புதுச்சேரி: சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு நாளை (மே 11) மாமல்லபுரம் அருகே நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வழியாக வருவோர் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க புதுச்சேரி கலால்துறை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி கலால்துறை இணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரியில் உள்ள சாராயம், கள், பார் உட்பட அனைத்து மது விற்பனைக் கூடங்களையும் நாளை (மே 11) மதியம் 1 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ககும் வகையில் இந்த தடுப்பு நவடிக்கை எடுக்கப்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய ஆயுதப்படைகள், கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில், பஹவல்பூரில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மையம், முரிட்கே பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தளம் ஆகியவையும் அடங்கும். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹமது ஆகியவற்றின் முக்கிய நபர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலில், சில முக்கிய பயங்கரவாதிகள்…
சென்னை: தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சில தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக பிரத்யேக ஆய்வு நடத்தப்படும்…
இங்கிலாந்து தொடர் வரவிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். தான் ஓய்வு பெற விரும்புவதாக ஒரு மாதம் முன்பே பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து விட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பவில்லை என்பதில் கோலி தீவிரமாக இருந்தால் அவரது 14 ஆண்டு கால சிறப்புமிக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று நாம் கூறிவிடலாம். 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். இதில் 9,230 ரன்களை 46.85 என்ற சராசரியில் எடுத்துள்ளார். கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றியில் கோலி 100 ரன்கள் எடுத்தார். ஜூலை 2023-க்குப் பிறகு கோலி டெஸ்ட்டில் எடுத்த முதல் சதமாக அது அமைந்தது. 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் 254 ரன்கள் எடுத்ததுதான் அவரது கரியர் பெஸ்ட் ஸ்கோர்.…
‘கூலி’ மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினரின் புதிய முயற்சியால் இந்தியில் பெரியளவில் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய படங்களின் ஓடிடி உரிமை விற்கப்படும்போது 4 வாரத்தில் ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். அதே போல் சரியாக ஒரு மாத இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிடும். ஆனால், இந்தியில் அப்படியல்ல. ஓடிடியில் 8 வாரங்கள் கழித்து வெளியிட ஒப்பந்தம் போட்டிருந்தால் மட்டுமே மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட முடியும். இதனால் பல தென்னிந்திய படங்கள் சரியான வெளியீடு இல்லாமல் இந்தியில் தடுமாறி இருக்கின்றன. இந்த சிக்கல் இல்லாமல், இந்தியில் பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது ‘கூலி’ மற்றும் ‘தக் லைஃப்’ படக்குழுவினர். தங்களுடைய படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், இந்தியில் பிரம்மாண்டமாக வெளியாகும். முதல் நாள் வசூலும் பெரியளவில் இருக்கும் எனக்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிப்பிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தபடுகின்றன செயல்பாட்டு காரணங்களுக்காகவும், வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதி முழுவதும் உள்ள 32 விமான நிலையங்கள், அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளுக்காகவும் தற்காலிகமாக மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்புடைய விமான அதிகாரிகளும் விமானப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (இந்திய நேரப்படி மே 15, 2025 அன்று காலை 05 29 மணிவரை) அமலில் இருக்கும்.…
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என பல்வேறு பட்டப்படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம், சேர்க்கை அதிகளவில் இருந்தாலும், இசை சார்ந்த படிப்புகளை விரும்பிப் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்னும் உள்ளனர். இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் இசைப் படிப்புகளுக்கு என கல்லூரிகள் குறைவாக இருந்தாலும், இசைப் படிப்புகளை படிக்க ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இசை நம் கலாச்சாரத்தோடு ஒன்றியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய நான்கு இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கோவையில் செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டியில் இசைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் இயங்கி வருகிறது. கோவை இசைக்கல்லூரி கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து படிக்கின்றனர். இசைக் கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள்: கோவை…
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 10) இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்களின் உடனடி வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பேரணியல் கலந்துகொள்ளும் பொதுமக்களும், தங்களுக்குத் தேவையான குடிநீர் கொண்டுவருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர்புரிந்துவரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் கடற்கரைச் சாலையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, இன்று (மே 10) மாலை 5 மணிக்கு சென்னை கடற்கரை சாலையில் காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் படைவீரர்கள்,…
சண்டிகர்: இந்தியா – பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சண்டிகர் நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் தொகுதி சிவில் பாதுகாப்பு தன்னார்வளர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி தாகூர் அரங்கில் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் விரைவில், செக்டார் 17-ல் உள்ள திரங்கா பூங்காவில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த பயிற்சி அமர்வுக்கு சரியான நேரத்திலான உங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகும்.” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக இணைந்து, அவசரகால முன்தயாரிப்புகளுக்கு உதவும் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களாக பதிவுசெய்ய பெரும் அளவிலான இளைஞர்கள் இன்று சண்டிகரில் திரண்டனர். தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர்.…
பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்துக்கு ‘டூட்’ (DUDE) எனத் தலைப்பிடப்பட்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். இதனை சுதா கொங்காராவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கி வந்தார். இப்படத்தின் பூஜையுடன், முதல் காட்சி வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் படத்துக்கு ‘டூட்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் தீபாவளி வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக நிக்கத் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், ஒரே சமயத்தில் தமிழ்,…
