சென்னை: அமைச்சரவையில் விடுவிக்கப்பட்ட பொன்முடி, செந்தில்பாலாஜி இருவரும் 2-வது நாளாக பேரவைக்கு வரவில்லை. தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் முதல் வரிசையில் இருந்த பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்த செந்தில்பாலாஜி பெயரும் நீக்கப்பட்டு, 3-வது வரிசைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் பேரவைக்கு வரவில்லை. இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான நேற்று இருவரும் பேரவைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் இருவரும் பேரவைக்கு வரவில்லை. அதேநேரம், அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்று பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Author: admin
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8815-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சற்றே குறைந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.16) மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8815-க்கும், பவுனுக்கு ரூ.760…
அதை எதிர்கொள்வோம்: நாங்கள் நாய்களை வணங்குவதைப் போலவே, எங்கள் உடைகள், தளபாடங்கள் மற்றும் தளங்களில் ரோமங்களுக்கு எதிரான தொடர்ச்சியான போர் சோர்வடையும். உரோமம் இல்லாமல் ஒரு கோரை தோழரைப் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! எந்தவொரு நாய் முழுவதுமாக சிந்திக்கப்படவில்லை என்றாலும், சில இனங்கள் அவற்றின் குறைந்தபட்ச உதிர்தலுக்கு பெயர் பெற்றவை, இது ஒவ்வாமை பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது தூய்மையான வீட்டை விரும்புவோருக்கு ஏற்றதாக அமைகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தை 21 வயதான இளங்கலை இந்தியரை நாடு கடத்துவதை அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிகமாக தடுத்துள்ளார், அதன் மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது.கிருஷ் லால் இசெர்டாசனி இல் இளங்கலை பட்டம் பெற்று வருகிறார் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம் 2021 முதல் ஒரு எஃப் -1 மாணவர் விசாவுடன். நீதிமன்ற ஆவணங்கள் “நல்ல கல்வி நிலைப்பாட்டைப் பராமரித்து, இசெர்டாசனி இப்போது தனது மூத்த ஆண்டின் இறுதி செமஸ்டரில் உள்ளது, இது பட்டப்படிப்பு வரை 30 நாட்களுக்குள் மீதமுள்ளது.””நவம்பர் 22, 2024 அன்று அவர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொள்கிறார்” என்று இசெர்டசானி ஒப்புக்கொள்கிறார் “என்று ஆவணங்கள் தெரிவித்தன, ஆனால் வழக்கை மறுபரிசீலனை செய்த பின்னர் குற்றச்சாட்டுகளைத் தொடர வழக்கறிஞர் மறுத்துவிட்டார். பி.டி.ஐ அறிவித்தபடி அவரது விசா ரத்து தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. “ஒழுங்கற்ற நடத்தைக்காக இசெர்டாசனி கைது செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை மறுபரிசீலனை செய்தபின் மாவட்ட வழக்கறிஞர்…
தனியார் பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து கட்டண நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தவும் அதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய சட்டம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லி அரசு ஒரு துணிச்சலான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நடத்தும் 1,677 பள்ளிகளில் கட்டண நிர்ணய நடைமுறை மற்றும் வழிகாட்டுதலை இந்த சட்டம் அளிக்கும். அரசால் இதுபோன்ற ஒரு சட்டம் கொண்டு வரப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை” என்றார். கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் கூறுகையில், “புதிய விதிகளை நடைமுறைப்படுத்த 3 குழுக்கள் அமைக்கப்படும்.…
சென்னை: சென்னையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ‘உமாஜின் 2023’ என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடத்தபப்ட்டது. அதைத்தொடர்ந்து ‘உமாஜின் 2024’ நடப்பாண்டில் நடைபெற்று, பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மூன்றாம் முறையாக ‘உமாஜின் 2025’ சர்வதேச தொழில்நுட்ப மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளியிட்ட பதிவில்: “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற முதல்வர் ஸ்டாலினின் இலக்கை நோக்கி தமிழகத்தை தயார்ப்படுத்த, உலக அவிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கொள்ளை வகுப்பாளர்கள், முன்னணி தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் என அனைவரையும் ‘உமாஜின்’ தொழில்நுட்ப மாநாடு ஒன்றிணைத்து…
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன்பின் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் (மார்ச் 27) நிறைவு பெறுகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272சிறை கைதிகளும் அடங்குவர். பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர்…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்தார். போட்டி முடிவடைந்ததும் அவர் கூறியதாவது: முதல் பந்தில் சிக்ஸர் விளாசுவது என்பது எனக்கு சாதாரண விஷயம். நான் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளேன், மேலும் உள்ளூர் அளவிலும் விளையாடியுள்ளேன்,…
திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாக இந்தியா – சீனா இடையே உறவுகள் பாதித்ததாலும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்திய யாத்தீரிகள் சீன எல்லையை கடந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். இதையடுத்து இந்தியா – சீனா இடையேயான உறவுகள் சீரடையத் தொடங்கின. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இருதரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-அம்ச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் திபெத் வருவதை ஊக்குவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்பின் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சீனா சென்றார். இதைத்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்கிறார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த குளத்தில் அட்சய திருதியை தினத்தில் (இன்று) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார். இந்த விழாவை காண வருபவர்கள் கோயில் தெற்கு வாசல் வந்து நவராத்திரி மண்டபம் வழியாக பார்வையாளர் இடத்துக்கு வர வேண்டும். அங்கிருந்து திருக்குளத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியையும் பொதுமக்கள் காணலாம். ஆதீனங்கள், சந்நியாசிகள் ஆகியோர் திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் தெப்பலில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகர்கள் பார்வையிட தெற்கு கோபுர வாயில் பகுதியிலும், பத்திரிகையாளர்கள் செய்திகளை…
