புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு, அவர் வீட்டருகே கட்டியுள்ள அப்பா பைத்தியசாமி கோயில், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியிலுள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல இடங்களுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும், மீண்டும் மிரட்டல்கள்: இந்நிலையில் இன்று (ஏப்.29) முதல்வர் ரங்கசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இம்மிரட்டல் இம்மாதத்தில் 2-வது முறையாக வருகிறது. அவர் வீட்டடுக்கு அருகே ரங்கசாமி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் பிரெஞ்சு தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இங்கும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மிரட்டல் வந்து சோதனை நடந்தது. இச்சூழலில் ஜிப்மர் மருத்துவமனைக்கும் மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார்…
Author: admin
சென்னை: ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு அரசு ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அது குறித்து பார்ப்போம். இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் என்பது அதீத வளர்ச்சியை தினந்தோறும் கண்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.2000-க்கு மேலான ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இது ஏற்கப்பட்டால் 18 சதவீதம் என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. பெரும்பாலான டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது நடைமுறைக்கு வந்தால் யுபிஐ பரிவர்த்தனையில் பெரிய மாற்றம் நிகழும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது. “ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது, மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் எந்த அடிப்படையும் இல்லாதது. இப்போது…
சுகாதார கவலைகள் உடனடி ஆறுதல் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டவை. உடலின் இயற்கையான வெப்பநிலை அதிகாலை 4 முதல் 6 மணி வரை குறைகிறது. இது நீடித்த குளிர் காற்று வெளிப்பாட்டுடன் இணைக்கப்படும்போது, இது வறட்சி மற்றும் அரிப்பு உள்ளிட்ட தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது முகப்பரு, மோசமான தோல் தடை மற்றும் குறைந்த ஈரப்பதம் அளவை மேலும் அதிகரிக்கிறது. குறைந்த ஈரப்பதம் கொண்ட தோல் காலப்போக்கில் சுருக்கங்கள், மந்தமான தன்மை மற்றும் இருண்ட புள்ளிகளுக்கு ஆளாகிறது.
570 க்கும் மேற்பட்ட வளாகத் தலைவர்களின் கூட்டணி, பல பாதிக்கப்பட்ட சர்வதேச மாணவர்களுடன், அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் (மாசசூசெட்ஸ் மாவட்டம்) வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, சவால் விடுத்துள்ளது உள்நாட்டு பாதுகாப்புத் துறை’கள் (டி.எச்.எஸ்) சட்டவிரோத வெகுஜன முடித்தல் செவிஸ் ரெக்கார்ட்ஸ் க்கு எஃப் -1 மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) நிரல்.வழக்கு புகார் டி.எச்.எஸ்ஸின் பெரும் முடிவுகளுக்கு கூட்டாட்சி ஒழுங்குமுறையில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் ஐந்தாவது திருத்தத்தின் உரிய செயல்முறை பாதுகாப்புகளை மீறுவதாகவும் வாதிடுகிறது. ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் எச்சரிக்கை, தனிப்பயனாக்கப்பட்ட விளக்கம் மற்றும் பதிலளிப்பதற்கான வாய்ப்பில்லாமல் செல்லுபடியாகும் அந்தஸ்தில் இருந்து அகற்றப்பட்டனர் -பட்டம் பெறுவதற்கு அல்லது தொழிலாளர் தொகுப்பில் நுழைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு வீட்டுவசதி, வேலைகள் மற்றும் கல்விக்கான அணுகல் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும், திறம்பட சேவை செய்யவும் உறுப்பினர் நிறுவனங்களின் திறனையும் இந்தக்…
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, சுற்றுலா தலமான பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு மத்திய உள்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது: வரும் ஜூலை 3-ம் தேதி புனித அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ளது. அப்போது பஹல்காம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல பாதுகாப்புப் படை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.…
சென்னை: இந்தியாவில் விவோ Y29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது விவோ Y29 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது. இந்த போனின் பேட்டரி பேக்-அப் திறன் குறித்தும் விவோ சில தகவல்களை பகிர்ந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 19.7 மணி நேரம் வரையில் யூடியூப் லாங் வீடியோ பிளேபேக், 10 மணி நேரத்துக்கு மேலாக பப்ஜி கேம் விளையாடலாம் என தெரிவித்துள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.68 இன்ச் எல்சிடி…
அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை கடிதமாக எம்எல்ஏக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 2021ம் ஆண்டு முதல் இதுவரை முடிக்கப்பட்ட கட்டிடப் பணிகள், இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டிட விவரங்களை 234 தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: அரசுப் பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களில் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு சார்ந்த கோரிக்கைகள் வரப் பெற்றிருந்த ன. அதில் முதற்கட்டமாக புதிய கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி, நூலகங்களின் விவரம் மற்றும் பணிகள் நடைபெற்று வரும் பள்ளி, நூலகங்களின் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3,497…
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். குர்பாஸ் 26 ரன்களும், சுனில் நரேன் 27 ரன்களும் எடுத்தனர். அஜிங்க்யா ரஹானே 26 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். அணியின் அதிகபட்ச ரன் இதுவாகவே இருந்தது. அடுத்தடுத்து இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள், ரிங்கு சிங் 36, ரஸ்ஸல் 17, ரோவ்மேன் பவல் 5, என 20 ஓவர் முடிவில் 204 அடித்தது கொல்கத்தா அணி. 205 என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் பொரெல் 4 ரன்களுடன் நடையை கட்டினார். மறுமுனையில்…
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில் .24 மணி நேர கெடு முடிந்தும் அமெரிக்கா மீதான 34 சதவீத வரிவிதிப்பை சீனா திரும்பபெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று (மார்ச 28-ம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சின்னக் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது கோமளவல்லி தாயார் சமேத சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். இந்தக் கோயில் யதோக்தகாரி பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி அதிகாலையில் கடந்த 23-ம் தேதி கோயில் கொடிக்கம்பத்தில் பட்டாச்சாரியார்களால் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டது. யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஏற்றிய பிறகு கொடி மரத்துக்கும், உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. மாலையில் பெருமாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார். தேரில் ராஜ…
