யு.எஸ்.ஏ.ஐ.டி பணிநிறுத்தம் திட்டங்கள் குறித்து பில் கேட்ஸ் எலோன் மஸ்க் வெடிக்கிறார் உலகின் பணக்கார மனிதர் எலோன் மஸ்க் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்ததிலிருந்து, அவர் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். மிக சமீபத்தில், தொழில்நுட்ப கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸும் மஸ்க் உலகின் சில ஏழ்மையான குழந்தைகளை கொலை செய்வதில் ஈடுபட்டதாக விமர்சித்தனர்.ஆனால் ஏன்?உலகில் வெளிநாட்டு உதவிகளை விநியோகிப்பதற்கு பொறுப்பான அமெரிக்க சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சிக்கு எலோன் மஸ்கின் சமீபத்திய வெட்டுக்களின் சூழலில் பேசிய கேட்ஸ், அவ்வாறு செய்வதன் மூலம் மஸ்க் தட்டம்மை, எச்.ஐ.வி மற்றும் போலியோ போன்ற பல கொடிய நோய்களின் மீள் எழுச்சியை அபாயப்படுத்துகிறார் என்று கூறினார். “உலகின் ஏழ்மையான குழந்தைகளை கொன்ற உலகின் பணக்காரனின் படம் ஒரு அழகான ஒன்றல்ல … இப்போது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அவர் உள்ளே சென்று சந்திப்பதை நான் விரும்புகிறேன், ஏனெனில் அவர் அந்த பணத்தை குறைத்தார்”…
Author: admin
Last Updated : 10 May, 2025 06:37 AM Published : 10 May 2025 06:37 AM Last Updated : 10 May 2025 06:37 AM பிரபல நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத், இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். அனுராக் ருத்ரா இயக்கும் ‘பிளஸ்டு பி தி எவில்’ என்ற ஹாலிவுட் ஹாரர் படத்தில் அவர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதில் ‘டீன் வுல்ஃப்’ உட்பட சில படங்களில் நடித்த ‘டெய்லர் போஸே’, பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டாலோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லயன் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் இந்திய நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நியூயார்க்கில் தொடங்க இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…
சென்னை: வரும் 11,12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் 11, 12 தேதிகளில் முகூர்த்தநாள் மற்றும் பவுர்ணமி ஆகியன வருவதால் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடுப்பு பெற்றிருந்தவர்கள் கூட மண்டல மேலாளர் அளவில் விடுப்பு எடுக்க மீண்டும் அனுமதி பெற வேண்டும் எனவும், பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் பணிக்கு வந்து ஒத்துழைப்பு வழங்கும்படி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ‘மரகதமலை’ என்ற படம் உருவாகியுள்ளது. ஃபேன்டஸி டிராமா கதையை கொண்ட இந்தப் படத்தை எல்.ஜி.மூவிஸ் சார்பில் எஸ்.லதா தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப், நாயகியாக தீப்ஷிஹா நடிக்கின்றனர். மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ, தம்பி ராமையா, சம்பத் ராம் என பலர் நடித்துள்ளனர். எல்.வி. முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். “இதன் கதையை 18-ம் நூற்றாண்டில் நடந்ததை போல உருவாக்கி இருக்கிறோம். புலி, யானை, டிராகன், கொரில்லா,பாம்பு, குதிரை ஆகியவற்றைக் கொண்ட ஃபேன்டஸி டிராமாவாக படம் இருக்கும். இப்போது விஎப்எக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த மாதம் வெளிவர இருக்கிறது. இதன் படப்பிடிப்பை, தடா காட்டுப்பகுதியில் பிரம்மாண்டமாக செட் அமைத்து நடத்தினோம்” என்றார் இயக்குநர் எஸ்.லதா. இதன் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது: முன்னாள் சுற்றுச்சுழல் துறை கண்காணிப்பாளர் எஸ்.பாண்டியனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்பேரில், சென்னை, வேலூரில், தமிழ்நாடு அரசு துறைகளுடன் தொடர்புடைய கன்சல்டன்சி நிறுவனங்கள், ஆலோசகர்களுக்கு (கன்சல்டன்ட்) சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்தவகையில், முக்கிய ஆலோசகர்களான (கன்சல்டன்ட்) பிரபாகர் சிகாமணி, ஏ.கே.நாதன், நவீன்குமார், சந்தோஷ்குமார், வினோத்குமார் ஆகியோர் சட்டவிரோதமாக அனுமதியை பெற்றுக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோதனையில் இவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4.73 கோடி ரொக்கம், டிஜிட்டல் பதிவுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றச்செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜம்மு-காஷ்மீர், பஹல்காம், பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது. உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார். அதன்படி, உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 (வாட்ஸ் அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த 52 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு…
புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களை கட்டாய படுத்த முடியாது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேசிய கல்வி கொள்கையை மாநிலங்கள் தேவையின்றி அரசியல் பிரச்சினையாக்குகின்றன. அனைவருக்கும் சீரான கல்வியை வழங்க வேண்டும் என்றுதான் தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு அனைத்து இந்திய மொழிகளும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இது அவர்களின் அடிப்படை உரிமை. இத்திட்டத்தை ஏற்க மறுப்பதன் மூலம், மாநில அரசு பள்ளிக் குழுந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வி என்ற அடிப்படை உரிமையை மறுக்கிறது. பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுதான் தேசிய கல்வி…
மதுரை: நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பழைய விளாங்குடி அதிமுக பகுதி செயலாளர் சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக சார்பில் மதுரை-திண்டுக்கல் சாலையில் விளாங்குடியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்துவைத்தார். இந்நிலையில், நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி மறுத்து, கூடல்புதூர் போலீஸார் நோட்டீஸ் ஒட்டினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: , தற்போது கடுமையான வெயில் காலம். மக்களின் நலன் கருதி ஒரு கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல்…
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் தாக்குதலையடுத்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்காக நிவாரண முகாம்கள் ஜம்மு மற்றும் சம்பலில் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று அந்த முகாம்களை பார்வையிட சென்ற ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அங்கிருந்த குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் குண்டுகளை வீசி தாக்கியதையடுத்து சம்பா முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்ற உமர் அப்துல்லா அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் அவரும் இணைந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை கடுமையாக கண்டித்துள்ள உமர் அப்துல்லா, நாங்கள் இத்தகைய சூழ்நிலையை உருவாக்க காரணமாக இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற வெற்றி தின பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். நாஜி ஜெர்மனி படைகளை வெற்றி கொண்டதை குறிக்கும் 80 ஆண்டு தினத்தையொட்டி ரஷ்யாவில் மாபெரும் வெற்றி தின பேரணிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உக்ரைனில் போரிடும் ரஷ்ய படைகளுடன், சீன படைகளும் இணைந்து அணிவகுப்பு மேற்கொண்டன. இந்த ஆண்டு ரஷ்ய வெற்றி தின அணிவகுப்பில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனா, பிரேசில், ஸ்லோவேக்கியா, செர்பியா உட்பட 27 உலக நாடுகளின் தலைவர்கள் இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்றனர். உக்ரைனில் நான்கு ஆண்டுகள் போர் நீடித்து வந்தாலும் ரஷ்யா உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கு சான்றாக வெளிநாட்டு தலைவர்களின் வருகை அமைந்திருந்தது. 2022-ம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதல் முழு அளவிலான போராக மாறியதற்குப் பிறகு…
