக்கொண்டு, வாயில் சுவாசிப்பதைக் கண்டாள். முதலில், வேலையில் அடிக்கடி நாசி சோதனைகளிலிருந்து நீடித்த கோவிட் விளைவுகள் அல்லது எரிச்சலை அவர் குற்றம் சாட்டினார், மேலும் தனது மருத்துவரின் வருகையைத் தவிர்த்தார். அதிர்ஷ்டவசமாக, அவள் சென்றாள். சோதனைகள் ஆல்ஃபாக்டரி நியூரோபிளாஸ்டோமா எனப்படும் ஒரு அரிய நாசி புற்றுநோயை வெளிப்படுத்தின. திடீர் அல்லது அசாதாரண குறட்டை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என்று கிளாரின் கதை காட்டுகிறது.முதல் முறையாக குறட்டை: ஒரு பொதுவான அறிகுறி தீவிரமான ஒன்றை மறைக்கும் போதுபெரும்பாலான மக்கள் குறட்டை ஒரு எரிச்சலூட்டும் ஆனால் பாதிப்பில்லாத தூக்க பிரச்சினை என்று நினைக்கிறார்கள். இது பொதுவாக தடுக்கப்பட்ட…

Read More

எல் சோபிரான்ட் சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே பல எதிர்ப்பாளர்கள் கூடினர் (கோப்பு புகைப்படம்) அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) 73 வயதான இந்திய பாட்டியான ஹர்ஜித் கவுரை தடுத்து வைத்த பின்னர் கலிபோர்னியா முழுவதும் கோபம் மற்றும் அனுதாபம் ஏற்பட்டது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் கவுர், செப்டம்பர் 8 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் குடியேற்ற அதிகாரிகளுடன் வழக்கமான சோதனையின் போது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பேக்கர்ஸ்ஃபீல்டில் உள்ள மேசா வெர்டே ஐஸ் செயலாக்க மையத்திற்கு மாற்றப்பட்டார்.கான்ட்ரா கோஸ்டா கவுண்டியில் எல் சோப்ராண்டே சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே அண்மையில் நடந்த போராட்டத்தில், 200 க்கும் மேற்பட்டோர் கூடி, “பாட்டி வீட்டிற்கு கொண்டு வாருங்கள்” என்று படித்த அடையாளங்களை வைத்திருந்தனர். ஆதரவாளர்கள் அவளை “அனைவரின் பாட்டி” என்று வர்ணித்தனர், கார்களை ஒற்றுமையுடன் கடந்து சென்றனர்.உள்ளூர் அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களும் இணைந்தனர், மத்திய…

Read More

புதுடெல்லி: ஜெய்ஸ் -இ-​முகமது கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி ஒப்​புதலை தொடர்ந்​து, முரித்கே பகு​தி​யில் இருந்த ‘மர்​காஷ்-இ-தொய்​பா’ முகாம் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தரைமட்​ட​மான​தாக லஷ்கர் கமாண்​டர் குவாசிம் தற்​போது கூறி​யுள்​ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி அன்​று, லஷ்கர் பிரிவு தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை மேற்​கொண்​டது. இதில் 9 முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. ஆனால், இதை பாகிஸ்​தான் மறுத்து வந்​தது. மசூத் குடும்​பத்​தினர் மரணம்: இந்​நிலை​யில் ஜெய்​ஸ்​-இ- முகமது அமைப்​பின் கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி சமீபத்​தில் அளித்த வீடியோ பேட்​டி​யில், “இந்​திய தாக்​குதலில் ஜெய்​ஸ்​-இ-​முகமது அமைப்​பின் பஹவல்​பூர் முகாம் தகர்க்​கப்​பட்​ட​தாக​வும், இந்த தாக்​குதலில் தங்​கள் அமைப்​பின் தலை​வர் மசூத் அசா​ரின் குடும்​பத்​தினர் சிதைக்​கப்​பட்​டனர்​” என கூறி​யிருந்​தார். இதையடுத்து சமூக ஊடகத்​தில் தற்​போது வெளி​யாகியுள்ள வீடியோவில் லஷ்கர்…

Read More

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சென்னை – கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தின் நிதி கூறுகளின் கீழ், நெடுஞ்சாலைத் துறையின் திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். இக்கட்டிடம், 5,546 சதுர மீட்டர் பரப்பளவில், 3 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட் டுள்ளது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் ஆகியவை இப்புதிய கட்டிடத்தில்…

Read More