Author: admin

ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார். அவருக்கான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிலிருந்து இதோ சில பாராட்டு பொன்முத்துக்கள்… யூசுப் பதான்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்துள்ளீர்கள். அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது இரட்டை மகிழ்ச்சி. நானும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காகத்தன் என் சாதனை சதத்தை எடுத்தேன். இளம் வீரர்களுக்கு இந்த பிரான்சைஸ் செய்வது உண்மையில் மேஜிக்தான். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சாம்பியன்! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: 14 வயதில் குழந்தைகள் கனவு காணும், ஐஸ் கிரீம் சாப்பிடும். வைபவ் சூர்யவன்ஷி விலைமதிப்பில்லா சதத்தை அதுவும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் போட்டியில் இருக்கும் அணிக்கு எதிராக எடுத்துள்ளார். வயதுக்கு மீறிய கிளாஸ், தைரியம்.…

Read More

பெய்ஜிங்: அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வர்த்தகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் அதிபர் ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.…

Read More

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.5) காலை பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோயிலை வந்தடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரம், நந்தியம் பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நகரமன்ற தலைவர் கா.கருணாநிதி, தமாகா வடக்கு…

Read More

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் மே 1-ல் வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் ‘டார்க் காமெடி’ வகைமையில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதில், ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் முழுவதுமே படத்தின் ஒன்லைனை வெளிப்படுத்தி வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குடியேறும் இலங்கைத் தமிழரின் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளே மையம். சசிகுமார் – சிம்ரன் இருவரும் இலங்கைத் தமிழ் தம்பதிகளாக கச்சிதமாக பொருந்துகின்றனர். இந்தக் குடும்பத்தை ‘காப்பாற்றும்’ கதாபாத்திரத்தில் ட்ரெய்லர்…

Read More

சென்னை: இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஆன்மிக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றார். இமயமலையில் ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். 3 நாள் ஆன்மிக பயணத்துக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர், கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், கடந்த 23-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், ‘ஸ்டான்போர்ட் இந்தியா மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ்…

Read More

மத்திய அரசு விதித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்தது. சார்க் விசா வைத்துள்ளவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஏப்ரல் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. மருத்துவ விசாவில் வந்தவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (ஏப். 29) முடிவடைகிறது. வருகை, வணிகம், திரைப்படம், பத்திரிகையாளர், போக்குவரத்து, மாநாடு, மலையேறுதல், மாணவர், பார்வையாளர், குழு சுற்றுலா, யாத்ரீகர் மற்றும் குழு யாத்திரை உள்ளிட்ட 12…

Read More

சாட்ஜிபிடி-க்கு 2-வது பெரிய சந்தை இந்தியா என்றும் ஏஐ சிப், செயலியை உருவாக்கி வருகிறது என்றும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த டீப்சீக் நிறுவனம் டீப்சீக்-ஆர்1 என்ற சாட்போட் செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறுகிய காலத்தில் இதை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்ட இது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற சாட்போட் செயலிகளைப் போலவே செயல்படுகிறது. இது ஏஐ உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்தார். அவர் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில், “முழு ஏஐ ஸ்டேக்கை…

Read More

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை தரவுள்ளோம் என அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளி (சிபிஎஸ்இ) புதிய கட்டிடத்தை கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று திறந்து வைத்தார். அக்கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. அதையடுத்து இந்நிகழ்வில் அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, “நீட் பயிற்சி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் 585 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். அதற்காக நகரத்தில் இரண்டு, கிராமத்தில் இரண்டு என நான்கு மையங்கள் அமைத்துள்ளோம். வரும் கல்வியாண்டில் வெகு விரைவில் புத்தகப்பை, ஷூ தரப்படும். ஸ்மார்ட் அடையாள அட்டை மாணவிகளுக்கு தர உள்ளோம். பெற்றோரே தங்கள் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்பதை மொபைல்போன் மூலம் அறியலாம். அரசு பள்ளிகளில் புகார் பெட்டிகளும் வைத்துள்ளோம்” என்றார். பின்னர்…

Read More

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை ஜஸ்பிரீத் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது ஒன்றரை வயது குழந்தையான அங்கத்துடன் கேலரியில் அமர்ந்து பார்த்தார். இந்நிலையில் குழந்தையின் முகபாவணை காட்சிகளை ஒருதரப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கருத்துகளை பதிவு செய்தனர். இது அதிகளவில் பரவியது. இந்நிலையில் இந்த பதிவுகளுக்கு சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், கூறியிருப்பதாவது: எங்களது மகன் உங்களது பொழுபோக்குக்கான தலைப்பு இல்லை. ஜஸ்பிரீத் பும்ராவும், நானும் அங்கத்தை சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ஏனெனில் இணையம் ஒரு வெறுக்கத்தக்க, இழிவான இடம், கேமராக்கள் நிறைந்த ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு குழந்தையை அழைத்து வருவதன் தாக்கங்களை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். சமூக…

Read More

டெக்சாஸ்: விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய தனது காதலியை தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் கட்டியணைத்து வரவேற்றார். தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், ப்ளு ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கி விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக ப்ளூ ஆர்ஜின் என்ற ராக்கெட்டும், 6 பேர் பயணம் செய்யும் வகையில் ‘நியூ செபார்ட்’ என்ற விண்கலமும் உருவாக்கப்பட்டது. இதில் பிரபல பாப் பாடகி கெட்டி பெர்ரி, தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ், சிபிஎஸ் டி.வி. தொகுப்பாளர் கேல் கிங் நாசா விஞ்ஞானி ஆயிஷா போவே, விஞ்ஞானி அமாண்டா இங்குயென், திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் நேற்று முன்தினம் பயணம் செய்தனர். நியூ செபார்ட் விண்கலத்துடன், ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டது. புவியின் வளிமண்டலத்தை கடந்து விண்வெளிக்குள் நுழைந்ததும், விண்கல குழுவினர் புவியீர்ப்பு விசை இன்மை, உடல் எடை குறைவு…

Read More