50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சோவியத் கால கோஸ்மோஸ் 482 ஆய்வு இந்த மாதத்தில் கட்டுப்பாடற்ற முறையில் பூமியை மீண்டும் சேர்க்க உள்ளது. 1972 ஆம் ஆண்டு வீனஸுக்கு ஒரு பணியின் ஒரு பகுதியாக, விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இருந்து சிக்கியதிலிருந்து, விண்கலம் மெதுவாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது, அதன் வருவாய் உலகெங்கிலும் உள்ள செயற்கைக்கோள் கண்காணிப்பாளர்கள் மற்றும் விண்வெளி முகவர் நிறுவனங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. தரையிறங்கும் துல்லியமான இடம் தெளிவாக இல்லை என்றாலும், மே 10 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர், இது மனிதர்களுக்கு சிறிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. கோஸ்மோஸ் 482 இன் மறைவு பனிப்போர் காலத்தின் நினைவுச்சின்னங்களின் சகாப்தத்தை முடிக்கிறது.சோவியத் கால கோஸ்மோஸ் 482 விண்கலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை மீண்டும் உருவாக்க உள்ளதுகோஸ்மோஸ் 482 31 மார்ச் 1972 அன்று வீனஸுக்கு சோவியத்…
Author: admin
கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவது கடினம் என்ற சூழலில் கடந்த ஆண்டு தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்களை பெற்றது சந்தேகங்களை எழுப்பியது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டன. “குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன” என்று தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “பிஹார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலத்தின்…
சென்னை: டிஎன்சிஏ சார்பில் சிட்டி யு-19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள ‘பி’ கிரவுண்டில் நடைபெறுகிகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 1, 2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ மற்றும் 31 ஆகஸ்ட் 2009 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னையில் வசிக்கும் மற்றும் முகவரி சான்று உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சென்னையை சேர்ந்த வீரர்கள் TNCA இணையதளம் (www.tnca.in) சென்று இன்று (4-ம் தேதி) காலை 10 மணி முதல் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். வீரர்களின் விவரங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் அவர்களுக்கான தேர்வு தேதி மின்னஞ்சலில் அனுப்பப்படும். இத்தகவலை டிஎன்சிஏ செயலாளர் ஆர்.ஜ.பழனி தெரிவித்துள்ளார்.
ஜெர்ரி, வட்டாரம், எந்திரன், நஞ்சுபுரம், வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ராகவ் ரங்கநாதன். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘நாக் நாக்’. மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நவீன் சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் பற்றி ராகவ் ரங்கநாதன் கூறும்போது, “இத்தனை காலமாக என்னை நடிகர், நடனக் கலைஞர், இசை கலைஞராகப் பார்த்திருக்கலாம். இப்போது முதல்முறையாக இயக்குநர் ஆகி இருக்கிறேன். இதன் மூலம் என் கனவு நனவாகி இருக்கிறது. இது ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. கதைதான் ஹீரோ. நான் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பி அதன்படி…
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சார்பில் தேசிய அளவிலான மருத்துவ கல்வி மாநாடு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்பு ராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணி ராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் கோபால கிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கவிதா மற்றும் மருத்துவ பேராசிரியர்கள்,…
பழங்காலத்தில், மக்கள் தங்களுக்கும், அவர்கள் விரும்பும் மக்களுக்கும் சரியான விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள். வெளிப்பாடு என்பது உங்கள் கருத்துக்கள், கனவுகள் மற்றும் குறிக்கோள்களை யதார்த்தத்திற்குள் கொண்டுவருவதற்கான செயல்முறையாகும், விருப்பமான சிந்தனை அல்லது பகல் கனவு காண்பதன் மூலம் மட்டுமல்லாமல், சரியான நோக்கங்களை வைத்திருப்பதன் மூலமும், உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவதன் மூலமும், அவற்றை மெதுவாக யதார்த்தமாக மாற்றுவதன் மூலமும். தற்போதைய காலங்களில், பல வெற்றிகரமான நபர்கள் தங்கள் குறிக்கோள்களைக் காட்சிப்படுத்தும் சக்தியைப் பற்றி பேசியுள்ளனர், அவர்கள் ஏற்கனவே அடைந்துவிட்டார்கள், குறிக்கோள்களும் கனவுகளும், ஆசைகள் யதார்த்தத்திற்கு மாறும் வகையில் வாழ்கின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்தின் ஷியோபூரில் உள்ள அதன் சோதனை தளத்திலிருந்து அதன் அடுக்கு மண்டல ஏர்ஷிப் தளத்தின் முதல் விமானத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. இது இந்தியாவின் வான்வழி கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. ஆக்ராவை தளமாகக் கொண்ட வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனத்தால் (ADRDE) உருவாக்கிய தளம், கருவிகளின் பேலோடைக் கொண்டு சென்று பூமியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஏறியது. ஆன் போர்டு சென்சார்களிடமிருந்து தரவு வெற்றிகரமாக பெறப்பட்டது மற்றும் எதிர்கால உருவகப்படுத்துதல் மாதிரிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் உயர் உயர விமானம் பயணங்கள்.டி.ஆர்.டி.ஓ அதன் அடுக்கு மண்டல ஏர்ஷிப் தளத்தின் முதல் விமான சோதனைகளை வெற்றிகரமாக நடத்துகிறது விமானத்தின் போது, அவற்றின் செயல்திறனை சரிபார்க்க அழுத்தம் கட்டுப்பாடு மற்றும் அவசர பணவாட்டம் அமைப்புகள் சோதிக்கப்பட்டன. 62 நிமிட விமானத்திற்குப் பிறகு, சோதனைக் குழு மேலதிக ஆய்வுக்காக விமானக் கப்பலை…
புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், பாஜகவுக்கு ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்டவர் வாக்குகள் அதிகரித்துள்ளது. இதுவே, சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தன் முடிவை மாற்றியதன் முக்கியப் பின்னணியாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் உயர் சாதியினர் மட்டுமே பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்பட்டனர். பாஜக என்றவுடன், பலரது மனதில் தோன்றிய முதல் எண்ணம் அது ஒரு உயர் சாதியினர் கட்சி என்பதுதான். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, பாஜகவின் முக்கிய வாக்காளர்கள் உயர் சாதியினர் மட்டுமே என்ற கருத்து இருந்தது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜகவின் பிற்படுத்தப்பட்ட ஓபிசி வாக்கு வங்கி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதனால், பாஜகவும் பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் கட்சியாகிவிட்டது. இதன் காரணமாகத்தான் பாஜக வட மாநிலங்களில் தொடர்ந்து தம் ஆட்சிகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஓபிசி வாக்கு வங்கி, பாஜகவின் கணக்கில் தொடர்ந்து…
பெர்த்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற்ற இரு ஆட்டங்களில் 3-5, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் கடுமையாக போராடிய இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் நவ்னீத் கவுர் (35-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (59-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கிரேஸ் டூவர்ட் (2-வது நிமிடம்), ஜேட் ஸ்மித் (36-வது நிமிடம்), கிரேட்டா ஹேய்ஸ் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று மீண்டும் மோதுகிறது.
வடசென்னையில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் மையம் திறக்கப்பட உள்ளது. வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வெளி நாடு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள்…
