சென்னை: தன்னுடைய படங்களில் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெற்றதே இல்லை என என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுடியூப் பேட்டி ஒன்றில் சுந்தர்.சி கூறியது: “என்னுடைய படங்களுக்கு அதிகமாக வரும் பார்வையாளர்கள் யாரென்று பார்த்தால் குழந்தைகளும், ஃபேமிலி ஆடியன்ஸும்தான். எனவே அவர்கள் ரசிக்கும்படிதான் நான் காட்சிகள் வைப்பேன். மிகவும் ஆபாசமான காட்சிகள், என் படங்களில் இருக்காது. டபுள் மீனிங் வசனங்களை என் படங்களில் நான் வைப்பதில்லை. ஒருவேளை அப்படி டபுள் மீனிங் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். நான் எந்த எண்ணத்தில் வைத்திருக்க மாட்டேன். காரணம், எழுதும்போதே டபுள் மீனிங் வசனங்களை நான் தவிர்த்து விடுவேன். அதே போல ஆபாச வசனங்களும் இருக்காது. என் படங்களில் கிளாமர் இருக்கும். நாம் வைக்கும் ஆங்கிள் தான் முக்கியம். புடவை கட்டிக் கொண்டு வந்தால் கூட டாப் ஆங்கிள் வைத்தால் தப்பாகி விடும். ஹீரோயின் கவுன் போட்டுக் கொண்டு…
Author: admin
திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியின் 18-வது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர், நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (ஏப்.29) யாசகம் பெறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் நகர் மன்றத்தலைவர் நா.குமார் தலைமையில் இன்று நடந்தது. நகராட்சி ஆணையர் (பொ) பால்ராஜ், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டம் தொடங்கியதுமே, 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். மேலும், அதிமுக கவுன்சிலர் தங்கம் பேசும்போது, “எனது 18-வது வார்டுக்கு, பொது நிதியிலிருந்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். எப்போது நிதி கேட்டாலும் பொதுநிதி இல்லை என நகர்மன்ற நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது 8 வார்டுகளுக்கும் பொதுநிதியில் இருந்து ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனது வார்டு மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?…
பெங்களூரு: பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் பேரன் பிறந்த 17 மாதங்களில் டிவிடெண்ட் மூலமாக ரூ.3.3 கோடியை சம்பாதித்துள்ளார். இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும், ரோஹன் மூர்த்தி என்ற மகனும் உள்ளனர். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் இங்கிலாலந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் தம்பதிக்கு ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர், பெங்களூரில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர். பிறந்து 17- மாதமே ஆன ஏகாக்ராவுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு டிவிடெண்டாக மட்டும் ரூ.3.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏகாக்ராவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.04 சதவீத பங்குகள் அதாவது 15 லட்சம் பங்குகள் உள்ளது.…
நாங்கள் பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் எங்கள் நண்பர்கள் என்று அவர்கள் கூறலாம், எல்லோரும் எங்கள் நல்வாழ்வு அல்ல. அவை நம் முகத்தில் இனிமையாகத் தோன்றலாம், ஆனால் எங்கள் முதுகுக்குப் பின்னால் எங்கள் நச்சு பக்கம். இத்தகைய உறவுகள் நீண்ட காலத்திற்கு நமது மன ஆரோக்கியம், சுயமரியாதை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆழமாக பாதிக்கின்றன. யாரும் சரியானவர்கள் அல்ல என்றாலும், சில ஆளுமை வகைகள் உணர்ச்சி ரீதியாக வடிகட்டுதல், கையாளுதல் அல்லது தீங்கு விளைவிக்கும். எனவே, இங்கே நாம் சில வகையான நபர்களை பட்டியலிடுகிறோம், ஒருவர் அறிந்திருக்க வேண்டும், மேலும் விலகி இருக்க வேண்டும்:
அமெரிக்க குடிவரவு வக்கீல்கள் சங்கத்தின் (AILA) தலைவர் கெல்லி ஸ்டம்ப், எண்ணற்ற AILA உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் வழக்கு முயற்சிகள் காரணமாக, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகள் சர்வதேச மாணவர்களின் பதிவுகளை மீண்டும் நிலைநிறுத்துகிறார்கள் என்ற செய்தியை வரவேற்றனர்.அவள், “புதியது பனி கொள்கை அறிவிப்பு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட டஜன் கணக்கான வழக்குகளுக்கு பதிலளிக்கும் விதமாக செவிஸில் சர்வதேச மாணவர்களின் பதிவுகளை மீண்டும் நிலைநிறுத்துவது வரவேற்பு செய்தி. ஏஜென்சி செவிஸில் மாணவர் பதிவுகளை ரத்து செய்யும்போது, சரியான சோதனை சேனல்கள் வழியாகச் செல்லும் போது, அது செவிஸில் மாணவர் பதிவுகளை ரத்து செய்யும்போது மிகைப்படுத்தியது. நாடு மற்றும் உலகம் முழுவதும், மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இன்றும் இப்போதைக்கு ஒரு கூட்டு பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிர்வாகத்தின் குழப்பமான கொள்கைகள் புதிய இயல்பு என்பது ஒரு சோகமான உண்மை. நாம் முன்னேறும்போது, இதுபோன்ற மீறல் மீண்டும் நடக்காது…
புதுடெல்லி: உ.பி.யில் முதல்வர் பயிற்சித் திட்டத்தின் 13 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று குடிமைப்பணி பெற்றுள்ளனர். மேலும் 280 மாணவர்கள், மாநில குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். உ.பி.யில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்வர் அபியுதயா திட்டம் கடந்த 2021 முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சமூக நலத்துறை நடத்தும் இத்திட்டம் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் பயின்ற மாணவர்களில் 13 பேர் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் வென்றுள்ளனர். சமீபத்தில் வெளியான 2024 யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மாநில சமூக நலத்துறை இணை அமைச்சர் அசீம் அருண் கூறுகையில், “உ.பி.யின் 75 மாவட்டங்களில் மொத்தம் 166 அபியுதயா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த பயிற்சித் திட்டமமானது ஒரு கற்றல் தளம் மட்டுமின்றி, மாநில இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகுகள்…
2025-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார். நடப்பாண்டில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்தி செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. 2025-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் நன்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களை தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புத்தாண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு. கடந்த சில மாதங்களாக பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு வரவேற்பு மிகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும்,…
செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொலைதூரம் சென்று உயர்கல்வியை தொடர முடியாத நிலை இருந்த நிலையில், உள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக் க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலி யாகவும் எம்எல்ஏவின் முயற்சியாலும் செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து நடப்பாண்டிலேயே மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ள தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்யூர் வட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பல கி.மீ. பயணித்து செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு போதுமான அளவில் பேருந்து வசதிகளும் இல்லை. இதிலும், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக சுமார் 100 கி.மீ. பயணித் து…
Last Updated : 21 Apr, 2025 12:50 PM Published : 21 Apr 2025 12:50 PM Last Updated : 21 Apr 2025 12:50 PM மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் கடந்த முறை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2023 – 2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘கிரேடு ஏ+’ பிரிவில்…
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3.31 லட்சம் பேர் இந்திய மாணவ, மாணவியர் ஆவர். சுமார் 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்களும் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர். அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் (ஓபிடி) இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அதாவது இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் ஓபிடி திட்டத்தில்…
