ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியை ஏற்றினார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், ராமேசுவரம் வேர்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழப்பாணம் முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை நடைபெற்றன. இரவில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க இந்திய…
Author: admin
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது, “ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். நான் இயக்கிய ‘இறைவி’ படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன் சுதந்திரத்தை ஏன் ஓர் ஆணிடம் ஒப்படைக்கிறாள் என்ற கேள்வி என் சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என் மனைவி கூட ஏன் வன்முறையான படங்களை எடுத்துக் கொண்டே…
பிரதானக் கட்சிகளின் தலைமைகள் எல்லாம் 2026 தேர்தலுக்கான கூட்டணிகளை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தோதான தொகுதிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியை கூட்டணித் தலைமையிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறுவது வழக்கம். அதன்படி கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுக. கடந்த முறை காங்கிரஸுக்கு மொத்தம் 25 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இதில் தென் மாவட்டங்களில் மட்டுமே மேலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, காரைக்குடி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, சிவகாசி, ஆகிய 11 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் மேலூர், ஸ்ரீவில்லிபுத்தூரைத் தவிர மற்ற 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்த நிலையில், இம்முறை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியான மேலூரை தவிர்த்துவிட்டு மதுரை நகருக்குள் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில்…
மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கான கட்டணங்களை தற்போது தளர்த்தியதால் சர்வதேச சந்தைகளில் நிலவிய இணக்கமான சூழலால் இந்திய பங்குசந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. மும்பைப் பங்குச்சந்தையில் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,750.37 புள்ளிகள் உயர்ந்து, 76,907.63 ஆக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 539.80 புள்ளிகள் உயர்ந்து 23,368.35 ஆக இருந்தது. சென்செக்ஸை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்திருந்தன. எல் அண்ட் டி, ஹெடிஎஃப்சி வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இண்டஸ்இன்ட் வங்கி நிறுவன பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. அதேநேரத்தில், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே மற்றும் கோடாக் மகேந்திரா வங்கி நிறுவன பங்குகள் சரிவில் இருந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி, டோக்கியோவின் நிக்கேய் 225, ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் லாபத்தில் இருந்தது. இதனிடையே ஷங்காயின் எஸ்எஸ்இ சரிவில் இருந்தது.…
அவர்கள் உங்களைப் பின்பற்றுகிறார்கள்குழந்தைகள் விரைவாக மாற்றியமைக்கவும் உள்வாங்கவும் கற்றுக்கொள்கிறார்கள், குறிப்பாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து சில நடத்தைகள். அவர்கள் வீட்டில் கிண்டல் அல்லது உறுதியைக் கேட்டால், இது மக்களுக்கு அவமரியாதை என்று உணராமல் அதை வெளியே பிரதிபலிக்க முயற்சிக்கலாம்.
சட்டவிரோதமானது மீது பெரும் ஒடுக்குமுறையில் சூதாட்ட நடவடிக்கைகள் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூ ஜெர்சி கவுன்சிலன் ஆனந்த் ஷா இரண்டு ஆண்டு விசாரணையைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 39 நபர்களில் பெயரிடப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகள் கூறுகையில், லூசீஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குடும்பத்துடன் பிணைக்கப்பட்டு, சட்டவிரோத வருமானத்தில் million 3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்டியது.நியூ ஜெர்சி அட்டர்னி ஜெனரல் மாட் பிளாட்ட்கின் வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுகளை அறிவித்தார், ஷா -ப்ராஸ்பெக்ட் பூங்காவில் ஒரு கவுன்சில் உறுப்பினரை அடையாளம் கண்டுகொண்டார் – மற்றும் மோசமான ஜார்ஜ் சப்போலா லூசீஸ் க்ரைம் குடும்பம்ஆய்வில் மைய புள்ளிவிவரங்கள்.”2025 ஆம் ஆண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை விட வித்தியாசமாகத் தோன்றலாம்” என்று பிளாட்ட்கின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது NYT ஆல் மேற்கோள் காட்டினார், “குறிப்பாக ஆன்லைன் கூறுகளுக்கு நன்றி, மற்றும் சில மொழிகள் மாறியிருக்கலாம், ஆனால் அதே பழைய கதை:…
பெங்களூரு: கர்நாடகா மங்களூருவை சேர்ந்த பெண் மருத்துவர் நாட்டுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் பணியாற்றிய தனியார் மருத்துவமனை அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 34 வயதான பெண் மருத்துவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அண்மையில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பதிவிட்டு இருந்தார். அதில் மத்திய அரசையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தொடர்புப்படுத்தி எழுதி இருந்ததாக தெரிகிறது. இதற்கு ஶ்ரீராம் சேனா, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்ததுடன், அவர் பணியாற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து மங்களூரு தெற்கு போலீஸார் அவர் மீது நாட்டுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.…
சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X8 ஸ்மார்ட்போன் சீரிஸ்களை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ Find X8 புரோ மற்றும் ஒப்போ Find X8 போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் Find X8 ஸ்மார்ட்போன் சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போவின் ப்ரீமியம் சீரிஸ் போனாக இது வெளிவந்துள்ளது. Find X8 சிறப்பு அம்சங்கள் 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 9500 எஸ்ஓசி ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 5,630 mAh சிலிக்கான்…
போட்டித் தேர்வுகளில் நுண்ணறிவு (Rea soning), அறிவுக்கூர்மை (General Intelligence) பகுதிகளில் பொதுவாக ஆங்கில எழுத்துகள் தொடர் வரிசை, எண்கள் தொடர் வரிசை, அகராதிப்படி வரிசையிடல், குறியிடுதல் – மறு குறியிடுதல், திசைகள், தரங்கள், ரத்த உறவுகள், கடிகாரம், காலண்டர் புதிர்கள், ஒத்த தன்மை, கருத்தியல், வெண் படங்கள், பகடை, கனங்கள் போன்ற தலைப்புகளில் வினாக்கள் அமைந்திருக்கும். தயாராவது எப்படி? – ஒத்த தன்மை (Analogy) வினாக்களில் இரு வேறுபட்ட வார்த்தை களை ஒன்றோடு மற்றொன்று தொடர்புப்படுத்தி மூன்றாவது வார்த்தை கொடுக்கப்பட்டு, அந்த வார்த்தையுடன் எந்த வார்த்தை தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கேட்கப் பட்டிருக்கும். இந்தப் பகுதியில் ஆண் இனம் – பெண் இனம், நாடு – தேசிய விளையாட்டு, நாணயம் – நாடாளுமன்றம், உயிரி – இளம் உயிரி, விலங்கு – குரல், இருப்பிடம், வேலை செய்பவர் – வேலை நிகழுமிடம், வார்த்தை – பாடம், கருவி – செயல்பாடு…
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் விமர்சனத்துக்குள்ளாகினர். மேலும், பயிற்சியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அபிஷேக் நாயர் நீக்கம் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர், ஐபிஎல் தொடரில் கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அபிஷேக் நாயர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். 8 மாதங்களிலேயே அவர், நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி பட்டம் வென்ற போது அபிஷேக்…
