சென்னை: பெங்களூரு விமான நிலையத்தில் இடம் இல்லாததால் 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டன. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவில் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டன. இதனால் விமானங்களை பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், விமானங்கள் பெங்களூரில் தரையிறங்கி நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க வந்த 5 விமானங்கள், நள்ளிரவில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வகையில் ஐதராபாத், ஹாங்காங், கோவா, ஃபிராங்க்ஃபர்ட், நாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூரு வந்த 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, இங்கு வந்து தரை இறங்கின. பின்னர், பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன் பிறகு பெங்களூரு விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து, விமானங்கள் நிறுத்துவதற்கு இடம் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5…
Author: admin
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (மே 1) பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. பவானி ஆற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுமுகை பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் நேந்திரன், செவ்வாழை, ரோபஸ்டா, கதிலி என பல்வேறு வகையிலான வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படுகின்ற வாழைத்தார் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடும் வெயிலுடன் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது.…
சான்டியாகோ: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சுனாமி அச்சமும் நிலவியது. இந்த நிலநடுக்கம் சீலேவின் தென் கடலோர பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதையடுத்து, மாகெல்லன் ஜலசந்தியின் முழு கடலோரப் பகுதியில் உள்ளவர்களும் விரைந்து வெளியேற வேண்டும் என மக்களுக்கு சிலி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், சுனாமி அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதியில் யாரும் இருக்க வேண்டாம் என சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மையம் கூறியுள்ளது. இருப்பினும் அர்ஜென்டினா தரப்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு அல்லது உயிரிழப்பு அசம்பாவிதம் ஏதும் இதுவரை பதிவானதாக தகவல் இல்லை. கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவுக்கும் இடையிலான கடற்பகுதியான டிரேக் பேசேஜில் (அட்லாண்டிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியையும் பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியையும் இணைக்கிறது…
கோவை: “தமிழகத்தில் அனைவரும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். நீட் என்பது மக்களுக்கான பிரச்சினை அல்ல திமுகவின் அரசியல் பிரச்சினை” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், ஆல் பாஸ் விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கோவை, சித்தாபுதூர் பகுதியில் நவீன அங்கன்வாடி மையத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (மே 2) திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சட்டப்பேரவையில் கடந்த ஒன்றரை மாத காலமாக பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில், இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின், சமூக பங்களிப்பு திட்ட (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ், கோவை தெற்கு தொகுதியில் மட்டும் புதிய நவீன அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கும், மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்…
மதுரை: மதுரை கிரானைட் மோசடி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களான நாகராஜன், துரை தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்) ஆகியோர் மீது கீழவளவு போலீஸார் கிரானைட் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கிரானைட் மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் தனி வழக்கு பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன பங்குதாரரான மதுரையை சேர்ந்த நாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் மீது கிரானைட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எங்கள் மீது பண…
சென்னை: இந்தியாவில் விவோ Y19 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘Y’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.74 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா …
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 20 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை பார்ப்போம். நடப்பு சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன. எஞ்சியுள்ள 8 அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் உள்ளன. இருந்தாலும் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். மும்பை இந்தியன்ஸ்: நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அந்த அணி சிறந்த நெட் ரன் ரேட் கொண்டுள்ள காரணத்தால் டாப் 4…
சென்னை: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும். எளிதில் விண்ணப்பிக்கும் வகையிலும், அதுதொடர்பாக எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் மென்பொருளை உருவாக்க வேண்டும். கட்டிடங்களில் கட்டுமான பணி முடிந்த பிறகு, தற்காலிக இணைப்பில் இருந்து நிரந்தர வகைக்கு இணைப்பு மாற்றவும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும்போது, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டிய ஆவணங்களின் அதிகபட்ச அளவு போதுமானதாக இல்லை. குறைந்தது 5 எம்.பி. அளவுக்கு அதிகரிக்க வேண்டும். மின்கட்டணம்…
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால், பாகிஸ்தான் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அந்நாட்டின் முக்கிய பங்குக்குறியீடான ‘கேஎஸ்இ – 100’ ஏப்ரல் 22 முதல் 30-ம் தேதி வரை மட்டும் 8,000 புள்ளிகள் (6%) சரிவடைந்துள்ளது. ரத்தக்களரி ஆன ஏப்.30: ஏப்ரல் மாத இறுதி பாகிஸ்தான் சந்தை வர்த்தகமானது ரத்தக்களரியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 30 அன்று கேஎஸ்இ – 100 ஒரேநாளில் 3,545 புள்ளிகள் (3.09 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 111,326.57 ஆக இருந்தது. பல ஹெவி வெயிட் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்திருந்தன. குறிப்பாக, நான்கு முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் மொத்தமாக 1,132 புள்ளிகள் சரிந்திருந்தன. ஆறுதல் அளித்த மே 2: பல நாள் இடைவிடாத சரிவுக்கு பின்பு, மே 2-ம் தேதி பாகிஸ்தான் பங்குச் சந்தை சற்றே ஆறுதல் அளித்து சிறிய…
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் கணினி ஆய்வகம் அமைப்பதற்காக எனது தொகுதி மேம்பட்டு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது செலவிடப்படவில்லை என்பதில் இருந்தே சென்னைப் பல்கலைக்கழகம் அதன் வளங்களை பயன்படுத்தாமல் சீரழிவை உணர முடியும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த கவுரி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். தேர்வுக்குழு அமைப்பது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. அரசுக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல்…
