Author: admin

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை தரவுள்ளோம் என அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளி (சிபிஎஸ்இ) புதிய கட்டிடத்தை கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று திறந்து வைத்தார். அக்கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. அதையடுத்து இந்நிகழ்வில் அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, “நீட் பயிற்சி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் 585 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். அதற்காக நகரத்தில் இரண்டு, கிராமத்தில் இரண்டு என நான்கு மையங்கள் அமைத்துள்ளோம். வரும் கல்வியாண்டில் வெகு விரைவில் புத்தகப்பை, ஷூ தரப்படும். ஸ்மார்ட் அடையாள அட்டை மாணவிகளுக்கு தர உள்ளோம். பெற்றோரே தங்கள் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்பதை மொபைல்போன் மூலம் அறியலாம். அரசு பள்ளிகளில் புகார் பெட்டிகளும் வைத்துள்ளோம்” என்றார். பின்னர்…

Read More

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை ஜஸ்பிரீத் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது ஒன்றரை வயது குழந்தையான அங்கத்துடன் கேலரியில் அமர்ந்து பார்த்தார். இந்நிலையில் குழந்தையின் முகபாவணை காட்சிகளை ஒருதரப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கருத்துகளை பதிவு செய்தனர். இது அதிகளவில் பரவியது. இந்நிலையில் இந்த பதிவுகளுக்கு சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், கூறியிருப்பதாவது: எங்களது மகன் உங்களது பொழுபோக்குக்கான தலைப்பு இல்லை. ஜஸ்பிரீத் பும்ராவும், நானும் அங்கத்தை சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ஏனெனில் இணையம் ஒரு வெறுக்கத்தக்க, இழிவான இடம், கேமராக்கள் நிறைந்த ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு குழந்தையை அழைத்து வருவதன் தாக்கங்களை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். சமூக…

Read More

டெக்சாஸ்: விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய தனது காதலியை தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார். தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், ப்ளு ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கி விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ப்ளூ ஆர்ஜின் என்ற ராக்கெட்டும், 6 பேர் பயணம் செய்யும் வகையில் ‘நியூ செபார்ட்’ என்ற விண்கலமும் உருவாக்கப்பட்டது. இதில் பிரபல பாப் பாடகி கெட்டி பெர்ரி, தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ், சிபிஎஸ் டி.வி. தொகுப்பாளர் கேல் கிங் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவே, விஞ்ஞானி அமாண்டா இங்குயென், திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் நேற்று முன்தினம் பயணம் செய்தனர். நியூ செபார்ட் விண்கலத்துடன், ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டது. புவியின் வளிமண்டலத்தை கடந்து விண்வெளிக்குள் நுழைந்ததும், விண்கல குழுவினர் புவியீர்ப்பு விசை இன்மை, உடல் எடை குறைவு…

Read More

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் ஏப். 30-ம் தேதி (நாளை) அதிகாலையில் சந்நியாஸ்ரம தீட்சை வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப்.30-ம் தேதி அட்சய திருதியை தினத்தில் (நாளை) அதிகாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நேற்று ஸ்ரீ விஜயேந்திர சர்ஸவதி சுவாமிகள் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான…

Read More

புதுடெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாலிவுட் சினிமா நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். “பஹல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டு கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் கோபமும் உள்ளது. காஷ்மீரில் காஷ்மீர் வாழ் இந்துக்கள் மீது இது மாதிரியான தாக்குதலை என் வாழ்நாள் முழுவதும் நான் பார்த்துள்ளேன். அதோடு ஒப்பிடும்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் கதை வெறும் முன்னோட்டம் தான். ​​இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து காஷ்மீரில் தங்கள் விடுமுறையைக் செலவிட வரும் மக்களின் மத ரீதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் மீதான தாக்குதல் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கொள்ளப்படுகிறார்கள். இந்த…

Read More

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, “வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, வெளிமாநிலத்தவர் வருகையை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்றார். அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பேசும்போது, “வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பதில்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்வதற்கான போர்ட்டல்கள் உள்ளன. அதன் வழியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்…

Read More

பாகிஸ்தானில் பிறந்து, 7 வயதில் இந்தியா வந்த ஒரு பெண், 19 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திலேயே வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு ஆந்திர போலீஸார் அவரை வலியுறுத்தி உள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த மகபூப் பீரான், நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அங்கேயே திருமணம் செய்து கொண்டு, 2 மகன்கள் மற்றும் 2 மகளுக்கு தந்தையானார். தனது இளைய மகள் ஜீனத் பீரானை ஆந்திர மாநிலம், தர்மாவரம் பகுதியில் வசிக்கும் தனது தங்கையின் மகன் ரஃபீக் அகமதுவுக்கு கடந்த 1989-ல் திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை தர்மாவரத்தில் பிறந்தது. இந்நிலையில் 1998-ல் ஜீனத் 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். அப்போது, பாகிஸ்தானில் வசிக்கும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜீனத் பாகிஸ்தான் சென்றார். அந்த நேரத்தில் கார்கில் போர் தொடங்கியதால் இவர் பாகிஸ்தானிலேயே தங்க நேரிட்டது. இந்த…

Read More

சென்னை: “இதழியலுக்கு செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது” என்றார் Deutsche Welle நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே ஜெர்மனி அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான DW-இன் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் உரையாற்றினார். ‘மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், பேசிய அவர், சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் இன்றைய காலகட்டத்தில், அவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் குறித்து விவரித்தார். அவர் தனது உரையில், “எங்கள் நிறுவனம் கற்பிப்பதையும், விழிப்புணர்வு ஊட்டுவதையும் மட்டுமே செய்யாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. எங்களுக்கு நண்பர்கள் இல்லை, குறிப்பாக அரசுகளிடம் சுமுக உறவு இல்லை. சில பிராந்தியங்களில், எங்கள் தகவல் ஒளிபரப்பு தடுக்கப்படுவதுடன், எங்கள் இருப்பை வரவேற்பதில்லை. சமூக…

Read More

சென்னை: இந்தியாவின் அடிமட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவர்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையத்தை (AI Centre of Excellence) சென்னை ஐஐடி நிறுவ உள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது. CPU, எட்ஜ் டிவைஸ் இண்டர்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும். ஏஐ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் ‘Kompact AI’ன் முதல் பதிப்பை சென்னை ஐஐடி-ல் இன்று (ஏப்ரல் 9, 2025)…

Read More

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ஆர்​சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்​பிடல்ஸ் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 162 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ராகுல் 39 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​களும் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் சேர்த்​தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்​ஸிஸ் 22 ரன்​கள் சேர்த்​தனர். ஆர்​சிபி அணி சார்​பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்​வுட் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் வழங்கி ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். 163 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 18.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 165 ரன்​கள் எடுத்து…

Read More