சென்னை: ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 32-வது ஆண்டு தொடக்க விழா, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, வளாகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவதால்தான் மதிமுக இத்தனை ஆண்டுகள் வளர்ந்திருக்கிறது. ஒன்றியம், நகரங்களில் கட்சி கட்டமைப்பு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்து மதிமுகவுக்கு கிராமங்களில் 10 தொண்டர்களாவது இருக்கின்றனர். 62 ஆண்டுகள் பொது வாழ்கையில் பயணித்து வருகிறேன். தமிழ், தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். பேச்சும், எழுத்து திறனும் இருக்கும் வரை மக்கள் பணி செய்யத் தயாராக இருக்கிறேன். கூட்டணிக்காக எந்த சமரசமும் கிடையாது. பிரதமர்…
Author: admin
புதுடெல்லி: சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார். மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-2017-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டப் போரட்டத்தின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “ தொகுதி மறுவரையின்போது ஓபிசி குறித்த தரவுகள் இருந்தபோதும்…
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் கொல்கத்தா அணி உள்ளது. இந்த 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகளையே பெறும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின்…
சென்னை: ‘எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எந்த சூழலிலும் கைகோர்க்க மாட்டோம்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக வணிகர் அணியின் சார்பில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் எந்தச் சூழலிலும் விசிக சமரசம் செய்துகொள்ளாது. எத்தனை நெருக்கடிகள் தந்தாலும் அந்த நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் விசிகவுக்கு உண்டு. பதவி ஆசை காட்டி வீழ்த்த நினைத்தாலும், அச்சுறுத்தி வீழ்த்த நினைத்தாலும் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம். அப்படி சமரசம் செய்து 10 இடங்களில் வெற்றிபெற்று என்ன செய்வது? எதுவும் வேண்டாம் என்றுகூட இருப்போமே தவிர, பாஜக போன்ற மதவாத சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டு, 10 பேரை உள்ளே அனுப்புவதற்கு, நான் கட்சியை நடத்தவே தேவையில்லை. அந்த அவசியம் எனக்கு கிடையாது. இதுபோன்ற ஒரு…
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையைப் பராமரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் அணை பாதுகாப்பு சட்டம் 2021…
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறியதாவது: “ஒவ்வொரு படத்துக்கும் அதிகம் மெனக்கெட்டு ரசிகர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போதும்…
தேனி: சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையைத் தொடர்ந்து, வரும் 18, 19-ம் தேதிகளில் நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ரப்பட உள்ளது. மேலும், அந்நாட்களில் பக்தர்களின் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் நடைதிறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும். இதன்படி, இடவம் மாதத்துக்காக (வைகாசி) வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. வரும் 19-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில், வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை வருகிறார். வரும் 18-ம் தேதி கோட்டயத்தில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர், மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல்லுக்கு வந்து, பின்பு அங்கிருந்து பம்பை வரை காரில் செல்கிறார். தொடர்ந்து பம்பையில் இருமுடி கட்டி, சந்நிதானத்துக்குச் செல்லவிருக்கிறார். இதையொட்டி…
புதுடெல்லி: உத்தரபிரதேச அரசின் உள்துறை சிறப்பு செயலாளராக அண்ணாவி தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் தமிழ்நாட்டை சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகின்றனர். கரூரின் சோமூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயி அன்னாவி. இவரது மூத்த மகனான அண்ணாவி தினேஷ் குமார், கடந்த 2012-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உ.பி. அதிகாரியானார். இவர், ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். உ.பி. உயர் அதிகாரியான தினேஷ் குமார், தொழில்நுட்பக் கல்வித் துறையின் சிறப்பு செயலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அண்ணாவி தினேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல், நீண்ட இடைவெளிக்கு பின் மாநில உள்துறையில் பணியாற்ற உள்ள தமிழர் என்ற பெருமை தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. இதற்குமுன் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் தமிழரான கல்யாண் கிருஷ்ணன், உள்துறை செயலாளராக இருந்தார். உ.பி.யின் மிக முக்கியமான…
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை கடை உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூவைச் சேர்ந்த மதனிகா என்ற பக்தர் நேற்று பிரசாத கடையில் வாங்கிய புளியோதரை பிரசாதத்தில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இத்தகவல் அறிந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சாமிதுரை கூறும்போது,“கோயிலில் பிரசாதம் விற்பனை செய்ய…
நீங்கள் கால்சியம் மாத்திரைகளை தோராயமாகத் தூண்டினால், உங்கள் காலை காலை உணவு அல்லது இரவு உணவிற்கு பிந்தைய இரவு உணவு மூலம்-நீங்கள் அனைத்தையும் தவறாகச் செய்யலாம். “உங்கள் எலும்புகளைப் பாதுகாக்க” நீங்கள் எடுக்கும் அப்பாவி வெள்ளை டேப்லெட் உறிஞ்சப்படாது. மோசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை நேராக லூவுக்கு கீழே பறிக்கக்கூடும்.ஆம், கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் வரும்போது நேரம் முக்கியமானது. ஆனால் நீங்கள் அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள், அவற்றை நீங்கள் எதை இணைக்கிறீர்கள், எந்த வகையை நீங்கள் கூட விழுங்குகிறீர்கள். இது ஒரு மாத்திரை மட்டுமல்ல – அது அறிவியல்.
