பஹ்ரைன்: பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து நேற்று (மார்ச் 21) இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து வெள்ளிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியம் அல் டைன், ஹனான் ஃபர்தான் மற்றும் , பஹ்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரி ஹிஷாம் ஸால் கலீஃபா மற்றும் சல்மான் அல் ஃபாதல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் ஜிகே மற்றும் பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். சுமார் 750 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இந்தியன் கிளப் உப தலைவர் ஜோசப் ஜாய் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அன்பு வணிகக் குழுமத்தின் நிர்வாக…
Author: admin
Last Updated : 21 Apr, 2025 06:25 AM Published : 21 Apr 2025 06:25 AM Last Updated : 21 Apr 2025 06:25 AM ‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை ‘லிஃப்ட்’ இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இடா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்துள் ளார். வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரத்தம் தெறிக்க ஹரிஷ் கல்யாண் நிற்கும் அந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்று வருகிறது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…
தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்க, மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்தாண்டே ஆளும் திமுக களப்பணிகளை தொடங்கிவிட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டம் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி தலைமைக்கு வழங்கிவிட்டனர். இதில் இரண்டு பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற பரி்ந்துரையும் உள்ளது. கட்சியில் இளைஞரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் வழங்குவது என்பதே இதன் நோக்கமாகும். இதில் சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதல்வரும், துணை முதல்வரும் மாவட்ட வாரியாக செல்லும்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி…
புதுடெல்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய பலமே அதன் ஜனநாயகம்தான். எனவே மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும் கூட இந்தியா உலகளவில் மிகப்பெரிய கல்வி மையமாக மாறமுடியும். இது, நமக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். உலகளவில் தற்போது இந்திய பொருளாதாரமானது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நமது பொருளாதாரம் நான்காவது இடத்துக்கு முன்னேறும். அதன்பிறகு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். சர்வதேச நிதிய தகவலின்படி, இந்திய பொருளாதாரத்தின் அளவு தற்போது 4.3 டிரில்லியன் டாலராக (ரூ.367 லட்சம் கோடி) உள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை இந்தியப் பொருளாதாரம்…
யோகா மற்றும் நடைபயிற்சி இரண்டு குறைந்த தாக்க நடவடிக்கைகள், அவை உங்களுக்கு சுகாதார நன்மைகளைத் தருகின்றன. யோகா மற்றும் நடைபயிற்சி இரண்டும் ஒட்டுமொத்த உடற்தகுதிக்கு மிகச் சிறந்தவை, ஆனால் குறிப்பாக உங்கள் கைகள், கால்கள், மன அழுத்த நிவாரணம், எரியும் கலோரிகள் (எடை இழப்புடன்), நேர்மறையான மனநிலையை வளர்ப்பது போன்றவை. யோகா நெகிழ்வுத்தன்மை, வலிமை, சமநிலை மற்றும் மன அமைதியை மேம்படுத்த யோகா உதவுகிறது, நடைபயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, கலோரிகளை எரிக்க உதவுகிறது, மேலும் மோசடி செய்கிறது. சுறுசுறுப்பாக இருக்க இது எளிதான வழிகளில் ஒன்றாகும். ஆனால் எது சிறந்தது?
புதுடெல்லி: பஞ்சாப், ஹரியானா, குஜராத், உ.பி., உத்தரகண்ட் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் மாணவர் விசா விண்ணப்பங்களை “தடை” செய்வதாகக் கூறும் அறிக்கைகளை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.”குறிப்பிட்ட இந்திய மாநிலங்களிலிருந்து இந்திய பல்கலைக்கழக மாணவர் விண்ணப்பங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன அல்லது தடைசெய்யப்பட்டுள்ளன என்ற கூற்று தவறானது” என்று செய்தித் தொடர்பாளர் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம்புது தில்லி கூறினார்.”தற்போது ஆஸ்திரேலியாவில் 125,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் -எந்தவொரு நாட்டிலிருந்தும் இரண்டாவது பெரிய மாணவர்களான -மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்து எங்கள் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களை செயலாக்குகிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கல்வித் துறையில் மிகவும் வலுவான உறவைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா இந்திய மாணவர்களை ஆழமாக மதிப்பிடுகிறது, மேலும் ஆஸ்திரேலிய சமூகங்கள் மற்றும் ஆஸ்திரேலிய சமுதாயத்தை வரவேற்கிறது.இந்திய மாணவர்களுக்கான குடிவரவு விதிமுறைகளை இறுக்குவதில் ஆஸ்திரேலியா அமெரிக்காவிலும் கனடாவிலும் சேர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் பரிந்துரைத்த…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி,…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா 6ஜிபி…
சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பொறியியல் பிரிவில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், இசிஇ, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல், டிப்ளமா மற்றும் இளநிலை பட்டம் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் (https://nats.education.gov.in) ஏப்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 35-வது ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. இதைத் தொடர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம், ஐபிஎல் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
