Author: admin

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று கூறினார். ​ கர்னாலை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும்…

Read More

ராமநாதபுரம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுப்போம்” என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் கி.தங்கவேலு தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாநில பொருளாளர் எஸ்.நாராயணன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க தலைவர் ம.அர்ஜூன் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றை எங்களது கூட்டமைப்பு வாழ்த்தி வரவேற்கிறது. அதேசமயம் திமுக கடந்த தேர்தல்…

Read More

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைத்து வர்த்தக கூட்டாளிகளிடம் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை கூடுதல் வரிகளை விதித்து பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார். 10% அடிப்படை வரி, ஏப்ரல் 5, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 10 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்புமுறை ஏப்ரல் 9, 2025 முதல் அமலுக்கு வரும். அமெரிக்க அதிபரின் நிர்வாக உத்தரவின்படி இந்தியாவுக்கு 27% வரி விதிக்கப்பட்டுள்ளது. (ட்ரம்ப் காட்டிய வரிவிகிதப் பட்டியலில் இந்தியாவுக்கு 26% என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ உத்தரவில் 27% என தெரிவிக்கப்பட்டுள்ளது.) இந்திய தொழில்துறை…

Read More

மும்பை: பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாடு – 2025-ல் கலந்து கொண்ட ரஜினி இவ்வாறு தெரிவித்தார். மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், “பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் என்று நான் உறுதியுடன் இருந்தேன். ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு போராளி, எந்தச் சூழ்நிலையையும் அவர் எதிர்கொள்ளுவார், கடந்த பத்தாண்டுகளாக எந்தச் சூழ்நிலைகளையும் அவர் திறமையாகவும் அழகாகவும் கையாண்டுள்ளார். அவர், காஷ்மீரில் அமைதியையும் நாட்டுக்கு பெருமையையும் கொண்டுவருவார். நான் இங்கு…

Read More

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை தல்லாகுளத்தில் ஏப்.14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார பேரணி நடந்தது. அப்போது தல்லாகுளத்திலிருந்து அவுட்போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பேரணி சென்றனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மாவட்ட ஆட்சியர் காரில் சென்று பேரணியை சீர்குலைக்க முயற்சி செய்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதனைக் கண்டித்தும், கட்சிக்கொடி ஏற்றுவது தொடர்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றக்கோரியும், அவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அக்கட்சியினர் நேற்று தல்லாகுளத்தில் ஆட்சியரை பணியிட மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read More

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்று ஏஇபிசி துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தக வரி கொள்கை குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வணிகப் பரிமாற்றத்தில் உள்ள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருளின் மதிப்புக்கு ஏற்ப கூடுதல் வரி விதித்துள்ளார். வரும் 9-ம் தேதி முதல் அமெரிக்கா, அதன் வர்த்தக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான புதிய வரிகளைக் கொண்டுள்ளது. புதிய வரிகள் அமெரிக்காவின் தற்போதைய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட அனைத்து இறக்குமதிகளுக்கும் பொருந்தும். இந்தியா 26 சதவீதம் என்ற வரி கட்டணத்தை எதிர்கொள்ளும். இந்தியாவின் ஆடை ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு 35 சதவீதம் வர்த்தக பங்கை கொண்டதால் 26 சதவீதம் வரியானது செலவுகளை அதிகரிக்கும். இதனால், இந்திய தயாரிப்புகளுக்கு போட்டித்தன்மை குறைவாகும். இந்தியாவின் முக்கியப்…

Read More

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பெயரைத் தேடுகிறீர்களா? ஒரு குழந்தைக்கு பெயரிடுவது ஒரு மகிழ்ச்சியான செயல். மொழிகள் மற்றும் கலாச்சாரங்களில், சில பெயர்கள் முடிவில்லாத மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் அழகாகக் கைப்பற்றுகின்றன. இங்கே 10 அர்த்தமுள்ள குழந்தை பெயர்கள் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் குறிக்கின்றன.

Read More

மதுரை: கொடைக்கானலில் நடைபெறும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்யை காண வந்த ஏராளமான தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலைய பகுதியில் திரண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். தடுப்பு வேலிகளை அமைத்து போலீஸார் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் விமான நிலைய பகுதியில் தவெகவினர், ரசிகர்கள் கூடினர். அவர்கள் விமான நிலைய முன்பகுதிக்கு செல்ல முண்டியடித்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு…

Read More

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிபிஎப் கணக்குகளில் வாரசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் நிதி நிறுவனங்கள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2018-ம் ஆண்டு அரசு சேமிப்பு மேம்பாடு பொது விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்து ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், லாக்கர்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்களுக்கான வாரிசுதாரர்களாக 4 பேர் வரை சேர்க்க அனுமதிக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Read More

புகைப்படம்: ஹன்னா த்ரோக்/ டிக்டோக் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட வித்தியாசமான தோற்றமுடைய படங்கள். இதுபோன்ற படங்களில் உங்கள் கவனத்தை முதலில் எதைப் பிடிப்பதைப் பொறுத்து, உங்களைப் பற்றி நிறைய டிகோட் செய்யப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படி? ஏனென்றால், இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, எனவே, ஒரு நபரின் உண்மையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்துவதாக அவை கூறுகின்றன.உதாரணமாக, ஆரம்பத்தில் ஹன்னா த்ரோக் பகிரப்பட்ட இந்த குறிப்பிட்ட படம் டிக்டோக் ஒரு நபர் ஒரு புறம்போக்கு அல்லது உள்முகமாக இருந்தால் வெளிப்படுத்தும் உரிமைகோரல்கள். படத்தில் வெற்றுப் பார்வையில் இரண்டு முக்கிய விலங்குகள் உள்ளன: ஒரு நரி மற்றும் ஒரு டால்பின். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்க்கும் அடிப்படையில், படம் அவர்களின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது ஆளுமைப் பண்புகள்.சோதனை எடுக்க, கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மனதை…

Read More