சென்னை: நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் காயமடைந்து, வாழ்க்காதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள ராஜாங்க நல்லுறவுகளை அடிப்படையாக கொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது இந்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும்,…
Author: admin
எடை இழப்பு என்பது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையாகும், மேலும் வயது, வளர்சிதை மாற்றம், பாலினம், நாட்பட்ட நிலைமைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. பெரும்பாலான நேரங்களில், ஓரிரு கிலோ/பவுண்டுகளை இழந்த பிறகு, நீங்கள் பீடபூமியைத் தாக்கி, என்ன, எவ்வளவு செய்தாலும், எடை குறையாது என்று இடுகையிடவும். உங்கள் எடை இழப்பு திட்டங்களுக்கு உடற்பயிற்சி உதவுகிறது, (மேலும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது), எடை இழப்பு உண்மையில் நீங்கள் சாப்பிடுவதில் 80% ஆகும். எனவே, நீங்கள் ஃப்ளாப்பைக் கொட்ட விரும்பினால், உங்கள் வயிற்றில் நீங்கள் வைப்பதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல செய்தி என்னவென்றால், சில உணவு சேர்க்கைகள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும், மேலும் என்னவென்றால், அவை சுவையாக இருக்கின்றன (மேலும் மருத்துவர் அங்கீகரிக்கப்பட்டவை) இங்கே அவை!
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 2023-ம் ஆண்டு செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனையிட்டு வழக்கு பதிவு செய்தனர். அப்போது முதல் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், மணல் எடுப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட 55,000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை வாய்ப்பை இழந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணல் குவாரி இயங்காததால், இதற்கு மாற்றாக செயற்கை மணல் (எம்.சாண்ட்) பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1,000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர். கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப்பணிகள்…
ஷாருக் கான் ஒரு சபியாசாச்சி குழுமத்தில் திகைப்பூட்டும் மெட் காலா அறிமுகத்தை மேற்கொண்டார், நவீன மகாராஜா பாணியை உள்ளடக்கியது மற்றும் ஒரு வெறித்தனத்தைத் தூண்டியது. 2025 மெட் காலா, கருப்பொருள் “சூப்பர்ஃபைன்: தையல் பிளாக் ஸ்டைல்”, கருப்பு ஆண்கள் ஆடைகள் மற்றும் கலாச்சார செழுமையை கொண்டாடுகிறது. ஒரு நட்சத்திரம் நிறைந்த விருந்தினர் பட்டியல் மற்றும் எஸ்.ஆர்.கே குற்றச்சாட்டை வழிநடத்துவதால், இந்த நிகழ்வு உலகளாவிய ஃபேஷனை மறுவரையறை செய்வதாக உறுதியளிக்கிறது. அவர் வெள்ளித் திரையை ஆட்சி செய்துள்ளார். அவர் எங்கள் இதயங்களை ஆட்சி செய்தார். இப்போது, ஷாருக் கான் ஃபேஷனின் மிகவும் மதிப்புமிக்க மேடையில் தனது சரியான இடத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளார் – மெட் காலாவில். இந்த ஆண்டு தனது பெரிய அறிமுகத்தை மேற்கொண்ட, பாலிவுட்டின் பாட்ஷா நியூயார்க் வீதிகளை தனது தனிப்பட்ட சிவப்பு கம்பளமாக மாற்றினார், அவர் ஒரு கறுப்பு-கருப்பு நிற சபியாசாச்சி படைப்பில் வெளியேறினார், அது ராயல்டியை கிசுகிசுத்தது மற்றும்…
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.…
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி சக நீதிபதிகள் முன்னிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அவர்களுக்கு நி்ரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீதிபதிகள் ஆர்.ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் பணிஓய்வு பெற்ற நிலையில், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் வரும் மே 9-ம் தேதியும், நீதிபதி வி.பவானி சுப்பராயன் வரும் மே 16-ம் தேதியும், நீதிபதி வி.சிவஞானம் வரும் மே 31-ம் தேதியும் பணிஓய்வு பெறவுள்ளனர். இதன்காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஆக குறையும் நிலை உள்ளது. இந்நிலையில் கர்நாடக…
கோடை மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வெப்பம் தணிந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் வரும் 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று வழக்கமான அளவில் இருக்கும். 7, 8, 9-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும்…
புதுடெல்லி/நியூயார்க்: நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும். போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள்…
‘ஸ்வயம் பிளஸ்’ கல்வி திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான 5 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்வயம் பிளஸ் ஆன்லைன் கல்வி திட்டத்தின்கீழ் இயற்பியலில் ஏஐ, வேதியிலில் ஏஐ, கணக்குப்பதிவில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் வித் ஏஐ, ஏஐ மற்றும் எம்எல் யூசிங் பைத்தான் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக 5 ஆன்லைன் படிப்புகளை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சேரலாம். ஏஐ தொடர்பான அடிப்படை விவரங்கள் தெரிந்திருக்க அவசியம் இல்லை. புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் இருந்தால் போதும். ஏஐ அறிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த கல்வி திட்டத்தின்…
சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 4 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில் (16865- 16866) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படவுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலிலும் (16101- 16102) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி ஜூலை 1-ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது. மேலும் நாகர்கோவில் – தெலங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில் (16353- 16354) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 5-ம் தேதி முதலும் சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில் (20635- 20636) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 2-ம் தேதி முதல் இணைத்து இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே…
