அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது குஜராத் அணியின் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் 12 ரன்களை கடந்த போது ஐபிஎல் தொடர்களில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை அவர், தனது 117-வது ஆட்டத்தில் நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 4 ஆயிரம் ரன்களை எட்டும் முதல் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் ஆவார். மேலும் குறைந்த பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார் ஜாஸ் பட்லர். அவர், 2,677 பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் கிறிஸ் கெய்ல் (2,653), ஏபி டி வில்லியர்ஸ் (2,658) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
Author: admin
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் மே 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 42-வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் மாலை 3.35 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 29 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. போதிய வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். வணிகளின் நலனைக் காக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும், வணிகர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டு தீர்வுகாணப்பட உள்ளன. மாலையில்…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மங்களூருவில் 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த சுஹாஸ் ஷெட்டி (38) பஜ்ரங் தளம் அமைப்பில் தென்பகுதி செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு சுள்ளியாவை சேர்ந்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு (27) வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக அடுத்த சில தினங்களில் முகமது பைசல் (23) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுஹாஸ் ஷெட்டிக்கு நேரடி தொடர்பு இருந்ததால் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தற்போது அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சுஹாஸ் ஷெட்டி நேற்று மாலை மங்களூரு புறநகர் சாலையில் காரில்…
சென்னை: தமிழக தடகள சங்கம் சார்பில் யு-16, யு-18, யு-20 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மண்டல தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (3-ம் தேதி) நடைபெறுகிறது. ஒருநாள் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்வில் 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டிகளில் சுமார் 600 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை: பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இச்சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன் விளையாடுவதற்காக, வெள்ளாளர் தெரு வழியாக நண்பர்களுடன் கிரிக்கெட் பேட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே, சீரமைப்பு பணிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். உடனிருந்த நண்பர்கள் கூச்சலிடவே, அங்கிருந்தோர் விரைந்து ஏணி மூலம் சிறுவனை மீட்டனர். இந்த விபத்தில் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது. கழிவுநீர் இணைப்பு வழங்காமல் இருந்ததால் அசம்பாவிதம் எதும் நடக்கவில்லை. இந்நிலையில், சிறுவன் பாதாள சாக்கடை குழியில் விழுந்த சிசிடிவி காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல்களை இந்தியாவில் முடக்க எடுக்கப்படும் தொடர் நடவடிக்கையில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ சேனலும் சிக்கியுள்ளது. இதனுடன் சேர்த்து மேலும் 16 முக்கிய பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில், டான், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், ஜியோ நியூஸ், போல் நியூஸ் உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றின் மொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 63 மில்லியன். இந்தியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளை இலக்காக வைத்து ஆத்திரமூட்டும், வகுப்புவாத உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம்…
மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியா டெக், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து விளையாடினார். 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கோகோ காஃப் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் கோகோ காஃப் – அரினா சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 15-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை…
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. தொண்டை மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோயில். சுமார் 450 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில், இந்தாண்டு சித்திரை பெருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு அஸ்தமானகிரி விமான புறப்பாடு, நூதன புஷ்ப மாவடி சேவை நடைபெற்றது. நாதஸ்வரம், தேவார இன்னிசை: 2-ம் நாளான நேற்று சூரிய விருத்தம், சந்திர பிறை நிகழ்வு நடந்தது. 3-ம் நாளான இன்று அதிகார நந்தி சேவையும், மே.5-ம் தேதி மகா அபிஷேகம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே.7-ம் தேதி காலை 6 மணிக்கு…
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இதை தயாரிக்கிறது. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், தயாராகிறது” என படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தின் கான்செப்ட் போட்டோஷூட் மும்பை பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் கடந்த மாதம் நடந்தது. ஜூன் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் கூறும்போது, “ஜவான் மற்றும் தென்னிந்தியாவில் சில வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிற அட்லியுடன் இதில் இணைகிறேன். அவர் சொன்ன ஐடியாவும் அவருடைய நம்பிக்கையும் எனக்குப் பிடித்திருந்தது. பல நிலைகளில் நாங்கள் ஒரேமாதிரியான எண்ணம் கொண்டவர்கள். இந்தப் படம், இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்டை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய உணர்வுகளுடன் கூடிய சர்வதேச திரைப்படமாக…
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா உருவாக்கியுள்ளது என தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து என்ஐஏ காஷ்மீரின் குப்வாரா, புல்வாமா, சோபூர், அனந்நாக் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தி 2,800 பேரிடம் விசாரணை நடத்தியது. நேற்று வரை 150 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பஹல்காமில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய சிசிடிவி வீடியோ பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உள்ளூர் வியாபாரிகள், குதிரை சவாரி ஊழியர்கள் என ஏராளமானோர் சாட்சியம் அளித்துள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் 3 செயற்கைகோள் போன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் சிக்னல்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…
