வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது போக்குகளைப் பின்பற்றுவது அல்ல -இது உடல் உண்மையிலேயே அந்த நாளைத் தொடங்க வேண்டியதை மீண்டும் இணைப்பது பற்றியது. இது ஒரு எளிய, அணுகக்கூடிய, மற்றும் மதிப்பிடப்பட்ட காலை சடங்கு, இது குடலை மட்டுமல்ல, தோல், ஹார்மோன்கள், கல்லீரல் மற்றும் நீண்டகால மனநிலையை வளர்க்கும்.
Author: admin
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 62-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், 28-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மரினா ஸ்டெபானொனியுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 10-12, 11-9, 6-11, 11-6, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஃபைரூஸ் அபோஎல்கையருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் அனஹத் சிங். ஃபைரூஸ் அபோஎல்கையர் தனது முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த ஹனா மோட்டாஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் இந்தியாவின் அபய் சிங், 25-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் நிக்கோலஸ் முல்லருடன் மோதினார். இதில் அபய் சிங் 11-7, 2-11, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி…
நம்மில் பலர் மற்றவர்களை விட அதிகமாக நோய்வாய்ப்பட்டிருக்கிறோம், ஆனால் விஷயத்தின் உண்மை என்னவென்றால், நீங்கள் எவ்வளவு அடிக்கடி நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு பங்கைக் கொண்டிருக்கும்போது, வயிறு அல்லது குளிர்ச்சியாக இருந்தாலும், நீங்கள் ஒரு பிழையை எவ்வளவு அடிக்கடி பிடிக்கிறீர்கள் என்பதை உங்கள் பழக்கவழக்கங்கள் தீர்மானிக்கின்றன என்பதும் உண்மை. இருப்பினும், உங்கள் கைகளை சரியான வழியில் கழுவுவது 80% வியாதிகளைத் தடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்போம் … ஹேண்ட்வாஷிங் ஏன் முக்கியம்எங்கள் கைகள் நாள் முழுவதும் பல மேற்பரப்புகளைத் தொட்டு, பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எடுக்கும். நம் கைகளை சுத்தம் செய்யாமல் நம் முகம், உணவு அல்லது பிற நபர்களைத் தொடும்போது, கிருமிகள் நம் உடலுக்குள் நுழைந்து நம்மை நோய்வாய்ப்படுத்தலாம். சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது இந்த கிருமிகளை அகற்றி, நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கிறது.சி.டி.சி மற்றும் WHO போன்ற சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நோயைத்…
மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் பஞ்சாப், டெல்லி கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் போட்டி ஒளிபரப்பு குழுவினர் உட்பட சுமார் 300 பேர் சிறப்பு வந்தே பாரத் மூலம் தரம்சாலாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்திய வீரர்கள் தங்களது நகரங்களுக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு…
பாகிஸ்தானுடனான போர் சூழலில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தேசிய கொடியேந்தி அணிவகுத்துச் சென்று, இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தினர். பாகிஸ்தானின் அத்துமீறல்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சென்னை, கடற்கரைச் சாலையில் ‘இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் பேரணி’ நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் பேரணிக்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. அதன்படி, 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள், பெண்களுக்கான ஒப்பனை அறை உட்பட 16 இடங்களில் கழிப்பறை வசதிகள், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, 10 இடங்களில் மருத்துவ முகாம், 15 ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு மெரினா சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும்…
மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 70 என தேசிய அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 39 ஆக குறைந்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது, கள பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மருத்துவம் சார்ந்த அணுகுமுறைகள், கொள்கை சீர்திருத்தங்கள், சமூக பங்களிப்பு குறித்த பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: நாட்டில் மகப்பேறு இறப்பை ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 70 என்ற அளவில் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு சுகாதார கண்காணிப்பு தகவல் அறிக்கையின்படி தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 39 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் (8.02 லட்சம்) மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.…
கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் நாட்டின் பாதுகாப்புக்கு அவர் முதலிடம் அளித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் முப்படைகளையும் சர்வதேச தரத்துக்கு அவர் நவீனப்படுத்தி உள்ளார்.அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்கினார். தற்போது பாகிஸ்தானுடனான சண்டையில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. இதேபோல இந்திய விமானப் படைக்காக பிரான்ஸிடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கினார். இந்த போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றன. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட ஏராளமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. 60-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் ஊக்கத்தால் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய போர்க்கருவிகளை கண்டுபிடித்திருக்கிறது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்குவது குறைந்து…
நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னத்தில் கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் இயக்கமாக இருந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி, இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வந்தாலும், வாக்கு சதவீதம் மட்டும் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. அதேநேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சியாகவும் இருந்து வந்தது. தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற வேண்டும். அல்லது 8…
இந்தியா – பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்ற போர்களில் எல்லாம் இறுதியில் பாகிஸ்தான் பணிந்ததே வரலாறாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினையின் போது இந்து மன்னர் ஹரி சிங் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையலாமா அல்லது இந்தியாவுடன் இணையலாமா என முடிவெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்தியா பக்கம் சென்றுவிடுவார் என பாகிஸ்தான் பயந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர். பழங்குடியின முஸ்லிம் படைகள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் காஷ்மீரின் சில பகுதிகளை கைப்பற்றினர். அதுவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர். இந்தியா – பாகிஸ்தானுடனான் முதல் போர் கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகள் இடையே காஷ்மீர் விவகாரம் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன்பின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரத்தில்…
மூலவர்: வெற்றி வேலாயுதன் அம்பாள்: வள்ளி, தெய்வானை தல வரலாறு: அகத்தியர், நாரதர், தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றனர். அகத்தியர் ஓரிடத்தில் நின்று, முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்ய நினைத்தார். ஆனால் பூஜைக்கு வேண்டிய நீர் கிடைக்கவில்லை. முருகப் பெருமானை வேண்டியதும், அவர் அகத்தியர் முன் தோன்றி, தன் வேலை தரையில் ஊன்றினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. முருகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன. ஊற்றுக் குழியில் இருந்து நீர் பெருகியதால், இப்பகுதி ‘ஊத்துக்குளி’ என்று அழைக்கப்படுகிறது. சிறப்பு அம்சம்: அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப் பெருமான் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய பெண்கள், அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாகவும் (தெய்வானை), நம்பிராஜனின் வளர்ப்பு மகளாகவும் (வள்ளி) அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால் இவர்களுக்கு தனி சந்நிதி தரப்பட்டுள்ளது. கோயில் அமைப்பு: குன்றின்…
