புதுடெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதியாண்டில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்டுள்ளன. ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அதேசமயம், இண்டிகோ நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.7,587.5 கோடியை ஈட்டியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா வரிக்கு முன் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்தித்தது. நீண்ட காலமாக லாபத்தில் இயங்கி வந்த அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் கடந்த நிதியாண்டில் ரூ.5,678.2 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவின் கடன் ரூ.26,879.6 கோடியாகவும், இண்டிகோவின் கடன் ரூ.67,088.4 கோடியாகவும் இருந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும்…
Author: admin
கொழுப்பு கல்லீரல் நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அல்லது சமீபத்தில் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) என மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு பரவலான மற்றும் பெரும்பாலும் கண்டறியப்படாத நிலை. இது ஆரம்பத்தில் சில அல்லது அறிகுறிகளுடன் இருக்கலாம் என்றாலும், முதல் உடல் அறிகுறிகள் பெரும்பாலும் வயிற்றில் அல்லது வயிற்றுப் பகுதியில் நுட்பமாக தோன்றும் என்று வளர்ந்து வரும் சான்றுகள் தெரிவிக்கின்றன.கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள் செரிமான அச om கரியம் மற்றும் வயிற்று ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்து வருகின்றனர். வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் ஹெபடாலஜி வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், NAFLD நோயாளிகள் எந்த அசாதாரண இரத்த பரிசோதனைகள் அல்லது இமேஜிங் முடிவுகள் தோன்றுவதற்கு முன்பே, வீக்கம், குமட்டல் மற்றும் வலது மேல் நாற்புற அச om கரியம் போன்ற வயிற்று அறிகுறிகளை…
புதுடெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கி வருகிறது. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது அக்னி-5 ஏவுகணை. அணு ஆயுதங்களுடன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அடுத்ததாக 7,500 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் வகையில் அக்னி ஏவுகணையை மேம்படுத்தும் முயற்சியில் டிஆர்டிஓ இறங்கியுள்ளது. பாகிஸ்தான் பதற்றம்: அக்னி-5 ஏவுகணையை இந்தியா மீண்டும் வெற்றிகரமாக சோதித்தது பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள எஸ்விஐ (போர் உத்தி தொலைநோக்கு மையம்)…
குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வரவேற்றார். அனைத்து முன்னாள் ராணுவவீரர்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், ஒட்டுமொத்த ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவத்தினர் கலந்துரையாடினர். கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்த பேரணி செப்டம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.
Last Updated : 22 Aug, 2025 07:20 AM Published : 22 Aug 2025 07:20 AM Last Updated : 22 Aug 2025 07:20 AM புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி, முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்சியை அடையும் வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டது. ஆனால் இந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்தபோது, அது 6.9 சதவீதம் என காட்டுகிறது. அதனால் 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தோராயமாக 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என ஆரம்பகட்ட…
ஏர் பிரையர்கள் பிரபலமடைந்து, ஆரோக்கியமான வறுத்த உணவுகளை உறுதியளித்துள்ளனர், ஆனால் ஒரு இரைப்பை குடல் நிபுணர் அவர்களின் ஆரோக்கிய நன்மைகள் பயன்பாட்டைப் பொறுத்தது என்று எச்சரிக்கிறார். ஏர் வறுக்கப்படுகிறது எண்ணெயைக் குறைக்கும்போது, அது தானாகவே உணவை ஆரோக்கியமாக மாற்றாது, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது அழற்சி எண்ணெய்களுடன். சரியான எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது, எரிந்த உணவு மற்றும் பழைய எண்ணெயைத் தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பான ஏர் பிரையர் லைனர்களைத் தேர்ந்தெடுப்பது குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஏர் பிரையர்கள் ஒரு சமையலறை பிரதானமாக மாறிவிட்டனர். மிருதுவான வறுத்த உணவுகளை நீங்கள் அனுபவிக்க முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு வீட்டுக்கு பிடித்ததாக ஆக்கியுள்ளது. ஒரு துளி எண்ணெய் இல்லாமல் தங்க பிரஞ்சு பொரியல்களை கற்பனை செய்து பாருங்கள் அல்லது கிரீஸில் சொட்டாத கோழி – உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. எனவே, ஏர்-வறுக்கவும் தானாக உணவை ஆரோக்கியமாக்குகிறதா? கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இரைப்பை குடல்…
புதுடெல்லி: ஆன்லைன் மூலமாக பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் சமூகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால்தான் தடையால் ஏற்படும் வருவாய் இழப்பை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் இழப்பதாக அரசு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தப்பட்ட தீய விளைவுகள் குறித்து கவலை எழுப்பியுள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடும் பலர் தங்களது சேமிப்பை இழந்து கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாகும்போது, விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டு…
காஞ்சிபுரம்: ‘சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது காஞ்சிபுரம் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பினர் அவரை சந்தித்தனர். அவர்கள் பட்டு இழை, சரிகை விலை குறைப்பு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா, கூட்டுறவு சங்கங்களுக்கு வருடத்துக்கு ரூ.50 கோடி மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதேபோல் வணிகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர். விளைபொருட் களுக்கு கூடுதல் விலை, இடு பொருட்களை இலவசமாக வழங்குவது, ஏரி,…
சென்னை: ‘தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளு மன்றத்தில் கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ரகுமான் கான் எழுதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசிய தாவது: ரகுமான்கான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். அவர் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழகம் முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும். கருப்புச் சட்டம்: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்பு களை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை…
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து, மணல் கடத்தல் காரர்கள் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நேர்மையாக பணியாற்றிய அதிகாரியை தாக்கியதுடன், இதற்கு மேலும் கடத்தலைத் தடுக்க முயற்சித்தால் வண்டியை ஏற்றிக் கொலைசெய்துவிடுவதாக மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘திமுக ஆட்சி அமைந்ததும் மணல் அள்ளலாம்’ என அச்சாரமிட்டதை ஒப்பிட்டுப் பார்த்தால் தொடர்ந்து மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு திராவிட மாடல் அரசே ஒத்துழைப்பு தருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.