ஹைதராபாத்: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஜெகன் ஆட்சியில் திருமலையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேருக்கு ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இ-டெண்டர் மூலம் ஓட்டல்களை ஒதுக்கி உள்ளோம். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன நேரத்தை மாற்றி உள்ளோம். காலையில் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும். ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஏழுமலையானை 1 முதல் 2 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் தரிசனம், பிரசாத விற்பனை தொடர்பாக சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை…
Author: admin
சென்னை: 64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் தமிழரசு பந்தய தூரத்தை 10.22 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரரான ராகுல் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலெட்சுமி தங்கப் பதக்கமும், அபிநயா ராஜராஜன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது மம்மூட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் அவர் குணமடைந்துவிட்டதாகவும் படங்களில் மீண்டும் நடிக்கத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மோகன்லால், மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்துள்ளார். “டைகரை மீண்டும் வரவேற்கிறோம்” என்று மஞ்சு வாரியரும், “இந்தச் செய்தியைக் கேட்க நான் பிரார்த்தனை செய்தேன்” என்று…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நடத்திவரும் போராட்டம் நேற்றும் நடைபெற்றது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகைகளில் போராடுபவர்களை காவல் துறை கைதுசெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் போராட்டம் நீடித்தது. சென்னையில் தாம்பரம், வடபழனி உள்ளிட்ட 7 பணி மனைகளில் தொழிலாளர்களின் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு போக்குவரத்து சங்கத்தை சார்ந்த ஆறுமுகநயினார், தயானந்தம், துரை, பாலாஜி, சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது, “போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலனை தீபாவளிக்கு முன்பாக அளிக்க வலியுறுத்துகிறோம். அல்லது எப்போது வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையாவது அளிக்க வேண்டும். எங்களின் கோரிக்கையை நிறைவேறாவிட்டால் தீபாவளி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.
புதுடெல்லி: இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ), இந்தியா போஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி பயிற்சியைப் பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர். இதன்மூலம் அவர்கள் நாட்டிலுள்ள சிறிய நகரங்கள், கிராமப்புறப் பகுதிகளில் மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தில் மக்களைச் சேர்க்கும் பணிகளைச் செய்வர். இதுகுறித்து ஏஎம்எப்ஐ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கட் நாகேஸ்வர் சலசானி கூறும்போது, “ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து 4 மாநிலங்களைத் தேர்வு செய்து அதிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவர். அடுத்த ஆண்டில் அந்த மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் இருப்பர்’’ என்றார்.…
ஆசியா என்பது வேலைநிறுத்த முரண்பாடுகளின் கண்டம். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற உலகளாவிய பொருளாதார நிறுவனங்களின் தாயகமாக, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களைக் கொண்டிருக்கும், மறுபுறம் வறுமை, மோதல் மற்றும் கட்டமைப்பு சவால்களுடன் நாடுகளும் உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வைப் புரிந்து கொள்ள, பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) திரும்பப் பெறுகிறார்கள், இது வாங்கும் சக்தி சமநிலை (பிபிபி) மூலம் சரிசெய்யப்படுகிறது, இது நாடுகளில் வாழ்வின் செலவு வேறுபாடுகளுக்கு காரணமாகும். ஆயினும்கூட, புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இந்த நாடுகளில் பல பொருளாதார கஷ்டங்கள் இருந்தபோதிலும் சாகச பயணிகளை தொடர்ந்து ஈர்க்கும் நிலப்பரப்புகள், பணக்கார கலாச்சாரங்கள் மற்றும் நெகிழக்கூடிய சமூகங்கள் ஆகியவற்றின் இடங்களுக்கும் சொந்தமானவை.2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அவுட்லுக் தரவுத்தள கணிப்புகளின் படி, பல ஆசிய நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (பிபிபி) ஏணியின் அடிப்பகுதியில்…
புதுடெல்லி: குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். அங்கு குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் முதல்வரிடம் புகார் மனு அளிக்க வந்தார். அவரை காவலர்கள் சோனை செய்து அனுப்பினர். மனு அளிக்க முதல்வர் ரேகா குப்தாவை நெருங்கிய அவர் சிறிது நேரம் பேசினார். பின்னர் முதல்வரை திட்டிய அவர் திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். முதல்வரை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். அதற்குள் முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்திருந்ததாகவும், அதற்காக…
செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்த உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் நேற்று 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதிய ஆட்டம் 37-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் லேவோன் அரோனியன் – பிரேசிலின் சாமுவேல் சேவியன் மோதிய ஆட்டமும், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் – அமெரிக்காவின் வெஸ்லி சோ ஆகியோர் மோதிய ஆட்டமும், போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் – பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்டமும் டிராவில் முடிடைவடைந்தது. 2 சுற்றுகளின் முடிவில் லேவோன் அரோனியன், அலிரேசா ஃபிரோஸ்ஜா, பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முதல்…
நடிகர் அசோக் செல்வன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர், தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்எல், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை கருத்தியல் யுத்தமாக முன்னெடுக்க காங்கிரஸ், திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்வாக குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்கிய இடத்தில் வைத்திருப்பதாகவும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தேர்தலின்போது வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் இண்டியா கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு கிளம்பியது. திமுக எம்.பி. திருச்சி சிவா வேட்பாளர் போட்டியில் இருப்பதாக பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இண்டியா கூட்டணி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதாக இண்டியா கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: தொடக்கத்தில் இருந்தே இண்டியா கூட்டணித் தலைவர்களுக்குள் சுமூகமான நிலை இல்லை. திமுக கூட்டணி சார்பில் சார்பில்…