Author: admin

இந்தூர்: ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி, உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் தேதி உயிரிழந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதால்…

Read More

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார். நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.ஜேக்கப் பெத்தேல் 55, விராட் கோலி 62, தேவ்தத் படிக்கல் 17, கேப்டன் ரஜத் பட்டிதார் 11, ஜிதேஷ் சர்மா 7 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் களம்புகுந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு…

Read More

பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ரக குண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு வெகுவாக குறைந்தது. இந்தத் தகவலை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி இயந்திரங்கள் மிகவும் பழமையானவை. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததால் வெடிமருந்து தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவில்லை. அதனால் இங்கு உடனடியாக வெடிமருந்து பொருட்களை அதிகளவில் தயாரிப்பது சிரமம். பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி படையைத்தான் அதிகளவில் சார்ந்துள்ளது. அப்படைக்குத் தேவையான தளவாடங்கள் குறைவாக இருப்பது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு…

Read More

மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு லைவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசிய பாபில் கான, “ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், சித்தாந்த் சதுர்வேதி, ராகவ் ஜூயல், ஆதர்ஷ் கவுரவ், அர்ஜித் சிங் போன்றோரை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறது. பாலிவுட் மிகவும் மோசமானது” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. ஏற்கெனவே சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்தச் சூழலில் தற்போது பாபில் கான் வெளியிட்ட இந்த வீடியோ மீண்டும் இதனை தட்டி எழுப்பியுள்ளதாக தெரிகிறது. சில மணி நேரங்களில் இந்த வீடியோவை பாபில் கான் டெலிட் செய்துவிட்டார். பாபில்…

Read More

சென்னை: சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. மருத்துவமனையில் இதுவரை 2.69 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். 210 அறுவை சிகிச்சைள் நடந்துள்ளன. முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி பெற்று கொள்வதற்காக மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் குஜராத், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி, கோவா, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 41 மருத்துவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று சென்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு, சுகாதாரத்துறைக்கு மகுடம் சூடுவது போல இந்த…

Read More

இங்கே ரகசியம்: வரிசையில் வரிசையில் செல்லுங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு குழுவாக மட்டுமல்லாமல் கவனமாகப் பாருங்கள். 11 வது வரிசையில் எங்கோ (மேலே இருந்து எண்ணுகிறது), இடது புறத்தை நோக்கி, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். இது சரியான மையத்தில் இல்லை, இதுதான் தந்திரமானதாக ஆக்குகிறது. இது தீவிர வலதுசாரி-குறிப்பாக 11 வது வரிசையில், இடதுபுறத்தில் இருந்து 16 வது நெடுவரிசையை நோக்கி ஒரு பிட். இரண்டு 8 களைத் தொடர்ந்து “பி” இல்லை என்பதை நீங்கள் உணரும்போது அதைக் கண்டுபிடிப்பீர்கள்.

Read More

பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது. கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடை திறப்பின்போது இந்திய ராணுவத்தினர் தெய்வீக ராகங்களை இசைத்து பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கினர். பத்ரிநாத் கோயில் நடை திறப்பு நிகழ்வில், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மாநில பிரிவு தலைவர் மஹிந்திர பட் மற்றும் டெஹ்ரி எம்எல்ஏ கிஷோர் உபத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்ரிநாத் யாத்திரை பாதுகாப்பாகவும், சீரானதாகவும் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து இந்தாண்டுக்கான சார்தாம்…

Read More

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன். நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டில் ஒன்றில் கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது அது நேர்மையாக இருக்கிறதா இல்லையா என்று தெரியும். ஒரு படம் என்று வரும்போது 150 முதல் 200 பேர் வரை பணிபுரிகிறோம். அவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் வெளியாவது என்பது ஒரு கனவு. படம் அனைவருக்கும் பிடிக்கும்போது அது ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்கவிடக்கூடாது என்பது போல சில விமர்சனங்கள் இருக்கின்றன. நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள்…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அப்படியெனில், 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும்.…

Read More