நடிகர் ‘8 தோட்டாக்கள்’ ‘வெற்றி’, நாயகனாக நடிக்கும் படத்தை ‘வெப்’ மற்றும் ‘7/ஜி’ படங்களை இயக்கிய ஹாரூன் இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை அக்ஷிதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி எனபலர் நடிக்கின் றனர். ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன், மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜான் ராபின்ஸ் இசைஅமைக்கிறார். கே.வி.கிரண் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் பற்றி இயக்குநர் ஹாரூன் கூறும்போது, “இதில் ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக, வெற்றி மீண்டும் நடிக்கிறார். அவர் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார். அதிக சஸ்பென்ஸ்களை கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக் கானல், சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது” என்றார்.
Author: admin
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி நேரமில்லா நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், நேற்று சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான நோக்கம் குறித்து அதற்கான விளக்க உரையில், ‘‘தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகமானது, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி திருவாரூர் ஆகிய 8 மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த…
சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்தை நெருங்கியிருப்பது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.71,360-க்கும், கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, ரூ.8,920-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.77,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு தொடங்கி மூன்றரை மாதத்தில் மட்டும்…
நகர-மாநிலத்திற்கு ஒரு விமானத்தின் போது ஒரு பெண் கேபின் குழு உறுப்பினரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை 20 வயதான இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது என்று பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பிப்ரவரி 28 அன்று மதியம் 12.05 மணியளவில் (உள்ளூர் நேரம்) 28 வயதான குழு உறுப்பினர் ஒரு பெண் பயணிகளை கழிவறைக்கு அழைத்துச் சென்றபோது. அவள் தரையில் ஒரு திசு காகிதத்தைக் கண்டாள், அதை எடுக்க கீழே குனிந்தாள். அந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் அவளுக்குப் பின்னால் வந்து, அவளைப் பிடித்து, அவனுடன் கழிவறைக்குள் தள்ளியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.வாக்கெடுப்புதற்போதைய சட்டங்கள் கேபின் குழு உறுப்பினர்களை தாக்குதலில் இருந்து போதுமான அளவு பாதுகாக்கின்றன என்று நீங்கள் நம்புகிறீர்களா?கூறப்படும் செயலைக் கண்ட பெண் பயணிகள் தலையிட்டு, குழு உறுப்பினருக்கு கழிவறையிலிருந்து வெளியேற உதவும் வரை நிலைமை அதிகரித்தது. இந்த விவகாரம் விரைவில் கேபின் மேற்பார்வையாளருக்கு…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்து தகர்த்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் 4 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தீவிரவாதிகள் அடில் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அனந்தநாக் பகுதியில் உள்ள அடில் வீட்டிலும், அவந்திபோரா பகுதியில் உள்ள ஆசிப் வீட்டிலும் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெடிப்பொருட்களை பாதுகாப்புப் படை வீரர்கள் வெடிக்க செய்தனர். இதில் ஒரு வீடு தரைமட்டமானது. மற்றொரு தீவிரவாதியின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரை சேர்ந்த அடில் கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு…
சென்னை: இந்தியாவில் விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த போனுடன் விவோ எக்ஸ்200 புரோ மாடல் போனும் அறிமுகமாகி உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது விவோ எக்ஸ்200 சீரிஸ் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்100 போனை விவோ அறிமுகம் செய்திருந்தது. அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பாக எக்ஸ்200 வெளிவந்துள்ளது. இது விவோவின் ஃப்ளக்-ஷிப் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்200: சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 9400…
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், துறை இயக்குநர் ச.கண்ணப்பனுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கு 2020 மார்ச் 10-ம் தேதிக்கு முன்பு சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டு என கோரப்பட்டுள்ளது. இந்த கருத்துருவை பரிசீலனை செய்ததில் மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு 2021 மார்ச் 30-ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துஉத்தரவிடப்பட்டது. தற்போது இந்தக் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதாலும் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு தற்போது முன்…
லிமா (பெரு): ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றார். பெரு நாட்டின் லிமா நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா 252.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவருக்கு வெள்ளி கிட்டியது. இதே பிரிவில் சீன வீரர் ஷெங் லிஹாவோ முதலிடமும், ஹங்கேரி வீரர் இஷ்த்வான் பெனி 3-வது இடமும் பிடித்தனர்.
அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபில் பொச்சசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் கோயில் (பிஏபிஎஸ் கோயில்) உள்ளது. இது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பக்தி மற்றும் உலகளாவிய இந்து பெருமையின் அடையாளமாக விளங்குகிறது. இந்நிலையில், பிஏபிஎஸ் கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணி முதல் 12 மணி வரை ராமர் பஜனையும் அதன் பிறகு ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் ஆரத்தியும் நடைபெற்றது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பக்தி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த ராமர் மற்றும் சுவாமி நாராயண் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அமைதி, ஒற்றுமை மற்றும் இந்து மத…
பஹ்ரைன்: பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து நேற்று (மார்ச் 21) இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து வெள்ளிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியம் அல் டைன், ஹனான் ஃபர்தான் மற்றும் , பஹ்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரி ஹிஷாம் ஸால் கலீஃபா மற்றும் சல்மான் அல் ஃபாதல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் ஜிகே மற்றும் பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். சுமார் 750 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இந்தியன் கிளப் உப தலைவர் ஜோசப் ஜாய் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அன்பு வணிகக் குழுமத்தின் நிர்வாக…
