தனது ஆட்சியின் மிக ஆழமான தனிப்பட்ட தருணங்களில் ஒன்றில், மன்னர் சார்லஸ் யாரும் கேட்க விரும்பாத வார்த்தைகளைக் கேட்பது போல் உண்மையில் உணர்ந்ததைப் பற்றி திறந்து வைத்திருக்கிறார்: “உங்களுக்கு புற்றுநோய் உள்ளது.” அவரது செய்தி, ஒரு வரவேற்பின் போது பகிரப்பட்டது புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் பக்கிங்ஹாம் அரண்மனையில், ஒரு அரச அறிக்கை மட்டுமல்ல – இது பாதிப்பு, வலிமை மற்றும் நன்றியுணர்வின் மனித வெளிப்பாடு.பிப்ரவரி 2024 இல் அறியப்படாத புற்றுநோயால் கண்டறியப்பட்ட ராஜா தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். ஆனால் அவரது உடல்நலத்தின் விவரங்களை விட, அவரது உணர்ச்சி நேர்மையே பலரைத் தொட்டது. அவர் சிம்மாசனத்திலிருந்து பேசவில்லை; அவர் அனுபவத்திலிருந்து பேசினார் – பயத்தை அறிந்த ஒருவர், காத்திருப்பைப் புரிந்துகொள்கிறார், உதவி வழங்கும் ஒவ்வொரு கையையும் மதிக்கிறார்.புற்றுநோயைக் கண்டறிவதன் யதார்த்தத்தை விவரிக்க “அச்சுறுத்தும்” மற்றும் “பயமுறுத்தும்” என்ற சொற்களைப் பயன்படுத்துவதிலிருந்து ராஜா பின்வாங்கவில்லை. அது அவரைப் பற்றி மட்டுமல்ல. இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும்…
Author: admin
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புதன்கிழமை அன்று சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 8-வது தோல்வியாக அமைந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே தரப்பில் சாம் கர்ரன் 88 ரன்கள் விளாசினார். டெலவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹாட்-ட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சஹல். ஒரு கட்டத்தில் சென்னை அணி 200+ ரன்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19-வது…
இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையிலே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி குறித்து பாகிஸ்தான் நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கானின் கருத்து கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆவேசமாக அவர் தெரிவித்த கருத்து வைரலாகி உளள்து. “அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள். முதல் அஸானை (பிரார்த்தனை) பாகிஸ்தான் ராணுவ தலைவர் வழங்குவார். மேலும், சீக்கிய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானை தாக்க மாட்டார்கள். ஏனெனில், பாகிஸ்தான் குறு நானாக்கின் மண். இந்தியா அச்சுறுத்தினாலும் சீக்கியர்கள் தக்க மாட்டார்கள்” என அவர் கூறியுள்ளார். “சிந்து நதி எங்களுடையது… அது எங்களுடையதாகவே இருக்கும். ஒன்று எங்கள் தண்ணீர் அதில் பாயும், அல்லது இந்தியர்களின் ரத்தம் பாயும்” என முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அண்மையில்…
சென்னை: தமிழக அரசின் ‘நம்ம சென்னை நம்ம சந்தை’ அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள், பழங்கள் செம்மொழிப் பூங்காவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மக்களுக்கு பாரம்பரிய பசுமையான காய்கறிகள், பழங்கள் கிடைக்கச் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் “நம்ம சென்னை நம்ம சந்தை” என்ற அங்காடி 2024-ல் தொடங்கப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தற்போது அனைத்து நாட்களிலும் செயல்பட்டுவருகிறது. இவ்வங்காடியில் பாரம்பரிய காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் விளைவிக்கப்படும் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், பழங்கள், மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள், பழங்கள், ஆகியன உழவர்களின் விளைநிலங்களிலிருந்து தோட்டக்கலைத் துறையின்…
புதுடெல்லி: 26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவற்காக 45 மிக்-29கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்டவை. ஆனால், இந்த விமானங்களுக்கான சர்வீஸில் கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகள் எழுந்தன. கடற்படை பயன்பாட்டுக்கான போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுக்கு மேல் ஆகும். அதனால் பிரான்ஸிடமிருந்து 26, ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க கடற்படை முடிவு செய்தது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இந்த விமானங்களை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம்…
தர்பூசணி விதைகள், பழத்தை சாப்பிடும்போது பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன, உண்மையில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தால் நிரம்பிய ஊட்டச்சத்து சக்தி இல்லங்கள். உலர்ந்த அல்லது வறுத்தெடுக்கும்போது, அவை ஒரு நொறுங்கிய, பல்துறை, மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சிற்றுண்டாக மாறும். தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், எச்.டி.எல் கொழுப்பின் அளவை அதிகரிப்பதன் மூலமும் தர்பூசணி விதை எண்ணெய் லிப்பிட் சுயவிவரங்களை சாதகமாக பாதிக்கும், இது இதய ஆரோக்கிய நன்மைகளை பரிந்துரைக்கிறது. இந்த விதைகளை நீங்கள் நிராகரித்திருந்தால், அவற்றின் நன்மைகளைப் பாருங்கள், இனிமேல் அவற்றை ஆரோக்கியமான சிற்றுண்டாக சேமித்து உட்கொள்ளத் தொடங்குகிறது.
சென்னை: ‘தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தனர். நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பாஜக. அரசு நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் தொழிலாளர் விரோத போக்கு இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள்…
புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான நிதின் காமத் நேற்று கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் சில்லறை முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்படும் ஒரு பெரிய வீழ்ச்சியானது, சில்லறை முதலீட்டாளர்களை பல ஆண்டுகளுக்கு பங்குச் சந்தைகளிலிருந்து விலக்கி வைக்கும். 2008-ம் ஆண்டில் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு பிறகு இதே நிலைமைதான் ஏற்பட்டது. 2008-ல் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக மிகப்பெரிய அளவில் உலகில் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதுபோன்று மீண்டும் நடந்தால் சில்லறை முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிடுவர். இவ்வாறு நிதின் காமத் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் 2008-ம் ஆண்டு மிகவும் மோசமான அமைந்தது. இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் நஷ்டம்…
உயர்-ஓலிக் பதிப்புகள் சிறந்தவை என்றாலும், வழக்கமான சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயில் அதிகப்படியான ஒமேகா -6 கள் உள்ளன, மேலும் அதன் புகை புள்ளிக்கு மேலே வெப்பமடையும் போது நச்சுத்தன்மையடைகின்றன. வெப்பமடையும் போது, இந்த கொழுப்புகள் எளிதில் ஆக்ஸிஜனேற்றுகின்றன, நச்சு ஆல்டிஹைடுகள் மற்றும் இலவச தீவிரவாதிகளை உருவாக்குகின்றன, அவை வீக்கம், புற்றுநோய் மற்றும் இதய நோயுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சுத்திகரிப்பு செயல்முறையில் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழிக்கும் டியோடரைசிங், ப்ளீச்சிங் மற்றும் ஹெக்ஸேன் போன்ற வேதியியல் கரைப்பான்கள் அடங்கும்.
சென்னை: “தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு…
