புதுடெல்லி: உணவு விநியோகம், ஐஸ்க்ரீம் தயாரிப்பு போன்றவைகளில் இருந்து செமிகன்டெக்டர், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் பக்கமும் கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை வழங்கினார். மேலும் ஸ்டார்ட் அப் துறையில் அதிக இந்திய முதலீட்டாளர்களின் தேவையையும் அமைச்சர் வலியுறுத்தினார். வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்டார்ட் அப் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய ஸ்டார்ட் அப் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் உணவு விநியோக செயலிகளில் மட்டும் கவனம் செலுத்தி வேலையில்லாத இளைஞர்களை குறைந்த கூலிகளாக மாற்றியுள்ளோம். இதனால், பணக்கார்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமலேயே உணவு கிடைக்கிறது. இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா? இது ஸ்டார்ட் அப் இல்லை. இதற்கு பெயர் தொழில்முனைவு.…
Author: admin
நிபுணர்களைப் பொறுத்தவரை, பயோஆக்டிவ் சேர்மங்களின் வளமான உள்ளடக்கம் காரணமாக, வெண்ணெய் தோல்கள் சாப்பிட பாதுகாப்பானவை மற்றும் ஆரோக்கியமானவை. எல்லாவற்றிற்கும் மேலாக, பழத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், அது மிக வேகமாக பழுக்காமல் பாதுகாக்கிறது. ஆப்பிள் அல்லது மாம்பழத்தைப் போலன்றி, வெண்ணெய் தோல் நார்ச்சத்து மற்றும் தடிமனாக இருக்கும். மேலும், இது மிகவும் கசப்பானது மற்றும் சுவையில் விரும்பத்தகாதது. அறிக்கையின்படி, பல பழங்களைப் போலவே, வெண்ணெய் பழத்தின் வெளிப்புற தோலும் வைட்டமின்கள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றிகள், பினோல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இருண்ட நிறம், அதிக ஊட்டச்சத்து செறிவு.
மும்பை: மனிதநேயத்துக்கு எதிரான போக்குகளிலிருந்து இளம் தலைமுறையினரை நாம் காப்பாற்ற வேண்டும் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று மகாராஷ்டிரா மாநிலம் உருவான நாள். அனைத்து மராத்தி சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இன்றைய நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளனர். உலகளாவிய படைப்பாற்றலின் உலகளாவிய திறமைகள் ஒன்றிணைந்துள்ளன. WAVES என்பது வெறும் சுருக்கெழுத்து அல்ல, அது உண்மையிலேயே கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய இணைப்பின் அலை. திரைப்படங்கள், இசை, விளையாட்டு, அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவை இந்த அலையின் ஒரு பகுதி. WAVES…
புதுச்சேரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச கூலி தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது. புதுவை கம்பன் கலை அரங்கில் தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைத்து இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் நெல்லித்தோப்பு, பவழநகர், இந்திராகாந்தி சிலை, அண்ணா சாலை பகுதிகளில் தொழிலாளர்களை ஆங்காங்கு ஒன்று திரட்டி இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, சுமதி, கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் கோரிக்கை: சென்ற ஆறு மாதங்களுக்கு முன்பாக துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உடனடியாக இதனை நிறைவேற்றி, குறைந்தபட்ச கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வழங்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை…
மதுரை: வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பிச்சைராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வங்கி நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் கடந்த 2024 செப்.30-ல் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், ஒரே பான் எண்ணை பயன்படுத்தி பல நகைக் கடன்கள் பெறுவது, நகைக் கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திரும்ப வைப்பது, புதுப்பிப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாகவும், பொது மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் இதுவரை நகைக் கடன்களை ஆண்டு முடிவில் வட்டியை மட்டும் திரும்ப செலுத்தி கடனை புதுப்பிக்கலாம். அப்படி செய்யும்போது அசல்…
தோல் பராமரிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு வரும்போது, விலையுயர்ந்த கிரீம்கள், லோஷன்கள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்க நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான இயற்கை சுகாதார பொருட்கள் உங்கள் சமையலறையில் உள்ளன, அவற்றில் ஒன்று மஞ்சள் கொண்ட ஓக்ரா நீர். பிண்டி என்று அழைக்கப்படும் ஓக்ரா, குறிப்பாக கோடையில் ஒரு பிரதான காய்கறி, மற்றும் பல சுகாதார நன்மைகளுடன் வருகிறது. சில மஞ்சள் (ஹால்டி) தண்ணீருடன் இணைந்தால், இது பல வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் ஆக மாறும், மேலும் மென்மையான, கண்ணாடி தோலைக் கூட கொடுக்கும்! மஞ்சள் நிறத்துடன் ஓக்ரா நீரைப் பயன்படுத்துவதன் 5 நன்மைகள் இங்கே ….
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ள தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இது பாதுகாப்பு தோல்வி என்றும் ஜம்மு காஷ்மீரை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா கூறுகையில், “இது பாதுகாப்புத் தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் எங்களின் வாழ்க்கை சிறப்பாக செல்வதை அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பியிருக்க மாட்டார்கள். எங்கள் மக்களுக்கிடையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அதனால் அவர்கள் இந்தத் தாக்குதலை (பஹல்காம்) நடத்தியுள்ளனர். ஆனால் அது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எவ்வாறு பாதிக்கும் என்ற உண்மையை அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லை. கடந்த பத்தாண்டுகளாக அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்ற, மசூதிகளை எரிக்க கதைகள் நடந்து வருகின்றன. நாங்கள் ஏற்கனவே அவைகளை எதிர்கொண்டு வருகிறோம். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைவர் ஜெனரல் ஆசிம் முனிர் இரண்டு நாடு கொள்கையைப் பேசித் தூண்டிவிட்டுள்ளார்.…
கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ் அய்யர் – பான்டிங் கூட்டணி பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிடல்ஸை அழைத்துச் சென்றது. 2020-ல் இறுதிப் போட்டியும் கண்டனர். இப்போது பஞ்சாப் கிங்ஸிலும் இவர்கள் இருவரது கூட்டணி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை வெகுவாகப் பிரகாசமாக்கியுள்ளது, “அனுபவம் ஸ்ரேயஸை பட்டைத் தீட்டியுள்ளது” என்கிறார் ரிக்கி பான்டிங். நேற்று சிஎஸ்கேவின் 190 ரன்களை அனாயசமாக சேஸ் செய்து கொடுத்தார் ஸ்ரேயஸ்…
Last Updated : 01 May, 2025 02:37 PM Published : 01 May 2025 02:37 PM Last Updated : 01 May 2025 02:37 PM புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் நாளை திறக்கப்படவுள்ளது | படங்கள்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு நாளை (மே 2) திறக்கப்படுகிறது. புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைபாட்டால் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதனால் புதுவை பேருந்து நிலையம் கடலுார் சாலையில் உள்ள ஏஎஃப்டி மில் திடலில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. திறந்தவெளி திடல் என்பதால் பேருந்து நிலையத்துக்கு தேவையான வசதிகள்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான குழப்ப நிலை சர்வதேச சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக, அதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (-1.22%) 75,365 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளிகள் குறைந்து (-1.49) 22,904 புள்ளிகளில் நிலைத்தது. லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதனால், உலோகம், மருந்து, ஐடி துறைகள் கணிசமான சரிவை…
