புதுடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும், நாடு முழுவதும் தொழில்முனைவை ஊக்குவிப்பதிலும் முத்ரா திட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது. விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த தனிநபர்களுக்கு இந்தத் திட்டம் நிதி ஆதரவை வழங்கியுள்ளது. உத்தரவாதங்கள் அல்லது விரிவான ஆவணங்கள் தேவைப்படாமல் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க இது அவர்களுக்கு உதவுகிறது. முத்ரா திட்டம் அமைதிப் புரட்சியை கொண்டு வந்துள்ளது. தொழில்முனைவு குறித்த சமூக அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.…
Author: admin
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி. ரவீந்திரநாத், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி, காந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். தேர்தல் ஆணையம் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஓ.பி.ரவீந்திரநாத், வழக்கறிஞர் ராஜலட்சுமி மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. விசாரணைக்குப்…
புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போரில் இந்திய பொருளாதாரத்துக்கு சில சாதகமான சூழல் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி என்பது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் சிறியதுதான். ஆம், இந்த வரிவிதிப்புகளின் மூலம் சில விளைவுகள் ஏற்படும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடினமான சூழலை உருவாக்கும். ஆனால் நமது பொருளாதாரத்தின் தன்மையையும் நமது வளர்ச்சியையும் அது பெரியளவில் மாற்றப் போவதில்லை. கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி இந்தியா தனது பார்வைகளை விரிவுபடுத்தவும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணியை மீண்டும் கையில் எடுக்கவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடனான தொடர்புகளை மீண்டும் பார்வையிடவும் இது ஒரு நல்ல நேரம். கூடவே ஜப்பானையும், சீனாவையும் அணுக வேண்டும். வர்த்தகங்களிடையே மிகவும் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணம் இது. மேலும்…
நாய்கள் ஒரு மனிதனின் சிறந்த நண்பர் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது, சரியாக. எங்கள் உரோமம் நண்பர்கள் எங்களுக்கு நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் வழங்குகிறார்கள், இது அவர்களை நம் வாழ்வில் விலைமதிப்பற்றதாக ஆக்குகிறது. இருப்பினும், ஒரு நாயை சொந்தமாக்கும்போது, சிலருக்கு இது ஒரு முதலீடு. பெரும்பாலான நாய்கள் நியாயமான விலைக் குறிச்சொற்களுடன் வந்தாலும், சில இனங்கள் மிகவும் அரிதானவை மற்றும் தனித்துவமானவை, அவற்றின் விலை ஸ்கைரோக்கெட்டுகள். இந்த இனங்கள் அவற்றின் தனித்துவமான பண்புகள் மற்றும் பாவம் செய்ய முடியாத வம்சாவளிகளுக்கு பெயர் பெற்றவை. உலகில் இதுபோன்ற மிகவும் விலையுயர்ந்த சில நாய்களை இங்கே பட்டியலிடுகிறோம், அவற்றை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறோம்:
சென்னை: ‘‘முறையாக அனுமதி பெற்று கட்டப்படும் வழிபாட்டு தலங்களுக்கு தடையாக இருக்கும் சக்திகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், நேற்று நடைபெற்ற பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசும்போது, ‘‘தமிழகத்தில் கிறஸ்தவர்கள் 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் என ஏறக்குறைய 20 சதவீதம் பேர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர். தேவாலயங்கள், மசூதிகள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை. குறிப்பாக, கன்னியாகுமரியில் பட்டா நிலங்களில் மசூதிகள், தேவலாயங்கள் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை’’ என்றார். அதற்கு பதில் அளித்துப் பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டு தலங்களை கட்ட தடை ஏற்படுவதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்கலும் பட்டா…
சென்னை: தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் இன்று (ஏப்.9) மீண்டும் உயர்ந்தது. அதன்படி சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8290-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.102-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,02,000-க்கும் விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.2,680 வரை குறைவு: தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சற்றே ஆறுதல் தரும் விதமாக கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280, ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720, ஏப்ரல் 7-ம் தேதி…
சென்னை: தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிக திராவிடகழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றார். மேலும், கூட்டணி குறித்து தேர்ந்தல் நெருங்கும்போது முடிவெடுக்கப்படும் என்று கூறினார். முன்னதாக, தேமுதிக – தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள்…
மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டை ‘நடுநிலை’ என்பதிலிருந்து ‘இணக்கம்’ என்ற நிலைக்கு மாற்றியுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதே நிதியாண்டுக்கான…
சென்னை: கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; நெஞ்சம் கலங்கினேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை: பணவீக்கத்தை விட பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தான் அதிக கவலை கொண்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று 6% ஆக குறைத்தது. ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 6.25% இலிருந்து 6% ஆகக் குறைத்துள்ளது. புதிய…
