புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1937-ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த நிறுவனம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஏஜெஎல் நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் ஆகிய நாளிதழ்கள் 2008 வரை வெளிவந்தன. அதன்பின் இந்நிறுவனம் இழப்பை சந்தித்து முடங்கியது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா, பஞ்ச்குலாம் ஆகிய இடங்களில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்நிறுவனம் நாளிதழ்களை…
Author: admin
சேலம்: ராமானுஜரின் 1008-வது அவதார ஜெயந்தி உற்சவத்தையொட்டி, சேலத்தில் உள்ள ஸ்ரீராமானுஜர் மணிமண்டபத்தில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ராமானுஜரின் 1008-வது திருநட்சத்திர அவதார ஜெயந்தி உற்சவம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சேலம் எருமாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையொட்டி, மணிமண்டப வளாகத்தில் காலை 7 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, விஸ்வரூப சேவை, திருவாராதனம் ஆகியவை தொடங்கி நடைபெற்றன. பின்னர், 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராமானுஜரின் பிரம்மாண்டமான திருவுருவச்சிலையின் முன்பாக, ஸ்ரீ ராமானுஜர் உற்ஸவ மூர்த்திக்கு 108 கலச ஸ்தபன விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமானுஜ நூற்றந்தாதி பாராயணமும் நடந்தது. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா…
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘டயங்கரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டார். ‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் வி.ஜே.சித்து. இவருடைய வீடியோக்கள் அனைத்துமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். மேலும், பல படங்கள் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘டிராகன்’ படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். ப்ளாக் ஷீப் யூடியூப் தளத்தில் இருந்து பிரிந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கியவர் வி.ஜே.சித்து. ப்ளாக் ஷீப் அணியில் இருந்து பலரும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் வி.ஜே.சித்துவும் இணைந்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘டயங்கரம்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் வி.ஜே.சித்து, அவரது யூடியூப் சேனல் குழுவினர், நடிகர் இளவரசு மற்றும் ஐசரி…
சென்னை:“பொதுமக்களுக்கு சுயபாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இலவச தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும்” என்று, சர்வதேச கராத்தே பயிற்றுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் எஸ்.பாலமுருகன் இன்று (மே 2) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எங்களது கராத்தே சங்கம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 55 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டது. நமது முன்னோர்கள் நமக்கு தந்து சென்ற பாதுகாப்பான சமுதாயத்தை நமது வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். தொழில்நுட்பத்தில் மிகவும் நவீனமயமான இந்த உலகில் தனிமனிதனின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்களின் சுயபாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, பொதுமக்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5 ஆயிரம் கராத்தே மாஸ்டர்கள் 8 கோடி பேருக்கு இலவச தற்காப்பு பயிற்சி அளிக்க உள்ளனர். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,…
புதுடெல்லி: ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ‘கண்ணியத்துடன் கூடிய முதுமை’ எனும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “நமது கடந்த காலத்துடன் ஒரு முக்கிய இணைப்பாகவும், நமது எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் மூத்த குடிமக்கள் திகழ்கிறார்கள். நமது மூத்த குடிமக்கள் ஞானம், விவேகம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அவர்களின் கண்ணியம் மற்றும் ஆரோக்கியம் ஒரு பகிரப்பட்ட கடமை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் இருப்பை மதிப்பதும், அவர்களின் வழிகாட்டுதலை மதிப்பதும், அவர்களின் தோழமையை மதிப்பதும் முக்கியம். முதியோர் வாழ்வில் கண்ணியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியுள்ளதற்காக நான் பாராட்டுகிறேன். மூத்த குடிமக்களுக்காக ஒரு பிரத்யேக போர்டல் தொடங்கப்பட்டதற்கு எனது…
நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. மே 1-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பெரும் வசூல் படைக்கும் இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார் நானி. சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹிட் 3’. முதல் இரண்டு பாகமுமே பெரும் வெற்றியடைந்து இருந்ததால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்தினார் நானி. இது அவருக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. நானியின் திரையுலக வாழ்க்கையில் ‘ஹிட் 3’ படத்தின் முதல் நாள் வசூல் அதிகம்…
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடம் அருகில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதிலாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேயர் பிரியாவிடம், “இது கறி அறுக்கும் இடம். அதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இன்று நடக்கும் அன்னதான நிகழ்ச்சியில் பலரும் சாப்பிடுகின்றனர். ஆனால், ஒரு இடத்தில்கூட பிளீச்சிங் பவுடரே தூவவில்லை. இதுகுறித்து நானும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்று இந்த பகுதியில் தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் இதுதான். இதில் ஏதாவது வாசனை வருகிறதா என்று மட்டும் பாருங்கள், குறைந்தபட்ச வாசனைக்கூட…
கோஸ்மோஸ் 482 இதுபோன்றதாகத் தோன்றலாம் (புகைப்பட கடன்: நாசா) A சோவியத் விண்கலம் விண்வெளி குப்பைகள்-கண்காணிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, 1970 களில் வீனஸுக்கு ஒரு பணிக்காக தொடங்கப்பட்டது.டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டச்சு விஞ்ஞானியும் செயற்கைக்கோள் டிராக்கரும் மார்கோ லாங்ப்ரூக் கூறுகையில், மே 10 ஆம் தேதி எதிர்பார்க்கப்படும் தோல்வியுற்ற விண்கலத்தின் மறு நுழைவு அசாதாரணமானது, ஆனால் பொது பீதிக்கு ஒரு காரணம் அல்ல. அது அப்படியே இருந்தால், அது சுமார் 150 மைல் (மணிக்கு 242 கிமீ) தரையில் அடிக்கக்கூடும்.”ஆபத்து இல்லாமல் இருக்கும்போது, நாங்கள் மிகவும் கவலைப்படக்கூடாது” என்று லாங்ப்ரூக் ஒரு மின்னஞ்சலில் கூறினார்.கப்பல் ஒப்பீட்டளவில் கச்சிதமானது, மேலும் முழுமையாய் கூட, “ஆபத்து ஒரு சீரற்ற விண்கல் வீழ்ச்சியைப் போன்றது, அவற்றில் பல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றன. உங்கள் வாழ்நாளில் மின்னலால் பாதிக்கப்படுவதற்கான பெரிய அபாயத்தை நீங்கள் இயக்குகிறீர்கள்” என்று அவர் கூறினார்.ஒரு தனிநபர் அல்லது பொருளைத் தாக்கும் விண்கலத்தின்…
திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழா மேடைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வந்திருந்ததை சுட்டிக்காட்டி ‘பலர் இரவுத் தூக்கத்தை இழப்பார்கள்’ என்று இண்டியா கூட்டணியை கேலி செய்தார். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் முதல்வரிடம் (பினராயி விஜயன்) ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இண்டியா கூட்டணியின் முக்கியமான தூண். சசி தரூரும் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரலாம்” என்றார். பிரதமர் மோடியின் கருத்தை சரியாக வெளிப்படுத்துவதற்கு, அவரின் பேச்சை மொழிபெயர்த்தவர் சிரமப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “செய்தி… செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டது” என்றார். முன்னதாக, இன்று காலையில் கேரளாவுக்கு…
ஜூனில் ‘அடங்காதே’ வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடங்காதே’. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினை, தணிக்கை பிரச்சினை என பல்வேறு தடங்கல்களால் வெளியாகாமல் இருந்தது. தணிக்கை பிரச்சினை சரியாகிவிட்ட பிறகும், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினையும் பேசி தீர்க்கப்பட்டு, ஜூனில் ‘அடங்காதே’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்ரீக்ரீன் நிறுவனம் சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்தினை இ5 நிறுவனம் கைப்பற்றி உலகமெங்கும் வெளியிடவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று தயாரிப்பாளர் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
