பதவியேற்பு விழா வரும் 20-ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்குவதற்கான உறுதிமொழியை நாங்கள் ஏற்க இருக்கிறோம். புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அனைத்துப் பணிகளும் நவ.21-ம் தேதிக்குள் நிறைவடையும்.” என தெரிவித்துள்ளார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேடியு மூத்த தலைவர் விஜய் குமார் சவுத்ரி, “திங்கள் கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தில், தற்போதைய சட்டப்பேரவையை கலைப்பதற்கான முறைப்படியான பரிந்துரை அளிக்கப்பட்டது. இது நவ.19 முதல் அமலுக்கு வரும். இந்த பரிந்துரையை அடுத்து முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, அமைச்சரவை பரிந்துரையை தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி…
Author: admin
கலிபோர்னியா: எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏஐ திறன் கொண்டு இயங்கும் இந்த Grokipedia, விக்கிபீடியாவுக்கு மாற்று என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. சுமார் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தமிழ் உட்பட சுமார் 343 உலக மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது.
சென்னை: ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 155 பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஐஎஸ் உள்பட 23 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. இது, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.
எனினும் போர்ச்சுகல் அணி அபாரமாக செயல்பட்டு 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜோவோ நெவ்ஸ் (30, 41 மற்றும் 81-வது நிமிடங்கள்), புருனோ பெர்னாண்டஸ் (45+3, 52 மற்றும் 72-வது நிமிடங்கள்) ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினர்.முன்னதாக ரெனாடோ வெய்கா 7-வது நிமிடத்திலும், கோன்கலோ ரமோஸ் 28-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்திருந்தனர். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் 90+2-வது நிமிடத்தில் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ கோல் அடித்தார். அர்மேனியா அணி சார்பில் 18-வது நிமிடத்தில் ஸ்பெர்ட்சியன் ஒரு கோல் அடித்தார்.
இந்த சூழலில் எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென தனது கொள்கையை மாற்றி உள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “அமெரிக்கர்களுக்கு வேலை வழங்கவே முன்னுரிமை அளிக்கிறேன். ஆனால் சிக்கலான மற்றும் உயர் தொழில்நுட்ப பணிகளுக்கு தேவையான திறமையான நிபுணர்கள் அமெரிக்காவில் இல்லை. எனவே உலகம் முழுவதும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவது அவசியம்” என்று தெரிவித்தார்.இதுதொடர்பாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எச்1பி விசாவில் வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்காவுக்கு வரவழைப்பது அவசியம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அதிபர் ட்ரம்பின் தொலைநோக்கு திட்டத்தை விவரிக்க கடமைப்பட்டு உள்ளேன்.
தேனி: சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவ.16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்க உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இவர்களின் பாதுகாப்பு, தரிசனம் மற்றும் உரிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
டிச.5-ம் தேதி திட்டமிட்டப்படி ‘வா வாத்தியார்’ வெளியாகுமா என்ற கேள்வி திரையுலகினர் மத்தியில் எழுந்திருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. இறுதியாக டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தான் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 23-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 24-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே: இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தில் உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் கூறினார். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் புனே நகரில் 100 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள கார் உற்பத்தி ஆலையில் அனைத்து ரக பெட்ரோல், டீசல் கார்களுடன், மின்சார கார்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணிபுரியும் 800 பேரில் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள். இந்நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் செய்திாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 50,000 சொகுசு கார்கள் விற்பனையாகும் நிலையில், அதில் 20 ஆயிரம் கார்கள் பென்ஸ் கார்களாகும். எங்கள் நிறுவனம் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
சௌகரியம், வசதி அல்லது விரைவான ஆற்றலை வழங்கும் உணவுகளை பலர் அடைகிறார்கள், அந்த உணவுகள் எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரையை அதிகரிக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்காமல். அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் பொருட்கள் பொதுவாக எடை அதிகரிப்பு அல்லது நீரிழிவு நோயின் பின்னணியில் விவாதிக்கப்படும் அதே வேளையில், ஒரு காலத்தில் உணவுக்கு தொடர்பில்லாததாக தோன்றிய பிற நிலைமைகளை அவை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை ஆராய்ச்சி ஆராயத் தொடங்கியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் அத்தகைய ஒரு பகுதி. புகைபிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை முக்கிய பங்களிப்பாக இருந்தாலும், விஞ்ஞானிகள் நிலையான குளுக்கோஸ் ஸ்பைக்குகள் காலப்போக்கில் நுரையீரல் திசுக்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை ஆராயத் தொடங்கியுள்ளனர். நவீன உணவு முறைகள் மாறி, பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் அணுகக்கூடியதாக இருப்பதால், ஜிஐ அளவுகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் புரிந்துகொள்வது தினசரி உணவுத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகி வருகிறது.உயர் GI உணவுகள்…
