Author: admin

தனுஷ் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பைசன்’ படத்துக்குப் பிறகு, மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 56-வது படமாகும். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், தனுஷ் – மாரி செல்வராஜ் – ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்துக்கு முன்பாக தனுஷை வைத்து புதிய படமொன்றை தயாரிக்கவுள்ளது வேல்ஸ் நிறுவனம். இப்படத்தினை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு தான் மாரி செல்வராஜ் படத்தினை தொடங்கவுள்ளார் தனுஷ். இதற்கு முன்பாக தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற அப்படத்தினை தாணு தயாரித்திருந்தார்.

Read More

குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு இன்று (ஏப்.29) பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்டுவதே தீர்வாக அமையும். புதிய அணைக்கான மொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும். அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…

Read More

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.72,120-க்கு விற்பனையானது. இதனால், அட்சய திருதியைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கை எதிரொலியாக உலக அளவில் தங்கம் விலை தினமும் அதிகரித்து வருகிறது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை கடந்த பிப்ரவரி 11-ம் தேதி முதல்முறையாக ரூ.8 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒரு கிராம் விலை ரூ.8,060, ஒரு பவுன் விலை ரூ.64,480 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 31-ம் தேதி ஒரு பவுன் ரூ.67,600-க்கு விற்பனையானது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,520, கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் ரூ.71,360,…

Read More

உலகின் மிகவும் பிரபலமான செல்ல நாய் இனங்களில் இரண்டு, லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் மற்றும் கோல்டன் ரெட்ரீவர்ஸ் ஆகியவை அவற்றின் நட்பு இயல்பு, உளவுத்துறை, உயர் பயிற்சி மற்றும் விசுவாசத்திற்காக விரும்பப்படுகின்றன. முதல் பார்வையில், அவர்கள் இருவரும் பலருக்கு மிகவும் ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் அவை சில தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன; அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம். இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது உங்கள் குடும்பத்திற்கு சரியான செல்லப்பிராணியைத் தேர்வுசெய்ய உதவும்.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஜான்ஸ் ஹாப்கின்ஸின் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுத்தாளரைத் தேர்ந்தெடுப்பார் மார்ட்டின் மகரி உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை வழிநடத்த, இந்த விஷயத்தை நன்கு அறிந்த இரண்டு ஆதாரங்கள் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. கோவ் -19 தொற்றுநோய்களின் போது பல பொது சுகாதார பிரச்சினைகள் குறித்து மக்கரி கவலைகளை எழுப்பினார், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து பாதுகாப்பையும், கோவ் தடுப்பூசி கட்டளைகளை எதிர்க்கவும் கூறினார். டிரம்ப் மாற்றம் குழுவின் செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ், எந்தவொரு அறிவிப்பையும் விட ஊகிக்கவோ அல்லது முன்னேறவோ மாட்டேன் என்று கூறினார். என எஃப்.டி.ஏ கமிஷனர்மாகரி சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவரிடம் புகார் அளிப்பார். எச்.எச்.எஸ். வழிநடத்த, டிரம்ப் தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் மற்றும் உயர் நிர்வாக வேலைகளுக்காக பல வழக்கத்திற்கு மாறான…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களை கருத்தில் கொண்டு இது அறிமுகமாகி உள்ளது. சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14சி 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இது 2025-ம் ஆண்டு இந்தியாவில் சியோமி அறிமுகம் செய்துள்ள முதல் போன் ஆகும். வரும் 10-ம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது. கடந்த 2023 டிசம்பரில் வெளிவந்த ரெட்மி 13சி போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பாக இது வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.88 இன்ச் ஹெச்டி+ பன்ச் ஹோல் டிஸ்பிளே …

Read More

சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) நிறைவடைகிறது. நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (மார்ச் 31) இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில்…

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறாவது தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது சிஎஸ்கே. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏல யுக்தி மற்றும் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மாதிரியான இந்திய வீரர்களை ஏலத்தில் வாங்க தவறியது அணியின் தடுமாற்றத்துக்கு காரணம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலக, தோனி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றும் தோல்விகளுக்கு விடை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார். சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே இப்போது சவாலாக உள்ளது. “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், பயிற்சியாளரும்…

Read More

Last Updated : 10 Apr, 2025 08:12 AM Published : 10 Apr 2025 08:12 AM Last Updated : 10 Apr 2025 08:12 AM மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடை​பெற்ற இரண்​டாவது உலக போரில் ஜெர்​மனி​யும் அப்​போதைய சோவி​யத் யூனியனும் கடுமை​யாக மோதிக் கொண்​டன. பின்​னர் 1945-ம் ஆண்டு சோவி​யத் யூனியன் தாக்​குதலை சமாளிக்க முடி​யாத ஜெர்​மனி​யின் நாஜி படைகள் சரணடைந்​தன. அதன்​படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் தேதி பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த வெற்றி தின விழா​வில் பங்கேற்க இந்​திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார் என்று ரஷ்ய வெளி​யுறவுத்…

Read More