சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று (மே.5) காலை காலமானார். அவருக்கு வயது 67. தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகத் தொடங்கி, குணச்சித்திர கதாபாத்திரங்கள், கதாநாயகன் எனப் பல்வேறு பரிமாணங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தததாகத் தெரிகிறது. இந்நிலையில், சாந்தி இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை 11.30 மணியளவில், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
Author: admin
தூத்துக்குடி: சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ 32 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது. சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கும்பலை தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது செய்ய தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கும்பல் தூத்துக்குடிக்குச் செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே…
ஓசூர்: ஆண்டு முழுவதும் சந்தையில் நல்ல விலை கிடைத்த நிலையில், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிந்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் உருளைக் கிழங்கை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என ஓசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், பீ்ட்ரூட், நூல்கோல், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியி்ல் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஓசூர் பத்தளப்பள்ளி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதில், பாகலூர், சூளகிரி, பேரிகை பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்பம் உருளைக் கிழங்கு சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இப்பகுதியில் விளையும் உருளைக்கிழங்கு செந்நிறத்தில் விளைவதாலும், இனிப்பு சுவையுள்ளதாலும், பொதுமக்கள் சமையலுக்கு அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.…
மாணவர்களைப் பொறுத்தவரை, இது ஆண்டின் மிகவும் பயங்கரமான நேரம் – தேர்வு முடிவுகள் மூலையில் உள்ளன, மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் முடிவுகள் என்ன கொண்டு வரும் என்று மூச்சுத் திணறலுடன் காத்திருக்கிறார்கள். தேர்வு கவலை முடிவு மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், உண்மையில் ஒரு மாணவனை அணியலாம், இது தூக்கமில்லாத இரவுகள், விரைவான இதய துடிப்பு, பீதி தாக்குதல்கள், பசியின்மை, தலைவலி மற்றும் பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்த முடியும். இருப்பினும், பீதியடைவது உங்கள் குழந்தையின் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும், எனவே உங்கள் குளிர்ச்சியாக வைத்திருப்பது முக்கியம், மேலும் உங்கள் பிள்ளை அதை எளிதாக எடுத்துக் கொள்ள உதவுகிறது. அவரது அறிகுறிகளை நிர்வகிப்பதோடு, ஆரோக்கியமான உணவுத் திட்டமும் உங்கள் பிள்ளைக்கு பரிசோதனைக்கு உதவக்கூடும், மேலும் முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சில நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் இங்கே …தேர்வுகள் எவ்வாறு பதட்டத்தை கொண்டு வருகின்றன?பரீட்சை கவலை என்பது ஒரு வகை…
புதுடெல்லி: பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி. தேவகவுடா உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, “ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். கடினமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பிரதமரை நான் வாழ்த்துகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு” என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.…
மதுரை: தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாக பொய்த் தகவல் பரப்பிய மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டுக்குச் செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்கு காரணம் நம்பர் பிளேட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், வெகு தூரம் துரத்தி வந்து சாலைத் தடுப்பை உடைத்துவந்து எங்கள் கார் மீது மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் என்னை (ஆதீனத்தை) கொல்ல சதி என்றும் மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் காவல்துறை தற்போது அந்த வாகன விபத்து நடந்த வீடியோ காட்சியை ( CCTV) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மதுரை ஆதீனம்…
இன்று காலை 8:10 மணிக்கு எக்ஸ் பயனரால் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட் அதன் எதிர்பாராத உள்ளடக்கத்திற்காக வைரலாகிவிட்டது. பார்வைக்கு செயலில் உள்ள எக்ஸ் பயனரான நாராயணன் ஹரிஹரன், தனது வழக்கமான கார் கிளீனருடன் ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், இது பலரை மேடையில் ஆர்வமாகவும், தீர்க்கப்படாததாகவும் விட்டுவிட்டது.நேபாளத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மற்றும் சென்னையில் வசிக்கும் கார் கிளீனர், சமீபத்தில் நாராயணனுக்கு அவசரநிலை காரணமாக ஒரு மாத கால இடைவெளியில் செல்வார் என்று தெரிவித்தார். நாராயணன் நிதி உதவியை வழங்கினார், ஆனால் அடுத்து என்ன நடந்தது என்று அவர் குறிப்பிட்டார், அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆழ்ந்த அமைதியற்றவர்.அவர் கூறினார்: “மேரே மனைவி கோ சுடெயில் நே பக்காத் லியா ஹை.” (ஒரு பேய் என் மனைவியைக் கொண்டிருந்தது.)தமிழில் மனைவியின் திடீர் சரளமாக கேள்விகளை எழுப்புகிறதுநாராயணனின் கூற்றுப்படி, அந்த மனிதனின் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள், அவளுடைய இதயத்தில் ஒரு துளை சம்பந்தப்பட்ட இதய நிலை…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டதால் அந்த ஆற்றின் வழியாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரியாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “இது…
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இதுவரை சரிவர ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கி மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார். இந்த திடீர் ‘காய்’ நகர்த்தலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் திக்குமுக்காடினார். மயங்க் யாதவ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார். அவரை ஜாஷ் இங்லிஸ் 2-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி லக்னோவின் அடிப்படைகளைத் தகர்த்ததோடு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகத்துக்கு உத்வேக மூட்டினார். இங்லிஸ் 14 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். இதில் 1 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் பவர் ப்ளேயில் பஞ்சாப் கிங்ஸ் 66 ரன்களை விளாசிட மாறாக லக்னோ தங்கள் பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 38 ரன்களையே எடுத்தனர். 237 ரன்கள் இலக்கை விரட்டும்…
மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்கிற எம்.கே.ராதா, ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தேசபக்தி நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் முன்னணி நடிகராக இடம் பிடித்திருந்தார். எல்லீஸ் ஆர்.டங்கனின் ‘சதி லீலாவதி’யில் நாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து அனாதை பெண், வனமோகினி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் என பல படங்களில் நடித்துள்ளார். அவர் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று, ‘கண்ணின் மணிகள்’. இதில், அவருடன் பத்மினி, எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தர், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, எம்.வி.ராஜம்மா, டி.ஏ.மதுரம் என பலர் நடித்தனர். அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜானகிராமன், இந்தப் படத்தைத் தனது மகேஸ்வரி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கினார். ஏ.எல்.நாராயணனும் கணபதியப்பனும் வசனத்தை எழுதினர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார். பாபநாசம் சிவன், கம்பதாசன், சுப்பு ஆறுமுகம், ஏ.மருதகாசி என பலர் பாடல்கள் எழுதினர். நாகரிக வாழ்க்கையை நையாண்டி செய்து என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய,…
