Author: admin

’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் மதிமாறன் தெரிவித்துள்ளார். ’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘மண்டாடி’ குறித்து இயக்குநர் மதிமாறன் பேசும் போது, “சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.” என்று பேசினார் மதிமாறன். இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை…

Read More

சென்னை: கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து 20 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: இந்த துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். வாடகை கட்டிடங்களில் இயங்கும் 7 கல்லூரி மாணவியர் விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் சொந்தக் கட்டிடங்கள் கட்டித் தரப்படும். மேலும், ரூ.3 கோடியில் 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்கப்படும். அதேபோல், அனைத்து விடுதிகளுக்கும் சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும். கல்லூரி விடுதிகளில் மாணவர் எண்ணிக்கையானது ரூ.1.46 கோடியில் உயர்த்தப்படும். இதன்மூலம் 885 மாணவிகள் பயனடைவார்கள். விடுதி மாணவர்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு…

Read More

அரூர்: அரூர் பகுதியில் விலைவீழ்ச்சியால் தர்பூசணி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நரிப்பள்ளி, சிக்கலூர், கோட்டப்பட்டி, பையர்நாய்க்கன்பட்டி, புது கொக்கராப்பட்டி, மாலகாபாடி, வாச்சாத்தி, தாதம்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, முத்தனுார், கம்பைநல்லூர், மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் தர்பூசணி (பச்சை மற்றும் கிரண்) பழச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. வழக்கமாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜுன் மாத சீசனுக்காக 350 ஏக்கருக்கும் அதிகமாக தர்பூசணி பயிரிடப்படும். இதில் போதிய வருவாய் கிடைப்பதால் ஆண்டு முழுவதும் சிலப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சேலம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், உள்ளூர் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுகிறது. வழக்கமாக கோடை சீசனில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகும். ஆனால், நடப்பாண்டு தர்பூசணியில் ஊசி மூலம் நிறமேற்றப்படுவதாக சமீபத்தில் பரவிய தகவல்களால்…

Read More

குடிவரவு வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, உள்வரும் பயணிகளின் மின்னணு சாதனங்களைத் தேடுவதில் ஒரு முன்னேற்றம் உள்ளது அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) அதிகாரிகள். இருப்பினும், பெரும்பாலான தேடல்கள் அடிப்படை. இந்த பின்னணியில், அமெரிக்க குடிவரவு வக்கீல்கள் சங்கம் (AILA) மற்றும் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் (ACLU) போன்ற பல அமைப்புகள் கேள்விகளை வெளியிட்டுள்ளன. சிபிபி வலைத்தளமும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.இந்த தேடலுக்கு உட்பட்ட விசா -ஹோல்டர்கள் மட்டுமல்ல, இது பசுமை அட்டை வைத்திருப்பவர்களையும் அமெரிக்க குடிமக்களையும் கூட மறைக்க முடியும் -ஆனால் அவர்களின் உரிமைகள் வேறுபடுகின்றன. இங்கே ஒரு பயனுள்ள வழிகாட்டி:கேஜெட்களைத் தேட சிபிபிக்கு சக்தி இருக்கிறதா?ஆம், சட்டபூர்வமான நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவிற்குள் நுழையும் எவருக்கும் மின்னணு சாதனங்களை (தொலைபேசிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற கேஜெட்டுகள் உட்பட) தேட அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த தேடல்கள் அமெரிக்க நில குறுக்குவெட்டுகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஏற்படலாம்.…

Read More

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து விரிவான முறையில் விவாதிக்க ஏப்ரல் 28-ல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019, பிரிவு 18(1)-ன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை 10.30 மணிக்கு பேரவை கூடும். இவ்வாறு உத்தரவில் கூறப்பபட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பிறகான நிலவரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” என்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்ட ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த புன்கிழமை துணை…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் டிசம்பர் 11 முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. சிறப்பு அம்சங்கள் 6.82 இன்ச் எல்டிபிஓ AMOLED Q10 டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் நான்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் 6,000mAh பேட்டரி 120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது.…

Read More

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 காலியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதினர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) கூட வெளியிடப்படவில்லை. தேர்வு முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் உடனடியாக கீ ஆன்ஸரை வெளியிட வேண்டும் என்றும் அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று தேர்வெழுதிய ஆசிரியர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தொடக்கக்கல்வி இயக்ககம் நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர்…

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் இறங்கிய சிஎஸ்கே அணி 177 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை தொடங்கினர். ரஷீத் 19 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களும் எடுத்தனர். புதியவரான ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். அடுத்து இறங்கிய ஜடேஜா, துபே இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் தோனி, ஜேமி ஓவர்டன் இருவரும் தலா 4…

Read More

ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய வீடியோவை அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதிப்படைந்த அமெரிக்கா சமீப காலமாக ஏமனில் உள்ள ஹவுதி படைகளை குறிவைத்து தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில், குழுவாக நின்றிருந்த ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி கொல்லும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் ஹவுதி படையினர் என்றும், அவர்கள் கட்டளைக்காக அங்கு கூட்டமாக காத்திருந்ததாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், அய்யோ, இனி இந்த ஹவுதிகளால் நமது கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த தாக்குதல்…

Read More

சென்னை: “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) வினா – விடை நேரத்தின்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் முதலாம் ராஜேந்திர…

Read More