புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி,…
Author: admin
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா 6ஜிபி…
சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பொறியியல் பிரிவில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், இசிஇ, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல், டிப்ளமா மற்றும் இளநிலை பட்டம் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் (https://nats.education.gov.in) ஏப்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 35-வது ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. இதைத் தொடர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம், ஐபிஎல் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.07 ) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, உலகையே உலுக்கி வரும் அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்புகளை குறைக்குமாறு நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலஸ்தீனம், ஹமாஸ், ஈரான் உடனான பதற்றமான சூழல் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பேசிய நெதன்யாகு, “மீண்டும் ஒருமுறை என்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததற்காக அதிபருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு இன்றியமையாத நண்பர். அவர் எங்களது சிறந்த ஆதரவாளர். அவர் சொல்வதைச் செய்கிறார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை நாங்கள் நீக்குவோம். அதை மிக விரைவாகச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதுவே சரியான செயல் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் வர்த்தகத் தடைகளையும் நாங்கள் அகற்ற இருக்கிறோம். இஸ்ரேல் பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்பட முடியும் என்று நான்…
மூலவர் / உற்சவர் : பாலசுப்ரமணிய சுவாமி. அம்பாள் : வள்ளி, தெய்வயானை. தல வரலாறு: சோழ பேரரசன் முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் ஒருகோமாதா புல்லை மேயும் போது அருவுருவாகிய பிம்பத்தில் பால் சொரிந்தது. அதை மாடு மேய்க்கும் சிறுவன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். அன்றே அச்சிறுவன் முருகப் பெருமான் ரூபத்தில் முசுகுந்த சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். முருகப் பெருமானின் தரிசனத்தால் பேரானந்தம் அடைந்த அரசன் ஸ்ரீ பால முருகனுக்காக இத்தலத்தை அமைத்தார் என்பது புராண வரலாறு. ஸ்கந்த புராண காலத்தில் தேவேந்திரன் அசுரர்களுக்கு பயந்து அக்ஞாத வாசம் செய்தபோது தன் நித்ய ஆத்மார்த்த பூஜைகளுக்கு வேண்டி இந்த ஊரில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்தார். புஷ்பவனம் அமைத்தபோது, ஈசன் மழையை வரவழைத்து அருள்பாலித்தார். அதனால் இங்குள்ள ஈஸ்வரன் தேவேந்திரேஸ்வரர் என்றும், அம்மன் தேனாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். கோயில் சிறப்பு: இந்திரன்…
பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி, தங்கர்பச்சான் என பலர் நடித்துள்ள படம் ‘யங் மங் சங்’. ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. “17-ம் நூற்றாண்டில் தொடங்கி, 1980-ல் நடப்பது போல இதன் கதை அமைக்கப் பட்டுள் ளது. இந்தியாவில் இருந்து சீனா செல்லும் மூன்று இளைஞர்கள், அங்கு பிரபலமான குங்ஃபூ கலையை கற்கிறார்கள். பிறகு ‘யங் மங் சங்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டுக்குத் திரும்புகிறார்கள். அதை வைத்து இங்கு என்னென்ன செய்கிறார்கள் என்பது திரைக்கதை” என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் கோடையில் வெளியாக இருக்கிறது
காஷ்மீரில் நடந்ததுபோல தமிழகத்தில் நிச்சயம் நடக்கவே நடக்காது. எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் கோவை, திருப்பூரில் வங்கதேசத்தினர் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அங்கு தேசவிரோத குற்றங்கள் நடக்காமல் இருக்க, அந்த மாவட்டங்களை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காஷ்மீரில் நடந்ததுபோல, தமிழகத்தில் நடந்துவிட கூடாது’’ என்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: ஆடிட்டர் ரமேஷ் கொலை, அதிமுக ஆட்சியின்போது நடந்தது. நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. காஷ்மீரில் நடந்ததுபோல தமிழகத்தில் நிச்சயம் நடக்கவே நடக்காது. காஷ்மீரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, மத்திய அரசின்…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது. கடந்த 2023-ம் ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இன்று (ஏப்.18) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,560-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிரா ரூ.110-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக,…
உண்மையான முடி வீழ்ச்சி, மெலிந்த திட்டுகள் மற்றும் மந்தமான, உயிரற்ற மேனே ஆகியவை ஒரு கட்டத்தில் நம்மில் பெரும்பாலோர் போராடிய பிரச்சினைகள். இது மன அழுத்தம், மாசுபாடு, மோசமான உணவு அல்லது மோசமான முடி கர்மா என்றாலும், நமது பூட்டுகள் பெரும்பாலும் வெற்றியைப் பெறுகின்றன. ஆனால் இன்னும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு நேரம் சோதிக்கப்பட்ட, பாட்டி அங்கீகரிக்கப்பட்ட, தோல் மருத்துவர்-நோட் செய்யப்பட்ட தீர்வு இன்னும் மேஜிக் போல வேலை செய்கிறது, இது முடி எண்ணெய்.எந்தவொரு எண்ணெயும் மட்டுமல்லாமல், வளர்ச்சியை அதிகரிக்கும், உச்சந்தலையில் அன்பான, நுண்ணறை-உணவளிக்கும் முடி எண்ணெய்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அவை உங்கள் தலையில் மூலிகை வாசனை வீசாது, ஆனால் உண்மையில் ஏதாவது செய்யுங்கள். முடி வளர்ச்சியை உண்மையிலேயே ஊக்குவிக்கும் மற்றும் உங்கள் இழைகளை வலுவாகவும், பளபளப்பாகவும், மகிழ்ச்சியாகவும் விட்டுச்செல்லும் 5 சிறந்த முடி எண்ணெய்களில் ஒரு குறைவு இங்கே.TOI வாழ்க்கை முறை மேசை மூலம்
