இணையத்தில் எழுந்த கிண்டல்களுக்கு தனது பேச்சில் பதிலடி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து பாராட்டினார் என்று இணையத்தில் பரப்பினார்கள். இந்த கிண்டல்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில், ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, ”ஒரு படம் நன்றாக இருக்கிறது, எனக்கு பிடித்திருக்கிறது என்றால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டுகிறேன். இவன் என்ன பெரிய ஆளா என்று கேட்கிறார்கள். நல்லது பண்ணுவதற்கு எதற்கு யோசிக்க வேண்டும். விமர்சனமும் ஒரு பகுதி தான். பல சாதனைகளை செய்த சச்சினையும் விமர்சனம் செய்தார்கள். சென்னை அணிக்காக 5 கோப்பைகள் வென்ற பிறகும், தோனியையும் விமர்சனம் செய்தார்கள். இப்படியிருக்கும் போது நான் யாரை குறைச் சொல்வது.…
Author: admin
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரமுடியும். கருணாநிதி குடும்பம் மட்டும்தானா, என்னுடைய குடும்பத்திலும் வாரிசு இருக்க வேண்டும் என்பதற்காக நேரு தன் மகனை எம்பியாக்கினார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளையடுத்து முசிறி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த ஏராளமான மக்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம் பெற்றார்கள், தமிழகம் ஏற்றம் பெற்றது. திமுகவுக்கு வீட்டு மக்கள் தான் முக்கியம். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை அடிமைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி, விசுவாசமாக உழைத்தால் சாதாரண தொண்டன் கூட உச்சப் பதவிக்கு வரமுடியும். திமுகவில் வர முடியுமா? கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே வரமுடியும். நான் படிப்படியாக பொதுச்செயலாளராக உயர்ந்தேன். இதுதான் அதிமுக. மக்களை, உழைப்பாளர்களை மதிக்கக்கூடிய கட்சி. திமுகவில் ஸ்டாலின்,…
அந்த திடீர் தலைச்சுற்றல், நடுக்கம் அல்லது உணவைக் காணவில்லை என்பதை வியர்த்தது சோர்வாக இருக்காது; இது நீரிழிவு அதிர்ச்சியின் அடையாளமாக இருக்கலாம், இது கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவு என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவில் குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது, பெரும்பாலும் அதிகப்படியான இன்சுலின், தாமதமான உணவு அல்லது சரியான ஊட்டச்சத்து இல்லாமல் அதிகப்படியானது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீரிழிவு அதிர்ச்சி விரைவாக அதிகரிக்கும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மூளை, இதயம் மற்றும் ஒட்டுமொத்த உயிர்வாழ்வை பாதிக்கும்.அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகளை அங்கீகரிப்பது மற்றும் எவ்வாறு செயல்படுவது என்பதை அறிந்து கொள்வது கடுமையான சுகாதார விளைவுகளைத் தடுக்கலாம். இனிமையான ஒன்றை சாப்பிடுவதன் மூலம் லேசான இரத்தச் சர்க்கரைக் குறைவை சரிசெய்ய முடியும் என்றாலும், நீரிழிவு அதிர்ச்சி ஒரு மருத்துவ அவசரநிலை, இது உடனடி கவனம் தேவை. ஆரம்ப அறிகுறிகளுக்கும் முழுக்க முழுக்க அதிர்ச்சிக்கும் உள்ள…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவர் தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தன்கர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித் ஷா அளித்த பேட்டியில்,” ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் தெளிவாக உள்ளது. அவர் தனது ராஜினாமாவுக்கு உடல்நலக் காரணங்களையே குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சிறப்பான பதவிகாலத்துக்காக பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்” என்றார் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறுவது குறித்து கேட்டபோது, “உண்மை மற்றும் பொய்களின் விளக்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது. இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தன்கர் ஒரு அரசியலமைப்பு பதவியை வகித்து அரசியலமைப்பின் படி…
ராகுல் திராவிட் என்னும் இந்தியப் பெருஞ்சுவர் ஓய்வு பெற்ற பிறகே இந்திய அணியில் 2010-ம் ஆண்டு நுழைந்த செடேஷ்வர் புஜாரா கிட்டத்தட்ட ராகுல் திராவிட்டின் அனைத்து திறமைகளையும் குறிப்பாக டெஸ்ட் போட்டித் திறமைகளை 3ம் நிலையில் அப்படியே கொண்டு வந்தார். ராகுல் திராவிட் போன பிறகு அவரைப் போலவே இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் புஜாரா. இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் கொஞ்சம் கண்ணியமாக நடத்தி அவருக்குரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்திருக்கலாம். கோலி என்னும் மாவீரனும் இப்படித்தான் கடைசி பிரியாவிடையை மைதானத்தில் கொடுக்காமலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது பெரிய வருத்தம்தான். எப்படி திராவிட், சச்சின், லஷ்மண் இந்திய நடுவரிசையை ஒரு காலத்தில் தாங்கிப் பிடித்தார்களோ, இவர்கள் ஓய்வுக்குப் இறகு புஜாரா, கோலி, ரஹானே என்று கூறலாம். 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 7,195 ரன்களை 43.60 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 19 சதங்களையும் 35 அரைசதங்களையும் எடுத்ததோடு…
விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகமெங்கும் இருந்து சுமார் 10-15 லட்சம் பேர் வரை கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பல்வேறு நபர்கள் மாநாட்டு திடலில் இருந்து, மாநாட்டுக்கு முன்பும் – பின்பும் வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டு வந்தார்கள். அந்தளவுக்கு மாநாட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநாட்டு திடலுக்கு விஜய் வந்தவுடன் அங்கிருந்த நடைபாதையில் நடந்து தொண்டர்களுக்கு கையசைத்தார். அப்போது தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்துக் கொண்டார். இதனை 22-ம் தேதி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார் விஜய். இந்தப் பதிவு மாபெரும் சாதனையை எட்டியிருக்கிறது. விஜய்யின் செல்ஃபி வீடியோ இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. மேலும் 10 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் அரசியல் சார்ந்த பதிவொன்றுக்கு…
சென்னை: அரசியல் கட்சி தொடங்கிவிட்டோம் என்பதற்காக விஜய் கடந்த காலத்தை மறந்துவிட்டு முதல்வரை மரியாதை குறைவாக பேசுவது சரியல்ல என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அறிவுசார்ந்துதான் தமிழ் மொழியை திமுக உயர்த்தி பிடிக்க நினைக்கிறது. ஆனால், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தமிழ் 2,000 ஆண்டுகள் பழமையானது. சமஸ்கிருதம் போன்ற மொழிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை எனக்கூறி நமது வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். தமிழினம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியுள்ளது. ஆனால் அதை மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால், தமிழின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து புத்தகம் மற்றும் தமிழ்மொழி மீது ஆர்வமுள்ளவர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலினை…
உலகளவில் இறப்புகளுக்கு இதய நோய்கள் ஒரு முக்கிய காரணம். டாக்டர் ஜெர்மி லண்டன் மூன்று முக்கிய ஆபத்து காரணிகளை வெளிப்படுத்துகிறது. உடல் பருமன் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராகும், இது பெரும்பாலும் மோசமான உணவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இடைவிடாத வாழ்க்கை முறை வழக்கமான உடற்பயிற்சியுடன் கூட இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைபிடித்தல் இதயத்திற்கு மிக மோசமான பழக்கமாக உள்ளது, இது தமனிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இருதய நோய்கள் (சி.வி.டி) மரணத்திற்கு முக்கிய காரணம். இந்த நோய்களால் உலகளவில் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பெரும்பாலும் பங்களிக்கின்றன. சில முதன்மை ஆபத்து காரணிகள் தடுக்கக்கூடியவை. ஆம், அது சரி. 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவமுள்ள போர்டு சான்றளிக்கப்பட்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெர்மி லண்டன் இப்போது இதய நோய்களுக்கு பங்களிக்கும் மூன்று முக்கிய காரணிகளை…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். விபின்-நிக்கி திருமணத்தின்போது பெண் வீட்டார் சொகுசு கார், பல சவரன் நகை உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இருப்பினும், அது போதாது என கூறி ரூ.36 லட்சம் பணம் கேட்டு நிக்கியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே வரதட்சணை தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது. அப்போது, விபின் தனது தாயுடன் சேர்ந்து கொண்டு நிக்கியை அடித்து துன்புறுத்தியதுடன் அவர் மீது திரவம் ஊற்றி லைட்டரால் தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் அவரது 6 வயது மகன் கண் முன்னே நடந்துள்ளது. இதுகுறித்து அந்த…
இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த மன்னர், சந்திரகுப்தர் மவுரியர். இந்தியாவின் முதல் பேரரசர் என்று கணிக்கப்படும் இவர் உருவாக்கிய மவுரிய பேரரசு, பல்வேறு பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் அடக்கி இருந்தது. சந்திரகுப்தர், அவ்வாறு போரில் வென்றதற்கு, அவருடைய ராஜகுரு, அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரே காரணம் என்பார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி உருவான திரைப்படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’. இந்தப் படத்தைக் கோவையைச் சேர்ந்த சி.கே.சச்சி இயக்கினார். எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் உறவினரான இவருடைய இயற்பெயர் சி.கே.சதாசிவம். அந்த காலத்திலேயே சட்டம் படித்திருந்த இவர், சினிமா ஆர்வத்தால், லண்டனில் திரைப்பட இயக்கம் குறித்து கற்றுவிட்டு, எல்லீஸ்ஆர்.டங்கனின் ‘சதிலீலாவதி’யில் பணிபுரிந்தார். பின்னர் அவர் இயக்கிய படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’. இதில், பவானி கே.சாம்பமூர்த்தி, என்.சி.வசந்தகோகிலம், பிருகதாம்பாள், டி.கே. கல்யாணம், பசுபுலேட்டி னிவாசுலு நாயுடு, பி.சாரதாம்பாள் என பலர் நடித்தனர். அந்த காலத்தில் பிரபல கர்னாடக இசைப் பாடகியாக இருந்த வசந்த கோகிலம்…