புதுடெல்லி: ஆன்லைன் மூலமாக பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் சமூகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால்தான் தடையால் ஏற்படும் வருவாய் இழப்பை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் இழப்பதாக அரசு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தப்பட்ட தீய விளைவுகள் குறித்து கவலை எழுப்பியுள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடும் பலர் தங்களது சேமிப்பை இழந்து கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாகும்போது, விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டு…
Author: admin
காஞ்சிபுரம்: ‘சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது காஞ்சிபுரம் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பினர் அவரை சந்தித்தனர். அவர்கள் பட்டு இழை, சரிகை விலை குறைப்பு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா, கூட்டுறவு சங்கங்களுக்கு வருடத்துக்கு ரூ.50 கோடி மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதேபோல் வணிகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர். விளைபொருட் களுக்கு கூடுதல் விலை, இடு பொருட்களை இலவசமாக வழங்குவது, ஏரி,…
சென்னை: ‘தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளு மன்றத்தில் கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ரகுமான் கான் எழுதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசிய தாவது: ரகுமான்கான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். அவர் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழகம் முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும். கருப்புச் சட்டம்: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்பு களை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை…
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து, மணல் கடத்தல் காரர்கள் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நேர்மையாக பணியாற்றிய அதிகாரியை தாக்கியதுடன், இதற்கு மேலும் கடத்தலைத் தடுக்க முயற்சித்தால் வண்டியை ஏற்றிக் கொலைசெய்துவிடுவதாக மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘திமுக ஆட்சி அமைந்ததும் மணல் அள்ளலாம்’ என அச்சாரமிட்டதை ஒப்பிட்டுப் பார்த்தால் தொடர்ந்து மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு திராவிட மாடல் அரசே ஒத்துழைப்பு தருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள். சங்கரன்கோவில் நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 12 வார்டுகளை வென்றது அதிமுக. இருந்த போதும், 9 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த திமுக, கூட்டணி தோழர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. உமா மகேஸ்வரி சேர்மனானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே சொந்தக் கட்சியினரே உமா மகேஸ்வரிக்கு எதிராக கொடிபிடிக்கத் தொடங்கினர். இதையடுத்து அதிமுக-வினருடன் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உமா மகேஸ்வரியை சேர்மன் இருக்கையை விட்டு இறக்கியது திமுக. இதையடுத்து ஆகஸ்ட் 18-ம் தேதி சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இம்முறை திமுக சார்பில் கவுசல்யாவும் அதிமுக சார்பில் அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். கடந்த முறை திமுக-வும் அதிமுக-வும் தலா 15 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இம்முறையும் அப்படித்தான் நடக்கும் என பலரும் கருதினர். ஆனால்,…
புற்றுநோய் இறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமான நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் மேம்பட்ட கட்டங்கள் வரை கண்டறியப்படாமல் போகிறது. முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், சுவாசம், மூச்சுத் திணறல், இரத்தத்தை இருமல் மற்றும் விவரிக்கப்படாத சோர்வு ஆகியவற்றால் மோசமடைந்த மார்பு வலி அடங்கும். ஆரம்பகால நோயறிதல் முக்கியமானது, எனவே இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், குறிப்பாக புகைபிடிக்கும் வரலாற்றுடன் ஒரு மருத்துவரை அணுகவும். உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் முக்கிய காரணமாகும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அனைத்து நிகழ்வுகளிலும் 85% இல், புகைபிடிப்பதே முக்கிய காரணமாகும். இந்த புற்றுநோயை அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டிருப்பதால், ஆரம்பத்தில் நோயைப் பிடிப்பது மிக முக்கியமானது. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் மேம்பட்ட கட்டங்களில் மட்டுமே கண்டறியப்படுகின்றன, அங்கு சிகிச்சை விருப்பங்கள் குறைவாகவே உள்ளன. அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பது ஆரம்பகால நோயறிதலுக்கு உதவும். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத நுரையீரல் புற்றுநோயின்…
திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி, 1982 பிப்ரவரியில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் போனார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி. நடைபயணத்தில் அவரது காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்ட அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதியை போனில் அழைத்து நலம் விசாரித்தார். அத்தோடில்லாமல் தனது நண்பருக்கு உதவியாக இருக்கட்டுமே என்பதற்காக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்றையும் மருத்துவக் குழுவினர் சகிதம் அனுப்பிவைத்தார். திமுக-வால் இதை வரவேற்கவும் முடியவில்லை; வசைபாடவும் முடியவில்லை. 43 வருடங்கள் கழித்து வரலாறு வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. இப்போது, தனது பிரச்சாரக் கூட்டங்களுக்குள் ஆளும்கட்சி வேண்டுமென்றே ஆம்புலன்ஸை விட்டு ஆட்டையைக் கலைப்பதாக ஆவேசப்பட்டிருக்கிறார் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். இபிஎஸ்ஸின் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ பரப்புரை பயணம் கடந்த 19-ம் தேதி வேலூர்…
மதுரை: மதுரையில் நேற்று மாலை நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். மதுரை பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக மேற்கொண்டிருப்பது உண்மையான, உணர்வுப்பூர்வமான, நல்ல அரசியல், நல்லவர்களுக்கான அரசியல். தமிழகத்தில் 1967, 1977-ல் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததுபோல, வரும் 2026-ம் ஆண்டிலும் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போவதை உறுதியாக சொல்கிறது இந்த மாநாடு. ‘கூட்டம் எல்லாம் ஓகே, இது எப்படி ஓட்டாக மாறும்’ என்று நம்மை விமர்சிக்கின்றனர். தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஓட்டாக இருக்காது. மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக, எங்களை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, நான்…
ரோட்டி மற்றும் காய்கறிகள் பல உணவுகளில், குறிப்பாக தெற்காசிய வீடுகளில் பிரதான உணவுகள். நீரிழிவு நோயாளிகளுக்கு, பொதுவாக நுகரப்படும் இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது இந்த நிலையை திறம்பட நிர்வகிக்க அவசியம். ரோட்டி மற்றும் காய்கறிகள் இரண்டும் ஒரு சீரான நீரிழிவு உணவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும், இரத்த குளுக்கோஸ் மீதான அவற்றின் தாக்கம் மாவின் வகை, காய்கறிகளின் வகை, பகுதி அளவு மற்றும் உணவு சேர்க்கைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது. இந்த கட்டுரை ரோட்டி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கும் இரத்த சர்க்கரை அளவிற்கும் இடையிலான உறவை ஆராய்கிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குகிறது.நீரிழிவு நோயாளிகளில் ரோட்டி மற்றும் சப்ஸி இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றனமெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய ஆய்வில், ஆரோக்கியமான தன்னார்வலர்களில் தரிசுனை, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 12 பாரம்பரிய இந்திய உணவுகளின்…
சென்னை: தமிழகத்தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங் களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையி டையே 60…