இந்த ஆண்டில் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானின் இருப்பிடமாக இந்துக்களால் கருதப்படும் கைலாஷ் மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் சீன நாடுகள் தரப்பில் ராணுவ படையினரை எல்லையில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை திட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்…
Author: admin
இன்று தகவல் தொடர்புக்கு ஏராளமான சாதனங்கள் இருந்தாலும் அரசியல் நெருக்கடி நிலை, பெருவெள்ளம், நில நடுக்கம், போர், பஞ்சம், கொள்ளைநோய், காட்டுத்தீ உள்ளிட்ட அசாதாரண சூழல்களில் வானொலியே தகவல் தொடர்புக்கான முக்கியமான கருவியாக இருக்கிறது. ஏ.எம், எஃப்.எம் போன்ற பண்பலை வானொலிகளைவிடக் குறுகிய அலை வானொலி, ஹாம் (HAM) வானொலி, சமூக வானொலி போன்றவை எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுபவை. தகவல் தொடர்பு அற்றுப்போன நிலையில் வதந்திகளும் பொய்ச் செய்திகளும் மக்களிடையே பரவும் சூழலில் சமூக வானொலிகள் உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளும் கருவியாக விளங்குகின்றன. பேரிடர் மேலாண்மை: மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், பிஹார் பெருவெள்ளம், போபால் விஷவாயுக் கசிவு, குஜராத் நிலநடுக்கம், ஆந்திர மாநிலக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட புயல், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களின்போது சமூக வானொலிகள் பெருமளவில்…
சென்னை: கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தகுதித் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நேற்று மதியம் வெளியிட்டது. அவற்றை மாணவர்கள், பெற்றோர்கள் www.dge.tn.gov.in என்ற…
இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய பொக்கிஷம் ரிஷப் பந்த். ஆனால், அவரை ஐபிஎல் கிரிக்கெட் காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போதைய தோனி போல் பேட்டிங் செய்வதை தவிர்ப்பது, பின்னால் இறங்குவது, சாக்குப் போக்குச் சொல்வது என்று அவர் மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நேற்றைய போட்டியில் இறங்கும் வரை 108 பந்துகளில் 106 ரன்களையே எடுத்துள்ளார். ஆனால் 110 பந்துகளில் 106 என்பதாகவே அவர் கதை உள்ளது. தான் இறங்குவதை தோனி போலவே ஒத்திப் போடுகிறார். தோனிக்கு வயதாகிறது, சரி. இவருக்கு என்னவாயிற்று? அதுவும் ஓர் அணியின் கேப்டனாக இருந்து கொண்டு அனைவருக்கும் ஓர் உத்வேகமான தலைமையாக வழிகாட்டியாக இல்லாமல் ஓ.பி. அடிக்கலாமா? திடீரென அவருக்கு இத்தகைய பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன என்பதை கம்பீர் உட்பட பிசிசிஐ நிர்வாகம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். ஓப்பனிங் இறங்கினார், 4-ம் நிலையில்…
புதுடெல்லி: பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) நடத்திய சதியின் ஒரு பகுதியாகும். ஹேப்பி பாசியாவுக்கு ஏற்கெனவே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட 14 குண்டு வீச்சு தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் ஹேப்பி பாசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில், ஹேப்பி பாசியா மீது 18 குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.…
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று (திங்கள் கிழமை) தயாரானது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக நேற்று இரவு குண்டம் தயாரானது. அம்மன் அழைத்தல் நிகழ்வு: இதை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து, மேள, தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு…
‘கேம் சேஞ்சர்’ தோல்வி குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தின் கதை கார்த்திக் சுப்பராஜ் உடையது. அவருடைய கதையை வைத்து ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார். தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து கார்த்திக் சுப்பராஜ், “சாதாரண ஓர் ஐஏஸ் அதிகாரியை பற்றிய ஒரு கதையினைத் தான் ஆரம்பத்தில் ஷங்கர் சாரிடம் கூறினேன். ஆனால், அது முற்றிலுமாக வேறொரு களத்தில் மாற்றிவிட்டார்கள். அக்கதையில் பல எழுத்தாளர்கள் ஈடுபட்டதால், கதை மற்றும் திரைக்கதை முற்றிலுமாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியான சமயத்தில், அதனை பாராட்டி கார்த்திக் சுப்பராஜ் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவினை முன்வைத்து இப்போது பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கோடையில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சார்பில் சென்னை திரு.வி.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் எனது நண்பர். ஆனால், அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள். திருமாவளவனின் கருத்துகள், அவர் தெளிவற்ற நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதிமுக அனைவரையும் மதிக்கும் பண்பை கொண்டுள்ளது. சிறிய கட்சிகளாக இருந்தாலும், உரிய மரியாதை கொடுப்போம். ஆனால், திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் கசப்பான அனுபவத்தோடு, கசப்பான மனநிலையோடுதான் கூட்டணியில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக கூட்டணியில் விசிக சேருமா என்று…
டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நேற்று காலை வேகமாக சென்ற சரக்கு வேன் மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நூ ஹரியானா என்ற இடத்தில் பிரோஷ்பூர் ஜிர்கா பகுதி அருகே சரக்கு வேன் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் விரைவுச்சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், மற்ற 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மாண்டி கேரா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறை ஆய்வாளர் அமன்சிங் கூறுகையில், ‘‘ கோர விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார். விபத்துக்கான கரணத்தை அறிய சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். விசாரணை முடிந்து வேன் டிரைவர் அடையாளம் காணப்பட்டதும் வழக்கு…
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செவ்வாய் கிரக வீடியோவை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் தனது தொலைநோக்கு திட்டம் குறித்து பேசினார். செவ்வாய் கிரகத்துக்கு இந்தாண்டில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்கினால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனை கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ‘செவ்வாய் கிரகத்துக்கு வருக’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒரு நிமிடம், 12 விநாடிகள் ஓடுகிறது. அதில் உயரமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய ரக விண்கலன்கள், விமானங்கள் வலம் வருகின்றன. அந்நகரத்தின் கட்டமைப்புகள் எல்லாம் மிக நவீனமாக உள்ளன. சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த சிலர் அங்கு சுவாசிக்கும் சூழல் இருக்குமா? என…
