Author: admin

அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் தாய்மார்களை போற்றுவோம் என வாழ்த்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து வலிமை, இரக்கம் மற்றும் குணங்களைச் செதுக்கும் அமைதிச் சிற்பிகளான அனைத்து தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் தன்னலமற்ற அன்பின் மூலம் தலைமுறைகளை வரையறுத்து, வாழ்வின் திருப்புமுனைகளில் நம்மை வழிநடத்தும் அன்னையர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். முதல்வர் ஸ்டாலின்: மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் அன்னையரின் மகத்துவத்தை போற்றி, உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை…

Read More

ஜம்மு: ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வ எல்லையில் 2,000 கி.மீ தூரத்துக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர். ஜம்முவின் ஆர்.எஸ் புரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை சப் – இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாக். படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் முகமது இம்தியாஸ் வீர மரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் மேலும் 7 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஜம்மு எல்லை பாதுகாப்பு படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள…

Read More

சென்னை: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 12) முடிவடைகிறது. நம் நாட்டில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் என 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025 ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு ஜூன் 21 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 12) முடிவடைகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப…

Read More

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போப் ஆக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் தோன்றி உரையாற்றினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுபோல ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர்…

Read More

மதுரை: ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (மே.12) அதிகாலை 6 மணி அளவில் மதுரை – ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வின்போது லட்சோப லட்சம் மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர். மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் தோளுக்​கினி​யானில் எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாளான நேற்று முன்​தினம் காலை​யில் தோளுக்கினியானில் சுந்​தர​ராஜபெரு​மாள்திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார். பின்​னர் கண்​டாங்கி பட்டு உடுத்​தி,நெற்​றிப்​பட்​டை, கரங்​களில்வளைத்​தடி, நேரிக்​கம்பு பரி​வாரங்​களடன் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க கள்​ளழகர் திருக்​கோலத்​தில் தங்​கப்பல்​லக்​கில் மதுரைக்​குப் புறப்​பட்​டார் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை சித்திரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். காலை 7.25 மணி​யள​வில் வையாளி​யாகி வீர​ராகவப் பெரு​மாளுக்கு மாலை…

Read More

கடலூர் / மேட்​டூர்: நெய்​வேலி அனல் மின் நிலை​யத்​தில் நேற்று டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் சேதமடைந்​தன. கடலூர் மாவட்​டம் நெய்​வேலி​யில் உள்ள என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் 2-ம் அனல் மின் நிலைய விரி​வாக்​கத்​தில் நேற்று அதி​காலை டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்​கள் 4 வாக​னங்​களில் சென்று தீயை அணைத்​தனர். விபத்​தின்​போது என்​எல்சி அதி​காரி​கள், ஊழியர்​கள், ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் யாரும் அங்கு பணி​யில் இல்​லாத​தால், அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது. அதிக வெப்​பம் காரண​மாக டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து விபத்து நேரிட்​டிருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது. இந்த விபத்​தில் காப்​பர் வயர் உட்பட ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் எரிந்து சேத​மாகி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. மேட்​டூர் அனல் மின் நிலை​யத்​தில் பைப் லைன் உடைந்து கால்​வாய் வழி​யாக டீசல் வெளி​யேறு​வதை தடுக்க உலர் சாம்​பல் கொட்​டப்​பட்டது. டீசல் பைப் லைன் உடைப்பு: மேட்​டூர் அனல் மின்…

Read More

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நேற்று பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயந்தார். அதன்படி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பிறப்கல் 1.19 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு நேற்று நடைபெற்ற மகா தீபாராதனை.படம்: ஆர்.வெங்கடேஷ் குரு பெயர்ச்சியையொட்டி, மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக கோயிலில் வரும் 15-ம் தேதி…

Read More

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது எல்லை கருப்பராயன் கோயில். இக்கோயில் வளாகத்தில் 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில், 18 சித்தர்களையும் செதுக்கிய சித்தக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இக்கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். மேலும், திரைப்பட நடிகை மீனா, நடன இயக்குநர் கலா உட்பட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத தேசம் பாதுகாப்பாக இருக்கவும், மக்கள் வாழ்வு சிறக்கவும் மற்றும் உலக நாடுகளின் நலனுக்காகவும் இவ்விழா நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Read More

உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது லக்னோ, கான்பூர், அலிகர், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய 6 முக்கிய முனைகளைக் கொண்டுள்ளது. லக்னோவில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படும். மேலும் அங்கு இலகுவான, அடுத்த தலைமுறை ஏவுகணைகளும் தயாரிக்கப்படும். இது, நாட்டின் தரை, வான் மற்றும் கடல் வழியாக சென்று துல்லிய தாக்குதல் திறன்களை அதிகரிக்கும். பிரம்மோஸ் என்பது தரை, கடல் மற்றும் வான் பரப்பிலிருந்து…

Read More

ஷாங்காய்: உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டியில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ரீகர்வ் பிரிவு சுற்றில் தென் கொரிய வீராங்கனையும், 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான லிம் சிஹியோனும், இந்தியாவின் தீபிகா குமாரியும் மோதினர். இதில் லிம் 7-1 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வென்றார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா குமாரியும், தென் கொரியாவின் காங் சே யங்கும் மோதினர். இதில் தீபிகா 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பார்த் சாலுங்கே அரை இறுதியில் 1-7 என்ற கணக்கில் கொரிய வீரர் கிம் வூஜின்னிடம் தோல்வி கண்டார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் சாலுங்கே 6-4 என்ற கணக்கில் பிரான்ஸின் பாப்டிஸ்ட்…

Read More