Author: admin

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கெடுத்து உள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பான படங்களை பார்க்கும்போது நாட்டு மக்கள் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. வரலாறு காணாத வேகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயகம் ஆழமாக வேரூன்றத்…

Read More