புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்தம் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைகளின் தளபதிகள், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை (மே 10) போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) போர் நிறுத்த ஒப்பந்தம் இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல். அதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான…
Author: admin
மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (மே 10) மாலை மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலர்கள் தூவி வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் நாளை (மே 11) அதிகாலை எதிர்சேவை நடைபெறும். அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான இன்று (மே 10) காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் எழுந்தருளினார். பின்னர் மாலையில் சுந்தரராஜபெருமாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் கோயிலிலிருந்து மாலை 5.20 மணியளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு கள்ளழகரை மலர்கள் தூவி வரவேற்று தரிசித்தனர். பின்பு கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள…
சென்னை: “போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னதாக, இந்திய ராணுவத்துக்கு ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய பேரணி, போர் நினைவுச் சின்னத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில், பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள், சர்வ மத பிரதிநிதிகள், அமைச்சர்கள், திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், என்சிசி, என்எஸ்எஸ்…
கான்பூர்: இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறித்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷுபம் துவிவேதியின் மனைவி ஐஷன்யா துவிவேதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்ட பாணிக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்தின் பாதுகாப்புப்படை மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் போராட்டம் தீவிரவாதத்துக்கு எதிரானது. தீவிரவாதத்தை ஒழிக்கவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. தீவிரவாதம் உள்ள வரை, ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கை தொடரும் என நம்புகிறேன்” என ஐஷன்யா துவிவேதி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தான் ஷுபம் – ஐஷன்யா மண வாழ்க்கையில் இணைந்தனர். போர் நிறுத்தம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை…
Last Updated : 10 May, 2025 07:52 PM Published : 10 May 2025 07:52 PM Last Updated : 10 May 2025 07:52 PM சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஃப்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஃப்’ வரிசையில் கேலக்சி எஃப்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன்…
கோவை: 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற, கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று (மே 10) நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவை கோட்டைமேடு பகுதியில், பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடப்பாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சங்கமேஸ்வர சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தினமும் மாலை யானை வாகனம், கைலாச வாகனம், மூஷிக ரிஷப வெள்ளி மயில் வாகனங்கள் என பல்வேறு வாகனங்களில் சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 10) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், பிற தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் அகிலாண்டேஸ்வரி உடனமர்…
சென்னை: “தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கவிப்பேரரசு திரு.வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனையடைந்தேன்.தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னதாக, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை (ஞாயிறு) மாலை நடைபெறும்” என்று பதிவிட்டிருந்தார்.
மதுரை: “மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்,” என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்த செல்லூர் ராஜூ கூறியது: “மதுரை விளாங்குடி பகுதியில் ஏற்கெனவே காவல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துதான் பொதுமக்களுக்கான நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தோம். திறந்து வைத்த 2 நாட்களில் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவில் கூடல்புதூர் காவல்துறையினர் நீர்-மோர் பந்தலை அகற்றினர். கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை எளிதாக விற்கலாம். ஆனால்., மக்களுக்கு நீர்-மோர் கொடுக்கக் கூடாது. இதுதான் காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கையா? நீர்மோர் பந்தல் அகற்றப்பட்டது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டதற்கு நீர்மோர்…
உயர் யூரிக் அமிலம், அல்லது ஹைப்பர்யூரிசீமியா, கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பொதுவானதாகிவிட்டது, இதில் இரத்தத்தில் யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. வழக்கமாக, இந்த நிலை ஆரம்பத்தில் பல அறிகுறிகளை ஏற்படுத்தாது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும், மேலும் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும். மரபணு இல்லாதவர்கள் அல்லது பாரம்பரிய இதய ஆபத்து காரணிகள் கூட தங்கள் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால் இதய பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உங்கள் யூரிக் அமிலத்தை வீழ்த்தி, அதைக் கட்டுக்குள் வைத்திருக்க 7 வழிகள் இங்கே …
புதுடெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார். இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “துப்பாக்கிச்…
